தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெப்பமுடையது ; வெப்பம் ; துயரம் ; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம். 3. Fomentation;
  • வெப்பம். (மதுரைக். 403, உரை.) 2. Heat;
  • விரைவில். வேந்தன் வெருவந்து வெய்துகெடும் (குறள், 569). Speedily, hastily;
  • வெப்பமுள்ளது. சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி (அகநா. 203). 1. That which is hot;
  • துக்கம். வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35, 3). -adv. 4. Sorrow, distress;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is hot, சூடுள்ளது. வெய்து பிடிக்க, to cause perspiration, வேதுபிடிக்க. வெய்துயிர்க்க, to breathe forth fury, to utter sighs in anger or grief, மூச்செறிய. வெய்துறல், a sign for expressing anger; 2. a sign of anger; 3. affliction, துன்பம். வெய்தெனல், an indication of heat.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < வெம்-மை. n. 1. Thatwhich is hot; வெப்பமுள்ளது. சிறுநெறி வெய்திடையுறாஅ தெய்தி (அகநா. 203). 2. Heat; வெப்பம்.(மதுரைக். 403, உரை.) 3. Fomentation; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம். 4. Sorrow, distress; துக்கம். வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35,3).--adv. Speedily, hastily; விரைவில். வேந்தன்வெருவந்து வெய்துகெடும் (குறள், 569).