தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல் ; கட்டுரை ; சொற்றொகுதி ; பேச்சுமுறை ; வாக்குமூலம் ; பொருள் ; மணிக்கட்டு , முழங்கால் , கணுக்கால் முதலியவற்றின் பொருத்து ; மரக்கணு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாஷை. மொழி பெயர் தேஎத்த ராயினும் (குறுந். 11). 3. Language, speech;
  • கட்டுரை. பழமொழி. 2. Saying, maxim;
  • சொல். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ 481). 1. Word;
  • வாக்குமூலம். Nā. 4. (Legal.) Deposition;
  • மரமுதலியவற்றின் கணு. மொழியு மினியீர் . . . மதுரக் கழைகாள் (அழகர்கல. 67). 2. Joint where a twig branches off from the stem;
  • பொருள். இனமொழி (தொல். பொ. 480). 5. Meaning, sense;
  • மணிக்கட்டு முழங்கால் கணைக்கால் முதலியவற்றின் பொருத்து. 1. Joint, as of wrist, knee, ankle, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a word, a saying, சொல்; 2. speech, expression, வாக்கியம்; 3. an oracle. மொழிபெயர்ப்பு, translation. பழமொழி, a proverb. மறுமொழி, an answer. மொழிமை, an old word. மொழியோசை, pronunciation.
  • II. v. t. say, speak, சொல்லு. மொழிதல், v. n. speaking.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • baaSe பாஷெ language; word, saying, expression

வின்சுலோ
  • [moẕi] ''s.'' A word, a saying, சொல். 2. Speech, declaration, expression, வாக்கியம். தேவர்மொழி, An oracle, சானுக்கிரகம்.
  • 3. Three sorts of speech: 1. மெய்கூறல், speaking the truth; 2. புகழ்கூ றல், panegyrising, or flattering; 3. பழி கூறல், Calumniating or abusing.
  • [moẕi] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To say, to speak, சொல்ல. ''(p.)'' மொழிவதறமொழி. Say what thou sayest rightly. மொழிவதுமறுக்கினழிவதுகருமம். If the words of the ancients be forgotten, the business will not succeed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மொழி-. 1. Word;சொல். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல்.பொ. 481). 2. Saying, maxim; கட்டுரை. பழமொழி. 3. Language, speech; பாஷை. மொழிபெயர் தேஎத்த ராயினும் (குறுந். 11). 4. (Legal.)Deposition; வாக்குமூலம். Nāñ. 5. Meaning,sense; பொருள். இனமொழி (தொல். பொ. 480).
  • n. cf. விழி. [K. moṇa.] 1.Joint, as of wrist, knee, ankle, etc.; மணிக்கட்டுமுழங்கால் கணைக்கால் முதலியவற்றின் பொருத்து. 2.Joint where a twig branches off from the stem;மரமுதலியவற்றின் கணு. மொழியு மினியீர் . . . மதுரக் கழைகாள் (அழகர்கல. 67).