தமிழ் - தமிழ் அகரமுதலி
  நீதி ; அடைவு ; நியமம் ; ஆள் மாறிமாறி வேலைசெய்யும் நியமம் ; தடவை ; பிறப்பு ; ஒழுக்கம் ; உறவு ; உறவுமுறைப் பெயர் ; அரச நீதி ; பழைமை ; ஊழ் ; கூட்டு ; நூல் ; தன்மை ; காண்க : முறையீடு ; கற்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • உறவு. பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே (நன். 298). 7. Relationship by blood or marriage ;
 • தடவை. எழுமுறையிறைஞ்சி (சிவக. 3052). 4. Time, as once, twice ;
 • இராசநீதீ.முறைகோடி மன்னவன் செய்யின் (குறள், 559). 9. Justice;
 • கற்பு. முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட (பரிபா.15, 39). 16. Faithfulness, chastity
 • . 15. See முறையீடு.
 • தன்மை. முத்தீப் பேணுமுறையெனக் கில்லென (மணி. 22, 48). 14. Nature;
 • நூல்.(பிங்.) இளைய பாலகன் முறைவரைவேனென முயல்வது (கந்தபு. அலைய. 1). 13.Treatise;
 • பிறப்பு. மறுமுறை யமையத்தும் (பரிபா, 11, 139). 5. Birth ;
 • உறவுமுறைப்பெயர். பெரியாரையென்று முறைகொண்டு கூறார் (ஆசாரக். 91). 8. Term of relationship ;
 • கூட்டு. (பிங்.) 12. Things gathered together;
 • ஊழ். ஆருயிர் முறைவழிப் படுஉம் (புறநா.192). 11. Fate;
 • பழமை. (பிங்.) 10. Antiquity;
 • அடைவு. முறைமுறை . . . கழியு மிவ்வுலகத்து (புறநா. 29). 1. Order, manner, plan, arrangement, course;
 • நியமம். 2. Regularity, system, routine ;
 • ஆள் மாறிமாறி வேலைசெய்யும் நியமம். பணி முறை மாற முந்துவார் (கம்பரா. ஊர்தேடு. 49). 3. Turn by which work is done ;
 • ஒழக்கம். முறையிலோயைத் தென்புலத் துய்ப்பன்(கம்பரா. வாலிவதை. 117). 6. Manners; custom; approved course of conduct ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. manners, morals, legality, ஒழுக்கம்; 2. order, regularity, கிரமம்; 3. good disposition, குணம்; 4. relationship by blood or marriage, உறவு; 5. repetition, number of times repeated, தரம்; 6. turns by which duty or work is done, வரிசை; 7. complaint, முறைப்பாடு; 8. a book, புத்த கம்; 9. antiquity, பழமை. இப்போது எனக்கு (என்) முறை, now it is my turn. நாலு முறை, four times. உனக்கும் அவனுக்கும் முறையென்ன, how is he related to you? அந்தப் பெண்ணைக் கொள்ளுகிறதற்கு முறையல்ல, (முறை வரிசையல்ல), it is unlawful to marry that young woman. முறையிலே அவன் எனக்குப் பாட்டனாக வேண்டும், in relationship he is my grand-father. திருமுறை, a name to a book of Manikavachakar (lit. the sacred complaint). முறைகாக்க, -யிருக்க, to be upon duty or guard in one's turn, to be a guard in the fort. முறைகாரர், those employed to attend to a duty by turns. முறைகேடு, -மசக்கு, incest, indecency, unbecoming act. முறைக்காய்ச்சல், intermittent fever, ague. மூன்றாம் முறைக்காய்ச்சல், a tertian ague, returning every third day. முறை தெரிந்தோன், an architect; 2. an epithet of Brahma. முறை நிரனிறை, முறைநிரைநிறை, arrangement of a series of verbs, nouns etc. in the order of their nominatives and objectives. முறைப்பட, -இட, to complain. என்மேல் முறையிட்டான், -வைத்தான், he complained against me. முறைப்பாடு, a complaint. முறைமை, see separately. முறையீடு, complaint, indictment.
