தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை ; தடை ; தட்டுப்பாடு ; சங்கடம் ; குறைவு ; உட்சென்று கடத்தலருமை ; கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுகள் ; மாதவிடாய் ; கருவி : சில்லறைப் பொருள்கள் ; பற்றுக்கோடு ; முழங்கால் , முழங்கை , விரல்கள் இவற்றின் பொருத்து ; மேடு ; குவியல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கு முதலியன கொம்புழதலியவற்றால் தாக்குகை. 1. Battering, butting;
  • சில்லறைப் பொருள்கள். கட்டினேம் முட்டுக்களை (புறநா. 206, உரை). 9. Sundry things;
  • குவியல். பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன. 13. Heap;
  • மேடு. (W.) 12. Rising ground, high ground;
  • முழங்கால் முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து. 11. Knee; elbow; knuckle;
  • பற்றுக்கோடு. 10. Prop, support;
  • கருவி. கொற்றரு மிருப்பு முட்டு (திருவாலவா. 45, 8). 8. Tool, instrument;
  • மாதவிடாய். (W.) 7. Menses;
  • கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள். (பெரியபு. திருஞான. 692.) 6. Pollution;
  • உட்சென்று கடத்தலருமை. முட்டுடை முடுக்கரும் (சீவக. 1216). 5. Difficulty, as in passing;
  • குறைவு. மூவேழ் துறையுமுட்டின்று போகிய (புறநா. 166). 4. Shortness, deficiency;
  • . 3. See முட்டுப்பாடு, 1, 2.
  • தடை. முட்டுவயிற் கழறல் (தொல். பொ. 271). பன் முட்டின்றாற் றோழி நங்கள வே (அகநா. 122). 2. Hindrance, obstacle, impediment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. want, difficulty, straits, இடுக் கண்; 2. a blockade, அடைப்பு; 3. butting against, a dash of the fore- head against something; 4. a prop, a support a stay, உதைக்கால்; 5. vessel, utensil, தட்டுமுட்டு; 6. the knee, முழங்கால்; 7. a rising ground, a hillock, மேடு; 8. menses. தொடக்கு; 9. a musical instrument, நட்டுமுட்டு; 1. horse's bridle, கடிவாளம். எனக்கு வெகு முட்டாயிருக்கிறது, I am in great want. முட்டு வாங்கிப்போயிற்று, the blockade has ceared. முட்டற்றது, a thing that has no support. முட்டற்றவன், a person of no account. முட்டாட்டம், v. n. stupidity, pertinacity arising from ignorance. முட்டாள், முட்டன், a stupid person. முட்டாள்வேலை, the work of a stupid fellow. முட்டிட, முட்டுக்குத்த, to fall upon the knees. முட்டுக்கட்ட, to place a prop; 2. to blockade, to shut up a place or entrance; 3. to form ridges in a field; 4. to form a pile of earth for plants. முட்டுக் கட்டியாட, to go on stilts. முட்டுக் கட்டை, a block or stake as a prop or support. முட்டுக்கு நிற்க, to be ready to butt as beasts. முட்டுச்சீலை, a menstruous cloth. முட்டுண்ண, to be gored with horns. to be dashed against. முட்டுத்தனம், com. முட்டத்தனம், ignorance, stupidity, obstinacy. முட்டுப்பாடு, dilemma, want, exigency; 2. evil. முட்டுமுட்டாயிருக்க, to be full of hillocks. ஆராதனை முட்டு, holy vessels. பணிமுட்டு, a tool or instrument of a workman.
  • III. v. t. butt, dash against, தாக்கு; 2. assault, attack, எதிர்; 3. hinder, oppose, தடு; v. i. be in want, need, குறைவுறு. அன்னமுட்டினால் எல்லாம் முட்டும், if rice is deficient, everything is wanting. முட்டம், (neg. 1st pers. pl.) we shall not want. முட்டிற்று, முட்டிப்போயிற்று, all the necessaries are wanting. முட்டிக்கொள்ள, to hit the head against something. முட்டுதல், v. n. butting want. முட்டுதலாயிருக்க, to be in great want. முட்டை, you will not want.

வின்சுலோ
  • [muṭṭu] ''s.'' Want, difficulty, straits, ex tremity, இடுக்கண். 2. Battering; butting of a beast, முட்டுகை. 3. A prop, a sup port, தாங்கல். 4. Utensil, as தட்டுமுட்டு. 5. A blockade, an impediment, அடைப்பு. 6. ''[in combin.]'' A musical instrument, as நட்டுமுட்டு. 7. A bridle, கடிவாளம். 8. The knee, முழங்கால். 9. The menses of women, தொடக்கு. 1. ''(R.)'' Rising ground, மேடு. முட்டுற்றபோழ்தின். In the time of adver sity. (நாலடி.) எனக்குவெகுமுட்டாயிருக்கிறது. I am in great straits (for money).
  • [muṭṭu] கிறேன், முட்டினேன், வேன், மு ட்ட, ''v. a.'' To thrust against, to butt, தாக்க. 2. To oppose, to hinder, தடுக்க. 3. To assault, to attack, எதிர்க்க. 4. ''v. n.'' To be in want, straits or difficulty, குறைவுற. ''(c.)'' பிள்ளையைமாடுமுட்டிப்போட்டது. The ox push ed the child (with its horns). அன்னமுட்டினாலெல்லாமுட்டும். If rice be deficient, all things will be wanting.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முட்டு-. [T. K. M. Tu.muṭṭu.] 1. Battering, butting; விலங்கு முதலியனகொம்புமுதலியவற்றால் தாக்குகை. 2. Hindrance,obstacle, impediment; தடை. முட்டுவயிற் கழறல்(தொல். பொ. 271). பன் முட்டின்றாற் றோழி நங்களவே (அகநா. 122). 3. See முட்டுப்பாடு, 1, 2. 4.Shortness, deficiency; குறைவு. மூவேழ் துறையுமுட்டின்று போகிய (புறநா. 166). 5. Difficulty, asin passing; உட்சென்று கடத்தலருமை. முட்டுடைமுடுக்கரும் (சீவக. 1216). 6. Pollution; கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள். (பெரியபு.திருஞான. 692.) 7. Menses; மாதவிடாய். (W.) 8.Tool, instrument; கருவி. கொற்றரு மிருப்பு முட்டு(திருவாலவா. 45, 8). 9. Sundry things; சில்லறைப்பொருள்கள். கட்டினேம் முட்டுக்களை (புறநா. 206,உரை). 10. Prop, support; பற்றுக்கோடு. 11.Knee; elbow; knuckle; முழங்கால் முழங்கைவிரல்கள் இவற்றின் பொருத்து. 12. Risingground, high ground; மேடு. (W.) 13. Heap;குவியல். பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன.