தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலிடுவது ; குதிரைச்சேணம் முதலியன ; மேற்பார்வை ; மிகுதியாக இருத்தல் ; கூட்டுக்கறி ; மகளிர் காதணிவகை ; அடுத்த தடவை ; வெளிப்பகட்டு ; வரிசை அல்லது அடுக்கில் மேலிருப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலிடுவது. 1. That which is placed over;
  • குதிரைச்சேணம் முதலியன. பூணும் பொற்படையாகிய மேல ட்டையும் (பு. வெ. 10, 2, உரை).
  • கண்காணிப்பு முதலியன செய்யும் மேலுத்தி யோகம். (W.) 3. Superintendence; superiority in office;
  • மிகுதியாக விருக்கை. (W.) 4. Prevalence, predominance;
  • உணவின் வியஞ்சனம். வாளையினது . . . தடியை . . . சோற்றிற்கு மேல டாகக் கொண்டு (புறநா. 61, உரை).
  • மகளிர் காதணிவகை. (W.) 6. A jewel worn in the ear by women;
  • அடைமானக்காரனிடம் மீண்டும் கடன்வாங்கி அடைமானச் சொத்தையே பொறுப்புக் கட்டுகை. 13. (Legal.) Further charge or mortgage;
  • அடுத்த தடவை. மேல ட்டுக்குப் பார்த்துக்கொள்வோம்.
  • ஒரு ஜதையில் மேம்பட்டிருப்பது. 9. The superior of a pair;
  • வெளிப்பகட்டு. 10. Outward appearance;
  • கபோதவரி. 11. Capital, projecting structure on the top of walls, especially round temples and forts;
  • வரிசை அல்லது அடுக்கில் மேலாக இருப்பது. இது மேல ட்டு இட்டலி.
  • வியாஜம். 7. Pretext, pretence;