 • VI. v. i. (prop. விறை) become stiff, hard, மரத்துப்போ; 2. be haughty, இறுமா; v. i. prick up the ears (as an animal), நெறி. முறைத்துப் பார்க்க, to look impudently, to stare. முறைப்பு, v. n. stiffness, haughtiness.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • 1. maatiri மாதிரி 2. varice வரிசெ 3. taTave தடவெ 1. manner 2. order, regularity 3. repetition, turn (one's turn), times (4 times)

வின்சுலோ
 • [muṟai] ''s.'' Manners, morals, custom, ap proved course, legality, ஒழுக்கம். 2. Re gularity, order, manner, plan, system, routine, course, round, சிரமம். 3. Relation ship by blood or marriage, உறவின்முறை. 4. Good nature good disposition, குணம். 5. Antiquity, பழமை. 6. Repetition, தரம். 7. An expletive, ஓரிடைச்சொல். 8. Complaint, முறைப்பாடு. 9. Turns by which duty or work is done, வரிசை. 1. A book, புத்தகம். உனக்கும்அவனுக்்கும்முறையென்ன. What rela tionship is there between you and him? அம்மான்பெண்ணைக்கொள்ளுகிறதுமுறைதான்...... Marriage contract with the daughter of a mother's brother is lawful. அக்காளைக்கொண்டால்தங்கைக்குமுறைகேட்கவேண் டுமா. Is it necessary to inquire whether it is lawful to marry a younger sister when you have married the elder? இதுனக்குமுறையல்ல. This does not become you. இன்றைக்குஎன்முறை. It is my turn to-day.
 • [muṟai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' [''com. for.'' விறை.] To become stiff, hard, to stiffen or prick up the ears, as a horse, நெறிக்க. 2. ''(fig.)'' To be haughty. செருப்புநனைந்துகாய்ந்துமுறைத்துக்கொண்டது............ The slipper has become stiff from having been wet. அவன்முறைத்துக்கொண்டிருக்கிறான்........He is obstinate.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. [T. mora, K. mure, M.mura.] 1. Order, manner, plan, arrangement,course; அடைவு. முறைமுறை . . . கழியு மிவ்வுலகத்து (புறநா. 29). 2. Regularity, system,routine; நியமம். 3. Turn by which work isdone; ஆள் மாறிமாறி வேலைசெய்யும் நியமம். பணி
  -- 3300 --
  முறை மாற முந்துவார் (கம்பரா. ஊர்தேடு. 49). 4.Time, as once, twice; தடவை. ஏழுமுறையிறைஞ்சி (சீவக. 3052). 5. Birth; பிறப்பு. மறுமுறை யமையத்தும் (பரிபா. 11, 139). 6. Manners;custom; approved course of conduct; ஒழுக்கம்.முறையிலோயைத் தென்புலத் துய்ப்பன் (கம்பரா.வாலிவதை. 117). 7. Relationship by blood ormarriage; உறவு. பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே (நன். 298). 8. Term of relationship; உறவுமுறைப்பெயர். பெரியாரையென்றுமுறைகொண்டு கூறார் (ஆசாரக். 91). 9. Justice;இராசநீதி. முறைகோடி மன்னவன் செய்யின் (குறள்,559). 10. Antiquity; பழமை. (பிங்.) 11. Fate;ஊழ். ஆருயிர் முறைவழிப் படூஉம் (புறநா. 192). 12.Things gathered together; கூட்டு. (பிங்.) 13.Treatise; நூல். (பிங்.) இளைய பாலகன் முறைவரைவேனென முயல்வது (கந்தபு. அவைய. 1). 14.Nature; தன்மை. முத்தீப் பேணு முறையெனக் கில்லென (மணி. 22, 48). 15. See முறையீடு. 16.Faithfulness, chastity; கற்பு. முகிழ்மயங்கு முல்லைமுறைநிகழ்வு காட்ட (பரிபா. 15, 39).