தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஐ) ; கண்ணுக்கிடும் அஞ்சனம் ; மசி ; வண்டிமசகு ; கருநிறம் ; இருள் ; பசுமை ; களங்கம் ; கருமேகம் ; வானம் ; குற்றம் ; பாவம் ; அழுக்கு ; பிறவி ; மலடு ; மலடி ; மலட்டு எருமை ; மேடராசி ; ஆடு ; இளமை ; நீர் ; மந்திரவாதத்தில் பயன்படுத்தும் மை ; பண்புப்பெயர்விகுதி ; தொழிற்பெயர்விகுதி ; வினையெச்சவிகுதிகளுள் ஒன்று ; அறியாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ம் and ஐ.
  • கண்ணுக்கிடும் அஞ்சனம். மைப்படிந்த கண்ணாளும் (தேவா. 1235, 10). 1. Collyrium for the eye;
  • மசி. 2. Ink; ink paste;
  • மந்திரவாதத்தில் உபயோகிக்கும் மை. 3. Black pigment used in witchcrait;
  • வண்டி மசகு. 4. Grease made of castor-oil and burnt straw, used as a lubricant for country-carts;
  • கருநிறம். மறவர் மைபடு திண்டோள் (அகநா. 89). 5. Black, blackness;
  • இருள். மைபடு மருங்குல் (புறநா. 50). 6. Darkness;
  • பசுமை. மையிருங்கானம் (அகநா. 43.) 7. Greenness;
  • களங்கம். மைதீர்ந்தன்று மதியுமன்று (கலித்.55). 8. Spot, as of the moon; blemish;
  • கருமேகம். மைபடுசென்னி ... மலை (கலித். 43). 9. Dark cloud;
  • விண். (அரு. நி.) 10. Sky, as blue;
  • குற்றம். மையிலறிவினர் (புறநா. 22, 8). 11.Fault; defect;
  • பாவம். மைதீர்த்தல் (சினேந். 457). 12. Sin;
  • அழுக்கு, மையில் செந்துகிர் (கலித். 85). 13. Dirt;
  • பிறவி. மையறு சிறப்பிற் றெய்வம் (பட்டினப். 159). 14. Birth, as due to karma;
  • மலடு. (பிங்.) 15. Barrenness, sterility;
  • மலடி. (நாமதீப. 182.) 16. cf. மைம்மை. Barren woman;
  • மலட்டெருமை. (சூடா.) 17. cf. மைம்மை. Barren buffalo;
  • எருமை. வைகுபுலர் விடியன் மைபுலம் பரப்ப. (அகநா. 41). 18. cf. mahiṣa. Buffalo;
  • மேடராசி. (சூடா.) 19. cf. mēṣa. Aries of the zodiac;
  • ஆடு. (திவா.) மையூன் மொசித்த வொக்கவொடு (புறநா. 96). 20. Sheep; goat;
  • இளமை. (அக. நி.) 21. Youth;
  • நீர். (யாழ். அக.) 22. Water;
  • பண்புப்பெயர் விகுதியுள் ஒன்று: Suffix (a) expressing an abstract quality or condition, as karumai, poṟumai;
  • தொழிற்பெயர்விகுதியுள் ஒன்று: (b) ending verbal nouns, as ceykiṉṟamai, ceyyāmai;
  • வினையெச்சவிகுதியுள் ஒன்று. ஒற்றொற்றுணராமை யாள்க (குறள், 589). (c) ending verbal participles;
  • அஞ்ஞானம். மைதபு ஞான மனத்திடையொன்றும் (பாகவத. 8, வாமனாவ. 32). Ignorance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a magical paint, a black for the eyes. அஞ்சனம்; 2. black, blackness, கறுப்பு; 3. ink; 4. fault, குற்றம்; 5. a barren woman, மலடி; 6. a barren buffalo; 7. a cloud; 8. the first sign of the Zodiac, மேடவிராசி; 9. a kind of sheep, செம்மறியாடு; 1. an affix expressing an abstract quality or condition as in இருமை, doubleness, வள்ளன்மை, charitableness etc. மைகூட்ட, to make ink or paint. மைக்காடு, ashes and dust from a goldsmith's furnace, from which precious metals are got by washing. மைக்காப்பு, colouring the writing of an ola book. மைக்கூடு, an ink-stand. மை பரவுங் கடுதாசி, blotting or sinking paper. மைபூச, -இட, to colour with ink or pigment especially the eyebrows as women do. மேளனம் {*}, s. a crowd, an assembly, கூட்டம்.
