தமிழ் - தமிழ் அகரமுதலி
  பாரம் , சுமை ; கனம் ; மலை ; சிறுகுன்று ; கல் ; பூமி ; பொறுமை ; அடக்கம் ; கருப்பம் ; வலிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • மலை, நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை (ஐங்குறு.430). 2. Mountain;
 • சிறு குன்று. அறையும் பொறையு மணந்த தலைய (புறநா.118). 1. Small hill, hillock;
 • பாரம். (திவா.) குழையு மிழையும் பொறையா (கலித். 90). 3. [K. poṟe.] Burden, load;
 • வலிமை. போதகாதிபன் முதலை வாயிடைப் பொறை தளர்ந்து (பாரத. வேத்திரகீய. 1). 9. Strength;
 • கருப்பம். (சூடா.) 8. Pregnancy;
 • அடக்கம். அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையு நாணு நீங்கினார் (கம்பரா. மீட்சி. 88). 7. Calmness; meekness;
 • பொறுமை. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (குறள், 153). 6. Patience; forbearance;
 • கனம். பொறை தந்தன காசொளிர் பூண் (கம்பரா. அதிகா. 40). 4. [K. poṟe.] Weight, heaviness;
 • பூமி. (பிங்.) பொறைதாத் திரண்ட தாரு (இரகு. தசரதன்சாப. 50). 5. Earth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. (பொறு) burden, load, சுமை; 2. weight, பாரம்; 3. a mountain, மலை; 4. the earth, பூமி; 5. patience, பொறு மை; 6. a stone to close up a channel or a spout, சலதாரை முதலிய அடைக் குங் கல். பொறையன், any king of the Sera dynasty, as lord of a mountainous district; 2. Yudhistra, the eldest of the Pandavas, famed for his patience. பொறையிலார், savages, hunters, as unforbearing. பொறையுடைமை, possession of patience.

வின்சுலோ
 • [poṟai] ''s.'' Burden, load, சுமை. 2. Weight, gravity, பாரம். 3. A mountain, மலை. 4. Earth, world, பூமி. 5. A stone to close up a channel, or a spout, சலதா ரைமுதலியஅடைக்குங்கல். 6. Patience, for bearance, பொறுமை; [''ex'' பொறு, ''v.''] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < பொறு-. 1. Small hill,hillock; சிறு குன்று. அறையும் பொறையு மணந்ததலைய (புறநா. 118). 2. Mountain; மலை. நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை (ஐங்குறு. 430).3. [K. poṟe.] Burden, load; பாரம். (திவா.)குழையு மிழையும் பொறையா (கலித். 90). 4. [K.poṟe.] Weight, heaviness; கனம். பொறை தந்தனகாசொளிர் பூண் (கம்பரா. அதிகா. 40). 5. Earth;பூமி. (பிங்.) பொறைதரத் திரண்ட தாரு (இரகு.தசரதன்சாப. 50). 6. Patience; forbearance;
  -- 2948 --
  பொறுமை. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை(குறள், 153). 7. Calmness; meekness; அடக்கம்.அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையுநாணு நீங்கினார் (கம்பரா. மீட்சி. 88). 8. Pregnancy;கருப்பம். (சூடா.) 9. Strength; வலிமை. போதகாதிபன் முதலை வாயிடைப் பொறை தளர்ந்து (பாரத.வேத்திரகீய. 1).