தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்தாரம் ; குளிர் ; எட்டு மரக்கால் கொண்ட முகத்தலளவை ; மறைந்த இடம் ; அறிவின்மை ; மயக்கம் ; ஐயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவின்மை. (பிங்.) 1. Foolishness, stupidity;
  • மயக்கவுணர்வு. பாசண்டி மூடம் (அறநெறி.16). 2. Confusion; error;
  • ஐயம். (யாழ். அக.) 3. Doubt;
  • மந்தாரம். (யாழ் .அக.) 1.cf.மூட்டம். Dark, clouded sky;
  • குளிர் (யாழ். அக.) 2. Chillness; cold;
  • மறைந்த இடம். வேட்கைவிட்டார் நெஞ்சின் மூடத்துளே நின்று முத்தி தந்தானே (திருமந். 2614). 4. Place of concealment; secret place;
  • 8 மரக்கால் கொண்ட முகத்தலளவை. (தைலவ. தைல.) 3. A measure of capacity=8 marakkāl;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (மோடம்) s. foolishness, stupidity, அறிவின்மை; 2. obscure or dark sky, மந்தாரம். மூடத்தனம், stupidity, மூடதை. மூடன், மூடாத்துமா, a stupid person, a dolt, a fool. மூடாந்தகாரம், excessive mental darkness. நிர்மூடன், a great fool.

வின்சுலோ
  • [mūṭam] ''s.'' [''also'' மோடம்.] Foolishness, stupidity, மதிகேடு. W. p. 667. MOOD'HA. 2. An obscure or dark sky, மந்தாரம். இன்றைக்குமூடமாயிருக்கிறது......The sky in overcast to-day.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூடு-. [K. mōḍa.] 1.cf. மூட்டம். Dark, clouded sky; மந்தாரம். (யாழ்.அக.) 2. Chillness; cold; குளிர். (யாழ். அக.) 3.A measure of capacity = 8 marakkāl; 8 மரக்கால்கொண்ட முகத்தலளவை. (தைலவ. தைல.) 4.Place of concealment; secret place; மறைந்தஇடம். வேட்கைவிட்டார் நெஞ்சின் மூடத்துளேநின்று முத்தி தந்தானே (திருமந். 2614).
  • n. < mūḍha. 1. Foolishness, stupidity; அறிவின்மை. (பிங்.) 2. Confusion; error; மயக்கவுணர்வு. பாசண்டி மூடம்(அறநெறி. 16). 3. Doubt; ஐயம். (யாழ். அக.)