  • s. water, நீர்.
  • II. v. i. be slightly pounded, be separated from the husk by beating, மசி II.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • mayyi மய்யி ink

வின்சுலோ
  • A syllabic letter, composed of ம் and ஐ.
  • [mai] ''s.'' Black or magical for the eyes, அஞ்சனம். 2. Black, blackness, ink. கறுப்பு, 3. Fault, குற்றம். 4. A kind of sheep, செம்மறியாடு. 5. The first sign of the Zodiac, மேடவிராசி. (சது.) 6. A barren woman, மலடி. 7. A barren buffalo, மலட்டெருமை. 8. A cloud, மேகம். 9. An affix expressing an abstract quality, or condition, as இருமை, doubleness; வள்ளன்மை, charitableness; பொ றுமை, patience; செய்யாமை, inaction. இருக்கின்றமையால். Because it is.
  • [mai] ''s.'' Water, நீர். W. p. 63. MA.
  • [mai] கிறது, ந்தது, யும், மைய, ''v. n.'' To be slightly pounded, to be separated from the husk by beating, மசிய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ம் and ஐ.
  • n. cf. maṣī. 1. Collyrium forthe eye; கண்ணுக்கிடும் அஞ்சனம். மைப்படிந்த கண்ணாளும் (தேவா. 1235, 10). 2. Ink; ink paste; மசி.3. Black pigment used in witchcraft; மந்திரவாதத்தில் உபயோகிக்கும் மை. 4. Grease madeof castor-oil and burnt straw, used as a lubricant for country-carts; வண்டி மசகு. 5. Black,blackness; கருநிறம். மறவர் மைபடு திண்டோள்(அகநா. 89). 6. Darkness; இருள். மைபடு மருங்குல் (புறநா. 50). 7. Greenness; பசுமை. மையிருங்கானம் (அகநா. 43.) 8. Spot, as of the moon;blemish; களங்கம். மைதீர்ந்தன்று மதியுமன்று(கலித். 55). 9. Dark cloud; கருமேகம். மைபடுசென்னி . . . மலை (கலித். 43). 10. Sky, as blue;விண். (அரு. நி.) 11. Fault; defect; குற்றம். மையிலறிவினர் (புறநா. 22, 8). 12. Sin; பாவம். மைதீர்த்தல் (சினேந். 457). 13. Dirt; அழுக்கு. மையில்செந்துகிர் (கலித். 85). 14. Birth, as due to karma;பிறவி. மையறு சிறப்பிற் றெய்வம் (பட்டினப். 159).15. Barrenness, sterility; மலடு. (பிங்.) 16.cf. மைம்மை. Barren woman; மலடி. (நாமதீப.182.) 17. cf. மைம்மை. Barren buffalo; மலட்டெருமை. (சூடா.) 18. cf. mahiṣa. Buffalo;
    -- 3367 --
    எருமை. வைகுபுலர் விடியன் மைபுலம் பரப்ப (அகநா.41). 19. cf. mēṣa. Aries of the zodiac; மேடராசி. (சூடா.) 20. Sheep; goat; ஆடு. (திவா.)மையூன் மொசித்த வொக்கலொடு (புறநா. 96). 21.Youth; இளமை. (அக. நி.) 22. Water; நீர்.(யாழ். அக.)
  • part. Suffix (a) expressing anabstract quality or condition, as karumai,poṟumai; பண்புப்பெயர் விகுதியுள் ஒன்று: (b)ending verbal nouns, as ceykiṉṟamai, ceyyāmai;தொழிற்பெயர்விகுதியுள் ஒன்று: (c) ending verbalparticiples; வினையெச்சவிகுதியுள் ஒன்று. ஒற்றொற்றுணராமை யாள்க (குறள், 589).
  • n. Ignorance; அஞ்ஞானம்.மைதபு ஞான மனத்திடையொன்றும் (பாகவத. 8,வாமனாவ. 32).