உதவிப் பக்கம்

பயன்படுத்தும் முறை
1000 தமிழ்ச் சொற்கள் வரை ஒரே பக்கத்தில் திருத்திக் கொள்ளமுடியும்.
"தானி" (auto correction) என்ற தேர்வுப் பொத்தான் மூலம் இக்கருவி தானாகப் பிழைகளைத் திருத்த வேண்டுமா அல்லது சுட்டிக் காட்டினால் போதுமா என்று கட்டுப்படுத்தலாம்.
"திருத்து" (spellcheck) என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் திருத்த ஆரம்பிக்கலாம்.
"தவிர்" (clear format) என்ற பொத்தான் மூலம் அடையாள வடிவங்களை நீக்கிக்கொள்ளலாம். "அழி" (clear content) என்ற பொத்தான் முழுவதையும் அழித்து, புதிய பயன்பாட்டிற்குத் தயார்ப்படுத்தும்.

ஒரு சொல் கருவியின் சொற்பட்டியலில் இல்லை (பிழையான சொல்லாகவும் இருக்கலாம்.) என்றால் மூன்று வித வடிவங்களில் சொற்களைச் சுட்டிக்காட்டும்.
அடிக்கோடு என்றால் அதற்கான பரிந்துரைகள் ஏதுமில்லை என்று பொருள்.
சிவப்பெழுத்து என்றால் இணையான பல பரிந்துரைகள் உள்ளன என்று பொருள்
பச்சையெழுத்து என்றால் தானாகத் திருத்தப்பட்ட சொல் என்று பொருள். சுயதிருத்தம் தேர்வு செய்தால் மட்டுமே இது நிகழும்.
அத்தகைய சொற்களுக்கு மேல் சுட்டியைக் கொண்டுவந்தால் புதிய படிவம் ஒன்று காட்டப்படும். அதில் உள்ள பரிந்துரைகளைத் தேர்வு செய்யலாம். அல்லது அச்சொல் சரியென்றால் பயனர் கொடுத்த சொல்லைத் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்துப்பெட்டியில் பயனர் விரும்பும் புதுச் சொல்லை எழுதி மாற்றிக்கொள்ளலாம். "மாற்று" என்பது ஒருசொல்லை மாற்றும், "மாற்று(எ)" என்பது எல்லாச் சொற்களையும் மாற்றும். மேற்கண்ட வடிவச் சொற்களை மாற்றியோ, பரிந்துரையைத் தேர்வு செய்தோ உங்கள் படைப்புகளில் பிழை நீக்கிக் கொள்ளலாம்.

இதன் சிறப்பம்சம்
எளிதாகப் பயன்படுத்தக்கூடிய WYSIWYG வடிவ இடைமுகமும், கையடக்கக் கருவி ஒத்திசைவும் கொண்டு வெளிவந்துள்ளது. WYSIWYG வடிமில்லாத பழைய இடைமுகத்தைப் பயன்படுத்த இப்பக்கம் செல்லவும்
தற்கால தமிழ்நடைக்கு ஏற்ப பெருந்தரவு கொண்டு பிழைகளை நீக்கி, பரிந்துரைகளை வழங்கும். புழக்கத்திலுள்ள தனிப் பெயர்ச்சொல்(ஊர்ப் பெயர், நபர்) பலவற்றை இத்திருத்தி புரிந்து கொள்ளும்.
வேற்றுமை உருபு மற்றும் இலக்கணம் கொண்டு 70% சந்திப்பிழைகளையும் அறிந்து இது பரிந்துரைக்கும்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்கும்.
இத்தளத்தில் உள்ள அகராதியில் பல அகராதிகளின் விளக்கங்களைக் காணலாம். உருபுடன் உள்ள சொற்களையும் இது புரிந்துகொள்ளும்.


உறுப்பினர் பதிவு
உறுப்பினராகப் பதிவு செய்பவர்களுக்குக் கூடுதல் வசதியுடன் திருத்தியின் இடைமுகம் இருக்கும்.


பங்களிப்பாளர்கள்
நீச்சல்காரன் - உருவாக்குநர், நிர்வாகி
சே. கார்த்திகா (பெங்களூரு) - சொல்வங்கி சேகரிப்பாளர்
செங்கைப் பொதுவன் - இலக்கண ஆலோசகர்
வலைத்தமிழ் டாட் காம் - கட்டமைப்புப் புரவலர்


இந்தத் திருத்தியை மேம்படுத்த எவ்வாறு உதவலாம்?
இந்தத் திருத்தி பயனுள்ளதென்றால் மற்றவருக்கு அறிமுகம் செய்யுங்கள்;
விரும்பினால் இங்கே சொல் பரிந்துரைகளைக் கொடுக்கலாம். திருத்தி தொடர்பான ஆலோசனைகள், விரும்பும் வசதிகள் குறித்து மின்னஞ்சல் செய்யலாம்;
தொடர்ந்து மேம்படுத்தவும், ஆய்வுகள் செய்யவும் பொருளாதார உதவி செய்யலாம்


இணையத் தளத்தில் ஒரு இணைப்பு தர:
நேரடியாக பிளாக்கர் தளத்தில் இணைக்க