தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழில் ; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை ; வினைச்சொல் ; செய்தற்குரியது ; பரிகாரச்செயல் ; முயற்சி ; போர் ; வஞ்சகம் ; தந்திரம் ; கருத்து ; தொந்தரவு ; சீழ் ; இரண்டைக் குறிக்கும் குழூஉக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயற்சி. வினைக்கண் வினையுடையான் கேண்மை (குறள், 519). 9. Effort;
  • போர். செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் (புறநா. 6). 10. War;
  • வஞ்சகம். வினைகளிந்தனர் நண்புகொண் டொழுகினர் (உபதேசகா. பஞ்சாக். 33). 11. Deceitfulness, guile;
  • தந்திரம். வினையி னென்வயின் வைத்தனன் (கம்பரா. அயோத். மந்திரப். 69). 12. Art; cunning;
  • கருத்து. (யாழ். அக.) 13. Thought, design;
  • தொந்தரவு. அது அதிக வினை செய்யும் போலிருக்கிறது. (W.) 14. Trouble;
  • சீழ். இந்தப்புண்ணில் இன்னும் வினை யிருக்கின்றது. 15. Pus;
  • இரண்டைக்குறிக்கும் குழூஉக்குறி. (தைலவ. தைல.) 16. A cant term signifying two;
  • தொழில். செய்திரங்கா வினை (புறநா. 10). 1. Act, action, deed, work;
  • நல்வினை தீவினை என இருவகைப்பட்ட பூர்வகருமம். இருள்சே ரிருவினையுஞ் சேரா (குறள், 5). 2. Karma, as the accumulated result of deeds done in former births, of two kinds, viz., nalviṉai, tī-viṉai;
  • வேதநீயம் ஆயுஷ்யம் நாமம் கோத்திரம் என்ற நான்கு கருமங்கள். (சீவக. 3114, உரை.) 3. (Jaina.) The four results of karma, viz., vētanīyam, āyuṣyam, nāmam, kōttiram;
  • வினைச்சொல். (தொல். சொல். 198.) 4. (Gram.) Verb;
  • செய்தற்குரியது. அவனை வேறல் வினையன்றால் (கம்பரா. சூளா. 2). 5. Thing to be done;
  • பரிகாரச் செயல். வினையுண்டேயிதனுக் கென்பார் (கம்பரா. நாகபாச. 194). 6. Remedial measure;
  • மேற்கொண்ட செயல். வினைவகையென்றிரண்டி ª¢னச்சம் (குறள், 674). 7. Work on hand;
  • தீச்செயல். தாய்வினை செய்யவன்றோ கொன்றனன் றவத்தின் மிக்கோன் (கம்பரா. கும்பகர்ண. 143). 8. Evil deed;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. act, action, deed, work, தொழில்; 2. thought, temper (good or bad) கருத்து; 3. malignity, evil, misfortune, malice, தீவினை; 4. a verb, வினைச்சொல்; 5. war, போர். தன்வினை தன்னைச்சுடும், his own knavery will betray him. வினைக்குணம், spitefulness, sulkiness. வினைசூழ, to plot evil. வினைசெய்வோர், servants; 2. doers of evil deeds. வினைஞர், artificers, கம்மாளர்; 2. ploughmen; 3. dancers, கூத்தர்; 4. Sudras, சூத்திரர். வினைத்திட்பம், -வலி, boldness in action. வினைத்தூய்மை, a pure action. வினைப்பயன், வினைப்போகம், வினைவழி, fruit of moral actions. வினை முதல், (in gram.) subject. வினை முற்று, a finite verb. வினை யனுபவிக்க, to suffer for the sins of former birth. வினையன், வினையுள்ளவன், a malicious, deceitful man. வினையாலணையும் பெயர், an appellative noun. வினையிலே வெந்து போக, to perish by one's own fraud or malice. வினையெச்சம், see எச்சம். வினைவழி, according to fate. வினைவிநாசன், God as destroyer of sin. சாவினை, unfortunate death. செயப்படு பொருள் குன்றாவினை, a transitive verb. செயப்படுபொருள், குன்றிய வினை, an intransitive verb. தன் வினை, பிறவினை, see under தன்& பிற. நல்வினை, a good temper, a good deed. தீவினை, an evil deed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Act, action, deed, work;தொழில். செய்திரங்கா வினை (புறநா. 10). 2.Karma, as the accumulated result of deedsdone in former births, of two kinds, viz.nal-viṉai, tī-viṉai; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட பூர்வகருமம். இருள்சே ரிருவினையுஞ் சேரா(குறள், 5). 3. (Jaina.) The four results ofkarma, viz.vētanīyam, āyuṣyam, nāmam,kōttiram; வேதநீயம் ஆயுஷ்யம் நாமம் கோத்திரம்என்ற நான்கு கருமங்கள். (சீவக. 3114, உரை.) 4.(Gram.) Verb; வினைச்சொல். (தொல். சொல். 198.)5. Thing to be done; செய்தற்குரியது. அவனைவேறல் வினையன்றால் (கம்பரா. சூளா. 2). 6. Remedial measure; பரிகாரச் செயல். வினையுண்டேயிதனுக் கென்பார் (கம்பரா. நாகபாச. 194). 7.Work on hand; மேற்கொண்ட செயல். வினைவகையென்றிரண்டி னெச்சம் (குறள், 674). 8. Evildeed; தீச்செயல். தாய்வினை செய்யவன்றோ கொன்றனன் றவத்தின் மிக்கோன் (கம்பரா. கும்பகர்ண.143). 9. Effort; முயற்சி. வினைக்கண் வினையுடையான் கேண்மை (குறள், 519). 10. War; போர்.செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் (புறநா. 6). 11.Deceitfulness, guile; வஞ்சகம். வினைகளைந்தனர்நண்புகொண் டொழுகினர் (உபதேசகா. பஞ்சாக். 33).12. Art; cunning; தந்திரம். வினையி னென்வயின்வைத்தனன் (கம்பரா. அயோத். மந்திரப். 69). 13.Thought, design; கருத்து. (யாழ். அக.) 14.Trouble; தொந்தரவு. அது அதிக வினை செய்யும்போலிருக்கிறது. (W.) 15. Pus; சீழ். இந்தப்புண்ணில் இன்னும் வினை யிருக்கின்றது. 16. A cantterm signifying two; இரண்டைக் குறிக்கும் குழூஉக்குறி. (தைலவ. தைல.)