தமிழ் - தமிழ் அகரமுதலி
    இணைக்கப்படுகை ; உடன்பாடு ; பொருத்து ; கட்டு ; உத்தரவாதம் ; விலங்குகளின் பெண் ; பெண்மான் ; பூமாலை ; புறந்தருகை ; விருப்பம் ; தெப்பம் .
    (வி) பிணையிடு ; கட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறந்தருகை. (தொல். சொல்.338.) 1. protecting with loving care;
  • தெப்பம். துயர்க்கடலை நீந்தும் பிணையே (மான்விடு. 52). Raft, boat;
  • உடன்பாடு. (யாழ். அக.) 5. Consent, agreement;
  • விருப்பம். (தொல். சொல். 338, சேனா.) 2. Love desire;
  • இணைக்கப்படுகை. பிணையார மார்பம் (பு. வெ. 12, 6). 1. Being knit together;
  • பொருத்து. இதையுங் கயிறும் பிணையு மிரிய (பரிபா. 10, 54). 2. Joint in planks;
  • கட்டு. 3. Tie ligature, bandage;
  • பூமாலை. வெறிகொண்ட முல்லைப் பணை மீது (பெரியபு. கண்ணப். 57). 8. Flower garland;
  • உத்தரவாதம். பிணைக் கொடுக்கிலும் போகவொட்டாரே (திவ். பெரியாழ். 4, 5, 2). 4. Bail security, guarantee; pledge;
  • விலங்கின் பெண். (பிங்.) 6. Female of animals;
  • பெண்மான் பிணையேர் மடநோக்கும் (குறள், 1089). 7. Doe, hind, female deer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bail, security, surety, சாமீன்; 2. desire, விருப்பம்; 3. consent, agreement, உடன்பாடு; 4. a flower garland, பூமாலை; 5. female of the elephant, horse, camel, ass, deer, pig, bos grunniens and dog; 6. a deer, மான்; 7. v. n. same as பிணையல். மாடுகள் பிணைவருகிறது, the oxen go round about a threshing. பிணைகாரன், -யாளி, one who stands bail or is surety for another. பிணை கொடுக்க, -வைக்க, to give security. பிணைக்கடுதாசி, -ச்சீட்டு, -முறி, -உறுதி, a bail bond. பிணை சொல்ல, to become bail for one by promise. பிணை நிற்க, -ப்பட, -போக, to stand surety for one. பிணை வாங்க, to take security. நபர் பிணை, personal security or bail. ரொக்கப் பிணை, money-security.
  • II. v. i. entwine, இணை; 2. copulate, புணர். பிணைவு, v. n. closeness, connexion, copulation.
  • VI. v. t. tie together, unite, இணை; 2. bind, yoke, கட்டு. அறுந்த இழையைப் பிணைக்க, to tie broken threads together. ஒருவன் பேரில் இல்லாதும் (இல்லாததும்) பொல்லாதும் (பொல்லாததும்) பிணைக்க, to calumniate one. பிணையல் (vulg. பிணைசல்) v. n. brace, couple, pair, a row of cattle; 2. the hinge of a gate or chest; 3. fastening of a yoke; 4. a garland or string of beads entwined; 5. (a negative form of the optative) join not, பிணைக்காதே. பிணையலடிக்க, பிணையடிக்க, பிணைகட்ட, to tie the oxen in a row together for threshing. பிணையல் மாடு, பிணை மாடு, an ox yoked or tied to another.

வின்சுலோ
  • [piṇai] ''s.'' Bail, security, guaranty, pledge, suretyship. See ஜாமீன். ''(c.)'' 2. Consent, agreement, உடன்பாடு. 3. Tie, ligature, bandage, கட்டு. 4. Flower-garland, பூமாலை. 5. Female of the elephant, horse, camel, ass, deer, pig, bosgrunniens, and dog, யானை முதலியவற்றின்பெண். 6. Deer, மான். 7. Desire, love, affection, ஆசை. (சது.) 8. As பிணையல். மாடுகள்பிணைவருகிறது. The oxen go round about the threshing floor. ''(R.)''
  • [piṇai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To entwine, to conjoin as இணைய 2. To copu late, ''[said of snakes]'' புணர--as பாம்புபிணை தல். ''(c.)''
  • [piṇai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To join together; to link, to unite, to bind or fasten together, to couple, to join rafters, &c., as இணைக்க. 2. To tie, கட்ட. ''(c.)'' அவன்மேலில்லாததும்பொல்லாததும்பிணைத்தான். . . He has calumniated him, ''(lit.)'' bound upon him falsehood and evil.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிணை-. 1. Protectingwith loving care; புறந்தருகை. (தொல். சொல்.338.) 2. Love, desire; விருப்பம். (தொல். சொல்.338, சேனா.)
  • n. < பிணை-. 1. Beingknit together; இணைக்கப்படுகை. பிணையார மார்பம் (பு. வெ. 12, 6). 2. Joint in planks; பொருத்து.இதையுங் கயிறும் பிணையு மிரிய (பரிபா. 10, 54).3. Tie, ligature, bandage; கட்டு. 4. Bail,security, guarantee; pledge; உத்தரவாதம். பிணைக்கொடுக்கிலும் போகவொட்டாரே (திவ். பெரியாழ். 4, 5,2). 5. Consent, agreement; உடன்பாடு. (யாழ்.அக.) 6. Female of animals; விலங்கின் பெண்.(பிங்.) 7. Doe, hind, female deer; பெண்மான்.பிணையேர் மடநோக்கும் (குறள், 1089). 8. Flowergarland; பூமாலை. வெறிகொண்ட முல்லைப் பிணைமீது (பெரியபு. கண்ணப். 57).
  • n. perh. பிணை-. cf. புணை. Raft,boat; தெப்பம். துயர்க்கடலை நீந்தும் பிணையே (மான்விடு. 52).