தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; பக்கம் ; இடம் ; ஒப்பு ; நன்மை ; தகுதி ; நலம் ; இயல்பு ; ஒழுக்கம் ; தோழமை ; துணையானவர் ; இணக்கம் ; ஒருசார்பு ; நாணயம் ; வழி ; தொழுமிடம் ; ஆட்டுக்கிடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்சம். வேந்த னொருவற்குப் பாங்குடினும் தாந்தாமொருவர்கட் பாங்கு படாதோர் (யாப். வி. 96, பக். 515). 13. Partisanship, interest favour;
  • இணக்கம். (W.) நின்னோடு பாங்கலா மன்னர் (இலக். வி. 611, உதா.) 12. Accommodation, conciliation;
  • துணையானவ-ன்-ள். வேல் விடலை பாங்கா (திணைமாலை. 87). 11. Companion;
  • தோழமை. நீயும் பாங்கல்லை (திவ். திருவாய். 5, 4, 2). 10. Companionship;
  • ஒழுக்கம். பாங்குடையீர் (திருவாச. 7, 3). 9. Fashion; style; manners, carriage; custom; gentility, politeness;
  • இயல்பு. (W.) 8. Nature; propriety;
  • தகுதி. பாங்குற வுணர்தல் (தொல். சொல். 396). 6. Agreeableness, suitability, adaptability, appropriateness;
  • அழகு. பாங்குறக் கூடும் பதி (பு. வெ, 9, 51, கொளு). 5. Beauty, fairness; neatness;
  • நன்மை. பாங்கலாநெறி (வாயுசங். இருடி. பிரம. 11). 4. Goodness;
  • ஒப்பு. பாங்கருஞ் சிறப்பின் (தொல். பொ. 78). 3. Equality, likeness;
  • இடம். பட்டிமண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் (மணி. 1, 61). 2. Place, location;
  • பக்கம். காடுகொண்டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட். 2). 1. Side, neighbourhood;
  • சௌக்கியம். திருமேனி பாங்கா? Vaiṣṇ. 7. Health;
  • ஆட்டுக்கிடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன. Tinn. Palm-leaves, etc., required for constructing a sheep-pen;
  • தொழமிடம். Muham. Cell for prayer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. side (right or left) பக்கம்; 2. favour, பட்சம்; 3. beauty, அழகு; 4. fitness, propriety, தகுதி; 5. accommodation, conciliation, இணக்கம். வடுகப் பாங்காய், according to the mode of the Vaduga people. பாங்காய், well, properly, in a becoming manner. பாங்காய்ச் சமைக்க, to cook well, to prepare a fine dish. பாங்கான ஊர், a town well-situated and pleasant, having good fields and sufficient water. பாங்கு பண்ண, to dress neatly. பாங்கு பரிசனை, --பாவனை, good manners, genteel dress and behaviour.

வின்சுலோ
  • [pāngku] ''s.'' Side, right or left, பக்கம். 2. Party, interest, favor, பட்சம்; [''ex'' பங்கு.] (p.) 3. Beauty, fairness, neatness, அழகு. 4. Fashion, style, manners, carriage, custom, gentility, politeness, யோக்கியம். 5. Agreeableness, suitableness, adaptedness, appropriateness, தகைமை. 6. Propriety, peculiarity, உரிமை. 7. Accommodation, conciliation, இணக்கம். திருவுளப்பாங்கின்படிநடக்கும். It will happen as God appoints. பாங்கானஊர்--பாங்குபட்டடையுண்டானஊர். A town well situated and pleasant, supplied with good water, and surrounded by corn fields.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. pāṅgu, M. pāṅṅu.]1. Side, neighbourhood; பக்கம். காடுகொண்டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட். 2). 2. Place,location; இடம். பட்டிமண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் (மணி. 1, 61). 3. Equality, likeness; ஒப்பு.பாங்கருஞ் சிறப்பின் (தொல். பொ. 78). 4. Goodness; நன்மை. பாங்கலாநெறி (வாயுசங். இருடி.பிரம. 11). 5. Beauty, fairness; neatness; அழகு.பாங்குறக் கூடும் பதி (பு. வெ. 9, 51, கொளு). 6.Agreeableness, suitability, adaptability, appropriateness; தகுதி. பாங்குற வுணர்தல் (தொல். சொல்.396). 7. Health; செளக்கியம். திருமேனி பாங்கா?Vaiṣṇ. 8. Nature; propriety; இயல்பு. (W.) 9.Fashion; style; manners, carriage; custom;gentility, politeness; ஒழுக்கம். பாங்குடையீர் (திருவாச. 7, 3). 10. Companionship; தோழமை.நீயும் பாங்கல்லை (திவ். திருவாய். 5, 4, 2). 11.Companion; துணையானவ-ன்-ள். வேல் விடலைபாங்கா (திணைமாலை. 87). 12. Accommodation,conciliation; இணக்கம். (W.) நின்னோடு பாங்கலாமன்னர் (இலக். வி. 611, உதா.). 13. Partisanship,interest, favour; பட்சம். வேந்த னொருவற்குப்பாங்குபடினும் தாந்தாமொருவர்கட் பாங்கு படாதோர்(யாப். வி. 96, பக். 515). 14. Means; வழி. கடன்தீர்ப்பதற்கு என் கையில் பாங்கில்லை. Nāñ.
  • n. < Persn. Cell forprayer; தொழுமிடம். Muham.
  • n. Palm-leaves, etc., required for constructing a sheep-pen; ஆட்டுக்கிடைமறிப்பதற்குரிய விரியோலை முதலியன. Tinn.