தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதிர்தல் ; முழுவளர்ச்சி பெறுதல் ; முதுமையாதல் ; பெருகுதல் ; வைரங்கொள்ளுதல் ; தங்குதல் ; நிறைவேறுதல் ; முடிதல் ; இறத்தல் ; போலுதல் ; செய்துமுடித்தல் ; அழித்தல் ; சூழ்தல் ; வளைத்தல் ; அடைதல் ; மேற்கொள்ளுதல் ; தேர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிதல். தங்கரும முற்றுந் துணை (நாலடி, 231). 8. To come to an end; to be finished;
  • இறத்தல். மாற்றமுந் தாரானா லின்று முற்றும் (திவ். பெரியாழ். 2, 10, 1). 9. To die;
  • போலுதல். எழுமுற்றுந் தோளார் (சீவக. 1870).--tr. 10. To be similar;
  • செய்துமுடித்தல். வேள்வி முற்றி (புறநா.15). 1. To complete, finish;
  • அழித்தல். முற்றினன் முற்றின னென்று முன்புவந்து (கம்பரா. கும்பகர். 311). 2. To destroy, kill;
  • சூழ்தல். பாண்முற்றுக நின்னாண்மகி ழிருக்கை (புறநா. 29). 3. [T.muttu.] To surround;
  • வளைத்தல். முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். பொ. 68). 4. [K.muttu.] To besiege, blockade;
  • அடைதல். அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி (இலக். வி. 754, உரை). 5. To approcah, reach;
  • மேற்கொள்ளுதல். சுளிமுகத் துவாவின் முற்றி (ஞானா. 26). 6. To get upon;
  • தேர்தல். புரவிப்போருங் கரப்பறக் கற்று முற்றி (சீவக. 1678). 7. To become expert in;
  • நிறைவேறுதல். இமையோர்க்குற்ற குறைமுற்ற (கம்பரா. கடல்காண். 11). 7. To be fulfilled, as one's desire;
  • தங்குதல். குடகடன் முற்றி (மதுரைக்.238). 6. To abide, dwell;
  • வைரங்கொள்ளுதல். (சூடா.) 5. To become hardened, as the core of a tree;
  • பெருகுதல். முற்றெரிபோற் பொங்கி (பு. வெ. 8, 16). 4. To abound, increase;
  • முதுமையாதல். (பிங்.) 3. To be advanced in age;
  • முதிர்தல். முற்றி யிருந்த கனியொழிய (நாலடி, 19). 1. To become mature; to ripen;
  • முழுவளர்ச்சி பெறுதல். ஓர் முற்றாவுருவாகி (திவ். திருவாய். 8, 3, 4 ). 2. To be fully grown;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. muduru, K.mudu, M. muttuga.] intr. 1. To becomemature; to ripen; முதிர்தல். முற்றி யிருந்த கனியொழிய (நாலடி, 19). 2. To be fully grown;முழுவளர்ச்சி பெறுதல். ஓர் முற்றாவுருவாகி (திவ். திருவாய். 8, 3, 4). 3. To be advanced in age;முதுமையாதல். (பிங்.) 4. To abound, increase;பெருகுதல். முற்றெரிபோற் பொங்கி (பு. வெ. 8, 16).5. To become hardened, as the core of a tree;வைரங்கொள்ளுதல். (சூடா.) 6. To abide, dwell;தங்குதல். குடகடன் முற்றி (மதுரைக். 238). 7.To be fulfilled, as one's desire; நிறைவேறுதல்.இமையோர்க்குற்ற குறைமுற்ற (கம்பரா. கடல்காண்.11). 8. To come to an end; to be finished; முடிதல். தங்கரும முற்றுந் துணை (நாலடி, 231). 9. Todie; இறத்தல். மாற்றுமுந் தாரானா லின்று முற்றும்(திவ். பெரியாழ். 2, 10, 1). 10. To be similar;போலுதல். எழுமுற்றுந் தோளார் (சீவக. 1870).--tr.
    -- 3295 --
    1. To complete, finish; செய்துமுடித்தல். வேள்விமுற்றி (புறநா. 15). 2. To destroy, kill; அழித்தல்.முற்றினன் முற்றின னென்று முன்புவந்து (கம்பரா.கும்பகர். 311). 3. [K. muttu.] To surround; சூழ்தல். பாண்முற்றுக நின் னாண்மி ழிருக்கை (புறநா.29). 4. [K. muttu.] To besiege, blockade;வளைத்தல். முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியும்(தொல். பொ. 68). 5. To approach, reach; அடைதல். அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி (இலக். வி..754, உரை). 6. To get upon; மேற்கொள்ளுதல்.சுளிமுகத் துவாவின் முற்றி (ஞானா. 26). 7. Tobecome expert in; தேர்தல். புரவிப்போருங் கரப்பறக் கற்று முற்றி (சீவக. 1678).