தமிழ் - தமிழ் அகரமுதலி
    விசிறியால் காற்றெழுப்புதல் ; வாள் முதலியவற்றை வீசுதல் ; வலை முதலியவற்றை விரித்தெறிதல் ; சுழற்றுதல் ; சொரிதல் ; வெளித்தள்ளுதல் ; போக்குதல் ; கை முதலியன வீசுதல் ; விசிறியால் காற்றடிக்கச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போக்குதல். பிறவியுமற விசிறுவர் (தேவா. 618, 4). 7. To remove;
  • சொரிதல். இந்து வனலை மொண்டு விசிற (தனிப்பா. ii, 53, 130). 5. To pour forth; to sprinkle;
  • சுழற்றுதல். விளங்கனிக் கிளங்கன்று விசிறி (திவ். பெரியதி. 9, 8, 6). 4. To whirl round;
  • வாள் முதலியவற்றை வீசுதல். நாந்தகம் விசிறு நம்புருடோத்தமன் (திவ். பெரியாழ். 4, 7, 4). 2. To wave to and fro, brandish;
  • விசிறியாற் காற்றடிக்கச் செய்தல். To fan;
  • உயிர்மெய்களுள் இகர ஈகாரங்களின் குறியாக மேல்வளைவுக்கோடிடுதல். Loc. -intr. 9. To append the symbols of i and ī to the consonants;
  • கை முதலியன வீசுதல். வேயன தோள்விசிறி (திவ். பெரியதி. 3, 7, 5). 8. To swing, as the arms in walking;
  • விசிறியாற் காற்றெழுப்புதல். 1. To fan;
  • வெளித் தள்ளுதல். கிடாரி கருவை விசிறிவிட்டது. Loc. 6. To eject, discharge;
  • வலை முதலியவற்றை விரித்தெறிதல். அலைகடல்வாய் மீன்விசிறும் (திருவாச. 8, 2). 3. To fling, hurl, cast, as a net;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விசுக்கல், வீசுதல.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. visaru, K.bisuḍu, M. visaruga.] tr. 1. To fan; விசிறியாற்காற்றெழுப்புதல். 2. To wave to and fro, brandish; வாள் முதலியவற்றை வீசுதல். நாந்தகம் விசிறுநம்புருடோத்தமன் (திவ். பெரியாழ். 4, 7, 4). 3. Tofling, hurl, cast, as a net; வலை முதலியவற்றைவிரித்தெறிதல். அலைகடல்வாய் மீன்விசிறும் (திருவாச. 8, 2). 4. To whirl round; சுழற்றுதல்.விளங்கனிக் கிளங்கன்று விசிறி (திவ். பெரியதி. 9, 8, 6).5. To pour forth; to sprinkle; சொரிதல். இந்துவனலை மொண்டு விசிற (தனிப்பா. ii, 53, 130). 6.To eject, discharge; வெளித் தள்ளுதல். கிடாரிகருவை விசிறிவிட்டது. Loc. 7. To remove; போக்குதல். பிறவியுமற விசிறுவர் (தேவா. 618, 4). 8. Toswing, as the arms in walking; கை முதலியனவீசுதல். வேயன தோள்விசிறி (திவ். பெரியதி. 3, 7,5). 9. To append the symbols of i and ī to the consonants; உயிர்மெய்களுள் இகர ஈகாரங் களின் குறியாக மேல்வளைவுக்கோடிடுதல். Loc.--intr. To fan; விசிறியாற் காற்றடிக்கச் செய்தல்.