- மண்டலித்தல். -tr. To be or become circular, to form into circles or ringlets, to coil;
- அழித்தல். மணிகொள் குட்டிமமட்டித்து (கம்பரா. பொழிலிறுத். 24). 1. To destroy;
- வட்டாமாக்குதல். திரடோள்கண் மட்டித்தாட (தேவா. 12, 3). To make circular;
- முறித்தல். மாங்கனிப் பணை மட்டித்து (கம்பரா. பொழிலிறுத். 25). 2. To break;
- பூசுதல். குளிர் சாந்த மட்டித்து (திவ். நாய்ச். 6, 10). 3. To put on, clap on, daub, as sandal paste;
- மெழுகுதல். மணிநிலஞ் சந்தனங்கொண்டு மட்டியா (மேருமந். 629). 4. To cleanse, as the floor;
- பிசைதல். சுண்ணமொடு மட்டித்துக் கலந்த குங்குமக் கொழுஞ்சேறு (பெருங். உஞ்சைக். 40, 222-3). 5. To mix and knead;
- நிச்சயித்தல். (J.) 6. To ascertain, discover, determine;
|