தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணி ; உலக்கை முதலியவற்றிற்கு இடும் பூண் ; கவசம் ; யானைக்கோட்டின் கிம்புரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அணி நுண்பூணாகம் வடுகொள முயங்கி (மதுரைக். 569). 1. Ornament, jewel;
  • யானைக்கோட்டின் கிம்புரி. (பிங்.) 3. Ornamental knob of an elephant's tusk;
  • உலக்கை தடி முதலியவற்றின் முனையிற்செறித்த வளையம் புண்செறிந்த தலையையுடைய தண்டுகோலை (புறநா. 243, உரை). 2. Ring, ferrule, cap;
  • கவசம் பூணணிமார்ப போற்றி (சீவக 264). 4. Armour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ring, a ferrule, a cap; 2. an ornamental knob; 3. an ornament, a jewel, ஆபரணம். பூணாரம், ornaments, jewels. பூணாரவெலும்பு, the collar bone. பூண்கட்ட, -போட, to fasten on a ferrule.
  • பூணு, III. v. t. & V. v. i. (fut. பூணுவேன் and பூண்பேன், adv. part. பூண்டு, also பூணி), put on, clothe with ornaments, தரி; 2. undertake, enter upon, துணி; 3. be fettered, விலங்கிடப்படு; 4. be yoked, பூட்டப்படு; 5. become involved in (a blame, crime or guilt); 6. be got as learning or knowledge. காரியத்தைப் பூணாமல் (பூணிக்கொள் ளாமல்) போனான், he did not engage in the business. பூணு நூல், பூணூல், the string which the twice-born wear over their shoulder. பூணு நூல் கலியாணம், பூணூற்கலி யாணம், the ceremony of investing with the sacred string.

வின்சுலோ
  • [pūṇ] ''s.'' A ring, ferrule, cap, உலக்கை முதலியவற்றின்பூண். 2. An ornamental knob of an elephant's tusk, கிம்புரி. ''(c.)'' 3. A jewel, an ornament, ஆபரணம்.
  • [pūṇ ] --பூணு, கிறேன், பூண்டேன், பூண் பேன், பூணுவேன், பூண, ''v. a.'' or ''v. n.'' To put on, have on; to be adorned with; to wear arms or the brahmanical string, தரி க்க. 2. To be fettered, manacled, shackled, மாட்டப்பட. 3. To be yoked, harnessed, &c., as பூட்டப்பட. 4. To take upon, un dertake a business, a course of duties, &c. துணிய. 5. To become involved in, as blame, crime, guilt, குற்றப்பட. 6. To be come entangled, as a lock, to be caught, as birds in snare, &c., சிக்கிக்கொள்ள. 7. To take a dye, சாயந்தோய்க்கப்பட. 8. To be got as learning, knowledge, அடைய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூண்-. [T. ponnu, M. pūṇ.]1. Ornament, jewel; அணி. நுண்பூணாகம் வடுக்கொள முயங்கி (மதுரைக். 569). 2. Ring, ferrule,cap; உலக்கை தடி முதலியவற்றின் முனையிற்செறித்தவளையம். பூண்செறிந்த தலையையுடைய தண்டுகோலை(புறநா. 243, உரை). 3. Ornamental knob of anelephant's tusk; யானைக்கோட்டின் கிம்புரி. (பிங்.)4. Armour; கவசம். பூணணிமார்ப போற்றி (சீவக.264).