தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவிடுதல் ; பொருட்படுத்துதல் ; கருதுதல் ; தியானித்தல் ; துணிதல் ; கடைதல் ; கொழுத்தல் ; மதங்கொள்ளுதல் ; சாதல் ; உப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢ அளவிடுதல். மண்விழைந்து வாழ்நாண்¢ மதியாமை (திரிகடு. 29). 1. To estimate, value, compute ;
  • பொருட்படுத்துதல். மண்ணாள்வான் மதித்துமிரேன் (திருவாச. 5, 12). 2. To esteem, regard, respect, reverence ;
  • கருதுதல். ஆடலை மதித்தான் (கந்தபு. திருவிளை. 1). 3. To think; to consider :
  • தியானித்தல் நந்தியங் குரவனை மதிப்பாம் (விநாயகபு. கடவுள். 13). 4. To meditate upon ;
  • . See குழந்தை மதித்துப் பிறந்தது .Loc.
  • கடைதல். மந்தரங்கொடு மதித்தநாள் (சேதுபு. சங்கர. 20). To churn ;
  • கொழுத்தல். மதித்தெதிர் தெவ்வர் (இரகு. மீட்சி. 37). 1. To be haughty ;
  • மதங்கொள்ளுதல். மதித்த களிற்றினின் (கம்பரா. பஞ்சசே. 56). 2. To be furious ;
  • உப்புதல். உடம்பு மதித்து விட்டது. Loc. 3. To bloat ;
  • துணிதல். தேர்மணிக் குரலென விவண் மதிக்குமன் (கலித். 126, 7). 5. To decide; to ascertain; to be assured of ;

வின்சுலோ
  • --மதிப்பு, ''v. noun.'' Ap prizing, estimating, valuation, எண்ணல். 2. Considering, கருதல். 3. Turning, churning, கடைதல். 4. Being libidinous, மதத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < மதி. 1. Toestimate, value, compute; அளவிடுதல். மண்விழைந்து வாழ்நாண் மதியாமை (திரிகடு. 29). 2. Toesteem, regard, respect, reverence; பொருட்படுத்துதல். மண்ணாள்வான் மதித்துமிரேன் (திருவாச. 5,12). 3. To think; to consider; கருதுதல். ஆடலைமதித்தான் (கந்தபு. திருவிளை. 1). 4. To meditateupon; தியானித்தல். நந்தியங் குரவனை மதிப்பாம்(விநாயகபு. கடவுள். 13). 5. To decide; to ascertain; to be assured of; துணிதல். தேர்மணிக் குரலென விவண் மதிக்குமன் (கலித். 126, 7).
  • 11 v. tr. < math. Tochurn; கடைதல். மந்தரங்கொடு மதித்தநாள் (சேதுபு.சங்கர. 20).
  • 11 v. intr. < mada. 1.To be haughty; கொழுத்தல். மதித்தெதிர் தெவ்வர்(இரகு. மீட்சி. 37). 2. To be furious; மதங்கொள்ளுதல். மதித்த களிற்றினின் (கம்பரா. பஞ்சசே. 56). 3. To bloat; உப்புதல். உடம்பு மதித்துவிட்டது. Loc.
  • 11 v. intr. Corr. of மரி-.குழந்தை மதித்துப் பிறந்தது. Loc.