தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேன்மை , சிறப்பு ; அடைமொழி ; ஒரு பொருளை மேம்படக் கூறும் அணிவகை ; சொற்பொருள் தருதல் ; சிறப்பாக நடைபெறும் விருந்துச் சடங்கு முதலியன ; மிகுதி ; வகை ; சிறப்பியல் ; முக்கியமான செய்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறப்பாக நடைபெறும் விருந்து சடங்கு முதலியன. இன்றைக்கு வீட்டில் விசேடம். 7. Special feast or ceremony;
  • அடைமொழி. நீலகுண விசேடமொ டுற்பல விசேடியந்தான் (வேதா. சூ. 104). 2. Attributive word which limits or qualifies the sense of another word;
  • சிறப்பு. மெய்பெறு விசேடம் வியந்தன னிருப்ப (பெருங். மகத. 14, 102). 1. Excellence; superiority; importance;
  • காரியசித்திக்கு வேண்டுவனவாகிய குணம் தொழில் முதலியன குறைவுபடுதல் காரணமாக ஒரு பொருளை மேம்பாடு தோன்றக் கூறும் அணிவகை. (தண்டி. 77.) 4. (Rhet.) A figure of speech in which the excellence of a thing is emphasised by describing it as lacking even in requisites or necessary attributes;
  • பதவுரையைச் சிறப்பாகவன்றி வேண்டுவன தந்துரைக்கும் உரைவகை. வினாவிடை விசேடம் (நன். 21). 5. Explanatory note;
  • முக்கியமான செய்தி. நந்தம் பந்தியுள் விசேடங் கேண்மோ (திருவாலவா. 29, 4). 11. Important item of news;
  • சிறப்பியல். (யாழ். அக.) 10. Distinguishing feature, speciality, differentiation;
  • வகை. விருட்ச விசேடம். 9. Species of a particular genus;
  • மிகுதி. வெள்ளம் விசேடமாக வருகிறது. 8. Abundance;
  • பதார்த்தம் ஏழனுள் நித்தியப்பொருள் ஒவ்வென்றுக்கும் உரிய குணம். 3. (Log.) Characteristic attribute, the eternal distinguishing nature of each of the dravyas, one of seven patārttam, q.v.;
  • . 6. (šaiva.) See விசேடதீட்சை. சமய விசேடம் பரித்து (சைவச. மாணாக். 25).