தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலரும்பருவத்து அரும்பு : மலர் ; செவ்வி ; காலம் ; தக்க சமயம் ; வாழ்நாள் ; பொழுது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலர் (திவா.) போதார் கூந்தல் (பு.வெ, 12, இருபாற்.5, கொளு) . 2. Flower;
  • பொழுதில். ஆட்கொண்டபோதே கொண்டிலையோ (திருவாச.33,7). When, while, during the time that;
  • . See பொழுது, 1,2,3. ( சூடா.) போதுஞ் சென்றது குடபால் (கம்பரா. வனம்புகு. 19). -adv.
  • செவ்வி. (திருவிருத்.76, அரும் பக.389) 3. Freshness, beauty;
  • மலரும்பருவத்தரும்பு. காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள்,1227). 1. Flower bud ready to open;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (contr. of போழ்து) time, பொழுது; 2. (with a participle) when, while; 3. a flower bud. It signifies never when joined with உம் followed by a negative as in அவன் ஒருபோ தும் வரமாட்டான், he will never come. அவன் வருகிறபோது, when he comes. முன்னொருபோது, at a former time. அப்போது (அப்போ), இப்போது, எப் போதும், see, அப்பொழுது etc.
  • irreg. v. i. (போந்தது or போர்ந் தது, போதும்) go, pass, செல்லு; 2. be enough, be sufficient, adequate, பற்று; 3. (in some connec.) be respectable, மதிக்கப்படு. போத, adv. (inf.) sufficiently. போதக்கொடுக்க, to give as much as is sufficient. போதாத நாள், unlucky day. போதாது, it is not enough. இருவருக்கும் போதாது, it is not enough for both; 2. both are on bad terms. போதாமல், without sufficing. போதாமை, insufficiency, displeasure between persons. போதுஞ் (போதுமான) சாட்சி, a competent witness. போதும், it is sufficient, it will do. "போதுமென்ற மனதே பொன் செய்யு மருந்து," "a contented mind is a continual feast" (Proverb) போதுமென்றிருக்க, to be content. போதும் போதாது, it is scarcely enough. போந்த (போர்ந்த) fit, suitable, competent. போந்த காலம், proper time. போந்த திரவியம், sufficient money. போந்தபடி, போதுமானபடி, sufficiently. போந்த மனுஷன், a competent man.

வின்சுலோ
  • [pōtu] ''s.'' [''contraction of'' போழ்து.] Time, as பொழுது, காலம். 2. ''[with a par ticiple.]'' When, while, at the time, as அவன்வந்தபோது, when he came. 3. A flower bud ready to open, மலரும்பருவத்தரும்பு. 4. A flower, பூ--''Note.'' it signifies never, when joined with உம் followed by a negative, as ஒருபோதும்வரமாட்டான், he will never come. அப்போது--அப்பொழுது; that time, இப் போது--இப்பொழுது, this time; முன்னொருபோது, at a former time.
  • [pōtu] கிறது, போந்தது, ம், போத, ''v. n.'' To go, to come, to pass, to proceed. See போதா. ''(p.)'' 2. ''(c.)'' To be sufficient, to be adequate, திருத்தியாக, [''also'' பற்ற.] 3. To be competent, adapted or suitable to, தகுதியாக. 4. ''[in some connec.]'' To be respectable, மதிக்கப்பட.-''Note.'' The infinitive போத is used adverbially, as போதக்கொடுக்க, to give to satisfaction. அங்கேபோந்தான். He went there. ''(p.)'' போதும்போதாது. It is scarcely sufficient. போதும். [''improp.'' போரும்.] It is enough, that will do. இருவருக்கும்போதாது. They are on bad terms. போதா. ''neut. pl.'' They cannot go or come. 2. They are not enough, as போதமாட்டா. போதாது. It is not enough, &c. போதாநிற்கிறேன். I come, or I go. ''(p.)'' போதமாட்டாது. It is insufficient.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. போது-. cf. bōdha.1. Flower bud ready to open; மலரும்பருவத்தரும்பு. காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள்,1227). 2. Flower; மலர். (திவா.) போதார் கூந்தல்(பு. வெ. 12, இருபாற். 5, கொளு). 3. Freshness,beauty; செவ்வி. (திருவிருத். 76, அரும். பக். 389.)
  • cf. போழ்து. n. [O.K. pōḻtu.]See பொழுது, 1, 2, 3. (சூடா.) போதுஞ் சென்றது குடபால் (கம்பரா. வனம்புகு. 19).--adv. When,while, during the time that; பொழுதில். ஆட்கொண்டபோதே கொண்டிலையோ (திருவாச. 33, 7).