தமிழ் - தமிழ் அகரமுதலி
  எது ; இராக்கதன் ; பிசாசு ; கள் ; நினைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கள். (சது.) Toddy;
 • யாது பூநெருப்பென வடராதிங்கே நிலைத்திடுகின்றான் (சேதுபு. சேதுமா.100). 1. See யாதுதானன், 1.
 • எது. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் (குறள், 254). What, which;
 • ஞாபகம். எனக்கு யாது இல்லை. Memory;
 • பிசாசு. (இலக். அக.) 2. Evil spirit, fiend, demon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • (interrog. pronoun) what, which?, எது?; 2. palm-tree-sap fermented, கள்; 3. memory, யாதி. யாதொருவர், யாதாமொருவர், anybody, one or the other. யாதொன்று, யாதாகிலுமொன்று, யா தொரு பொருள், any thing. எனக்கு யாதில்லை, I do not remember.
 • யாதுதானர், s. a kind of Rakshasas.

வின்சுலோ
 • [yātu] ''[inter. pron.]'' What, which?--an expression of doubt, ''commonly'' எது. 2. ''s.'' Palm-tree-sap, fermented, கள். (சது.) 3. [''com. for'' யாதி.] Memory. எனக்குயாதில்லை. I do not remember. யாதாமொருவன்--யாதொருவன். Any body, one or the other. யாதிற்குங்கடை. The last of all. ''(p.)'' யாதெனில். If it be asked what; that is to say. யாதொருபொருள்--யாதாகிலுமொன்று--யாதொன் று. Any thing. யாதோ. There is doubt.
 • [yātu ] --யாதுதானர், ''s.'' A kind of ''Rakshasa; in Wils,'' a goblin or a demon. W. p. 684. ''YATU, YATUD'HANA.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • interrog. pron. < யா. [T.ēdi, K. yāvudu.] What, which; எது. அருளல்லதியாதெனிற் கொல்லாமை கோறல் (குறள், 254).
 • n. < yātu. 1. See யாதுதானன், 1. யாது பூநெருப்பென வடராதிங்கே நிலைத்திடுகின்றான் (சேதுபு. சேதுமா. 100). 2. Evilspirit, fiend, demon; பிசாசு. (இலக். அக.)
 • n. cf. šīdhu. Toddy; கள்.(சது.)
 • n. < U. yād. Memory;ஞாபகம். எனக்கு யாது இல்லை.