தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருளுதல் ; தன்னை மறத்தல் ; வெறிகொள்ளுதல் ; மாறுபடுதல் ; நிலையழிதல் ; வருந்துதல் ; தாக்கப்படுதல் ; ஐயுறுதல் ; தயங்குதல் ; கலத்தல் ; போலுதல் ; நெருங்குதல் ; கைகலத்தல் ; அறிவுகெடுதல் ; கலக்கமுறுதல் ; உணர்ச்சியிழத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலையழிதல். ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு (மணி. 23, 104). 5. To be ruined, desolated;
  • வருந்துதல் முயங்கல் விடாஅ விவையென மயங்கி (அகநா. 26). 6. To be distressed;
  • மாறுபடுதல். மேனியு முள்ளமு மயங்காத்தேவர் (கல்லா. 82, 30). 4. To be changed, as in one's mind or body;
  • வெறி கொள்ளுதல். தாமயங்கி யாக்கத்துட் டூங்கி ... வாழ்நாளைப் போக்குவார் (நாலடி, 327) . 3. To be intoxicated;
  • பரவசமாதல். 2. To be charmed, allured;
  • மருளுதல். 1. To be confused, bewildered;
  • தாக்கப்படுதல். காலொடு மயங்கிய கலிழ்கடலென (பரிபா. 8, 31). 7. To be disturbed, tossed about, as sea;
  • உணர்ச்சியிழத்தல். 16. To become unconscious;
  • சந்தேகமடைதல். 8. To be in doubt;
  • தயங்குதல். அந்தக் காரியத்தைச் செய்ய மங்குகிறான். 9. To be overwhelmed with anxiety;
  • கலத்தல். 10. To be mixed up;
  • போலுதல். காரிருண் மயங்குமணி மேனியன் (பரிபா. 15, 50). 11. To resemble;
  • நெருங்குதல். முகிழ் மயங்குமுல்லை (பரிபா. 15, 39). 12. To be crowded together;
  • கைகலத்தல். தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து (புறநா. 19). 13. To engage in a fight;
  • அறிவு கெடுதல். புலான் மயங்கான் (ஏலா. 2). 14. To lose one's senses;
  • கலக்கமுறுதல். மயங்கின வாய்ப்புளும் (பு. வெ. 10, சிறப். 11). 15. To be in a state of disorder or confusion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To beconfused, bewildered; மருளுதல். 2. To becharmed, allured; பரவசமாதல். 3. To beintoxicated; வெறிகொள்ளுதல். தாமயங்கி யாக்கத்துட் டூங்கி . . . வாழ்நாளைப் போக்குவார் (நாலடி,327). 4. To be changed, as in one's mind orbody; மாறுபடுதல். மேனியு முள்ளமு மயங்காத்தேவர் (கல்லா. 82, 30). 5. To be ruined, desolated;நிலையழிதல். ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு(மணி. 23, 104). 6. To be distressed; வருந்துதல்.முயங்கல் விடாஅ விவையென மயங்கி (அகநா. 26).7. To be disturbed, tossed about, as sea;
    -- 3073 --
    தாக்கப்படுதல். காலொடு மயங்கிய கலிழ்கடலென(பரிபா. 8, 31). 8. To be in doubt; சந்தேகமடைதல். 9. To be overwhelmed with anxiety;தயங்குதல். அந்தக் காரியத்தைச் செய்ய மயங்குகிறான். 10. To be mixed up; கலத்தல். 11. Toresemble; போலுதல். காரிருண் மயங்குமணிமேனியன் (பரிபா. 15, 50). 12. To be crowdedtogether; நெருங்குதல். முகிழ் மயங்குமுல்லை(பரிபா. 15, 39). 13. To engage in a fight;கைகலத்தல். தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து(புறநா. 19). 14. To lose one's senses; அறிவுகெடுதல். புலான் மயங்கான் (ஏலா. 2). 15. To bein a state of disorder or confusion; கலக்கமுறுதல். மயங்கின வாய்ப்புளும் (பு. வெ. 10, சிறப். 11).16. To become unconscious; உணர்ச்சியிழத்தல்.