- ஒழுங்குபடுதல். மணல்வார் புறவில் (மலைபடு. 48). 6. To be in order; to be arranged in order;
- உயர்தல். (பிங்.) 5. To rise high;
- நேராதல். வார்ந்திலங்கு வையெயிற்று (குறுந். 14). 4. To be upright;
- நெடுமையாதல். வார்மயி ருளரினள் (அக நா. 102). 3. To be long;
- வெளிவிடுதல். நெடுநீர் வார்குழை (நெடுகல். 139). 2. To Spread, overflow;
- ஒழுகுதல். நெய்வார்ந்தனைய திண்கோல் (சீவக.1697). 1. To flow, trickle;
- நென்மணி முதலியன பால்கட்டுதல். ஐவன வெண்ணெல் பால்வார்பு கெழீஇ (மலைபடு. 114). 7. To form milk, as grain;
- தெரிதல். (சது.) 2. To know;
- மயிர் கோதுதல். வாருறு வணரைம்பால் (கலித். 58). 1. To comb, as hair;
- உரிதல். பீலி வார்ந்து (அகநா. 69).--tr. 8. To peel off;
- யாழிற் சுட்டு விரலாற் செய்யுந் தொழில். வார்தல் வடித்திடன் முதலா மெட்டிசைக்கரணமும் பயப்ப (திருவிளை. இசைவாது. 37). (சிலப். 7, பக். 204, உரை.) Action of the index finger in playing a lute;
|