வாருதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அள்ளுதல் ; கொள்ளுதல் ; தொகுத்தல் ; மிகுதியாகக் கொண்டுசெல்லுதல் ; கவர்தல் ; திருடுதல் ; தோண்டியெடுத்தல் ; கொழித்தல் ; மயிர்சீவுதல் ; அரித்தல் ; யாழ் நரம்பைத் தடவுதல் ; ஓலையை எழுதுதற்குரிய இதழாகச் செம்மைசெய்தல் ; பூசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொகுத்தல். கைவளம் வாரினை கொண்டு வரற்கு (பு.வெ, 9, 29). 3. To gather;
  • பூசுதல். (நெடுநல். 110, உரை.) 13. To plaster, smear;
  • ஒலையை எழுதுதற்குரிய இதழாகச் செம்மை செய்தல். 12. To trim, as a palmyra leaf to write on;
  • யாழ்நரம்பைத் தடவுதல். வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23). 11. To play upon, as the strings of a lute;
  • மயிர் முதலியன சீவுதல். கோதி வாரி முடித்த பாரிய கொண்டை (அரிச். பு. இந்திர. 16). 10. To comb, as the hair;
  • அரித்தல். வாராதட்ட வாடூன் புழுக்கல் (பெரும் பாண். 100). 9. To sift, as with a sieve or by immersing in water;
  • அள்ளுதல். உறியொடு வாரி யுண்டு (கம்பரா. ஆற்றுப்.15). 1. To take by handfuls; to take in a sweep; to scoop;
  • ஆவலோடு கொள்ளுதல். வாரிக் கொண்டுன்னை விழுங்குவன் காணில் (திவ். திருவாய். 9, 6, 10). 2. To take in or grasp with avidity;
  • மிகுதியாகக்கொண்டு செல்லுதல். 4. To remove, carry off in great numbers, as plague, flood, etc.;
  • கவர்தல். (திவா.) மாதர் வனைதுகில் வாரு நீரால் (கம்பரா. ஆற்றுப். 15). 5. To snatch away;
  • திருடுதல். (யாழ். அக.) 6. To rob, steal;
  • தோண்டி யெடுத்தல். வள்ளி வாரிய குழியின் (சீவக. 1565). 7. To dig and take up;
  • கொழித்தல். (திவா.) 8. To winnow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [K. bāru.] 1.To take by handfuls; to take in a sweep; toscoop; அள்ளுதல். உறியொடு வாரி யுண்டு (கம்பரா.ஆற்றுப். 15). 2. To take in or grasp withavidity; ஆவலோடு கொள்ளுதல். வாரிக் கொண்டுன்னை விழுங்குவன் காணில் (திவ். திருவாய். 9, 6,10). 3. To gather; தொகுத்தல். கைவளம் வாரினைகொண்டு வரற்கு (பு. வெ. 9, 29). 4. To remove,carry off in great numbers, as plague, flood,etc.; மிகுதியாகக்கொண்டு செல்லுதல். 5. Tosnatch away; கவர்தல். (திவா.) மாதர் வனைதுகில்வாரு நீரால் (கம்பரா. ஆற்றுப். 15). 6. To rob,steal; திருடுதல். (யாழ். அக.) 7. To dig and takeup; தோண்டி யெடுத்தல். வள்ளி வாரிய குழியின்(சீவக. 1565). 8. To winnow; கொழித்தல். (திவா.)9. To sift, as with a sieve or by immersing inwater; அரித்தல். வாராதட்ட வாடூன் புழுக்கல் (பெரும்பாண். 100). 10. To comb, as the hair; மயிர்முதலியன சீவுதல். கோதி வாரி முடித்த பாரியகொண்டை (அரிச். பு. இந்திர. 16). 11. To playupon, as the strings of a lute; யாழ்நரம்பைத்தடவுதல். வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும்(பொருந. 23). 12. To trim, as a palmyra leafto write on; ஓலையை எழுதுதற்குரிய இதழாகச்செம்மை செய்தல். 13. To plaster, smear; பூசுதல். (நெடுநல். 110, உரை.)