தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாசி ; பறவையலகு ; யானைத்துதிக்கை ; பாண்டத்தின் வாயிலுள்ள மூக்குப்போன்ற உறுப்பு ; வண்டிப்பாரின் தலைப்பகுதி ; முளைதோன்றும் வித்தின் முனை ; இலைக்காம்பு ; குறுநொய் ; முரட்டுப்பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுநொய். Loc. 8. Broken ends of rice;
  • முரட்டுப் பேச்சு. மூக்குப் பேசுகின்றா னிவனென்று (திவ். பெரியாழ். 5, 1, 1). Rude talk;
  • நாசி. மூன்றறி வதுவே யவற்றோடு மூக்கே (தொல். பொ. 582). 1. Nose, nostril;
  • பறவையலகு. (திவா.). 2. Bird's beak; bill;
  • யானைத்துதிக்கை. மூரி யேழ்கடலுந்தரு மூக்கின (தக்க யாகப். 273). 3. Elephant's trunk;
  • பாத்திரவாயிலுள்ள மூக்குப்போன்ற உறுப்பு. கலசப்பானை யொன்று மூக்குமடியுமுட்பட (S. I. I. ii, 5). 4. Nose-shaped part of a cup, etc.; spout of kettle or pot;
  • வண்டிப் பாரின் தலைப்பகுதி. கரடி வைத்த கலனுடை மூக்கின் (பெரும்பாண். 57). 5. Nose-shaped end of the pole of a cart;
  • முளைதோன்றும் வித்தின் முனை. குன்றி மூக்கிற் கரியாருடைத்து (குறள், 277). 6. Germinating end of seeds;
  • இலைக் காம்பு. மாஅத்து மூக்கிறு புதிர்ந்த (ஐங்குறு. 213). 7. Base or stem of a leaf;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the nose, நாசி; 2. the bill or beak of a bird, சொண்டு; 3. the mouth of the trumpet etc.; 4. the noozle or the out-standing lip of a lamp or any other vessel; 5. chit-point of a seed. மூக்கடைப்பு, hindrance of breath through the nose. மூக்கறையன், மூக்கறுபட்டவன், (fem. மூக்கறைச்சி), a person with an amputated nose. மூக்கன், a man with a large nose. மூக்காங் கயிறு (மூக்கணாங்கயிறு) குத்த, to perforate a bullock's nose for the string. மூக்காங் கொழுந்து, மூக்குக் கொழுந்து, end of the nose. மூக்கிலி, a plant, portalaca meridiana, சொக்களிப்பூடு; 2. as மூக்கறையன். மூக்குக் கண்ணாடி, a pair of spectacles. மூக்குச் சளி, mucus of the nose. மூக்குச் சிந்த, -சிந்திப் போட, to blow the nose. மூக் குத்தி, -த்தளுக்கு, a nose-jewel. மூக்குத் தூள், -ப்பொடி, snuff. மூக்கைத் தீட்ட, to whet the beak as a bird. மூக்கை நெறிக்க, to turn up the nose, மூக்கைச்சுளிக்க. மூக்கொற்றி, a gold ring set with a stone or jewel. இல்லி (சில்லி) மூக்கு, a bleeding nose.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • muukku மூக்கு nose; bill, beak (of bird); pouring spout

வின்சுலோ
  • [mūkku] ''s.'' Nose, nostril, நாசி. 2. A bird's beak, பறவைமூக்கு. 3. Spout of a pot, or kettle, கலயத்தின்மூக்கு. 4. Lip of a cup or lamp, விளக்கின்மூக்கு. 5. Chit-point of a seed, தானியத்தின்மூக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மோ-. [T. mūkku,K. mūgu, M. mūkku, Tu. mūku.] 1. Nose,nostril; நாசி. மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே(தொல். பொ. 582). 2. Bird's beak; bill; பறவையலகு. (திவா.) 3. Elephant's trunk; யானைத்துதிக்கை. மூரி யேழ்கடலுந்தரு மூக்கின (தக்கயாகப். 273). 4. Nose-shaped part of a cup, etc.;
    -- 3313 --
    spout of kettle or pot; பாத்திரவாயிலுள்ள மூக்குப்போன்ற உறுப்பு. கலசப்பானை யொன்று மூக்குமடியுமுட்பட (S. I. I. ii, 5). 5. Nose-shaped end ofthe pole of a cart; வண்டிப் பாரின் தலைப்பகுதி.காடி வைத்த கலனுடை மூக்கின் (பெரும்பாண். 57).6. Germinating end of seeds; முளைதோன்றும்வித்தின் முனை. குன்றி மூக்கிற் கரியாருடைத்து(குறள், 277). 7. Base or stem of a leaf; இலைக்காம்பு. மாஅத்து மூக்கிறு புதிர்ந்த (ஐங்குறு. 213). 8.Broken ends of rice; குறுநொய். Loc.
  • n. < mūrkha. Rude talk;முரட்டுப் பேச்சு. மூக்குப் பேசுகின்றா னிவனென்று(திவ். பெரியாழ். 5, 1, 1).