பணி
தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயல் ; தொழில் ; தொண்டு ; பணிகை ; பரக்கை ; பயன்தரும் வேலை ; நுகர்பொருள் ; அணிகலன் ; மலர்களால் அலங்கரிக்கை ; பட்டாடை ; தோற்கருவி ; வேலைப்பாடு ; வகுப்பு ; சொல் ; கட்டளை ; விதி ; வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்குந் தொழில் ; ஈகை ; நாகம் ; தாழ்ச்சி .
    (வி) தொழு , பணி , பணிஎன் ஏவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்ச்சி. (ஈடு, 10, 3, 4, ஜீ.) Lowness; meanness;
  • விதி. குஞ்சி பணியொடு பரிந்து நின்றார் (மேருமந்.123) . 3. Rule;
  • வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்குந் தொழில் நன்றிகூர் பணிக்கு மீந்து (திருவாலவா. 35, 6) 4. Profession of teaching archery and other allied arts;
  • ஈகை (யாழ். அக.) 5. Gift;
  • நாகம். (பிங்.) Cobra;
  • செயல். 1. Act, action, performance;
  • தொழில். உன்பணி நீ பணித்திலை (அஷ்டப். திருவேங்கடத்தந். 52) 2. Work, service, trade, art, pursuit;
  • தொண்டு. திருப்பணிகள் செய்வேனுக்கு (திருவாச 40, 10) 3. Services to a deity, as by a devotee; services to a temple, as construction of buildings, etc.;
  • பணிகை (பிங்) என்கடன் பணிசெய்து கடப்பதே (தேவா, 221, 9). 4. Bowing, reverencing;
  • பரக்கை (சீவக. 2531, உரை). 5. Expanding, spreading;
  • பிரயாசமான வேலை. போய்ப்புகுருகை சாலப்பணியாயிருக்கும் (ஈடு, 6, 1, 7) 6. Difficult task;
  • போக்கியப்பொருள். கலம்ப மாலையைப் பணியாக (ஈடு). 7. Object of enjoyment;
  • ஆபரணம். (பிங்.) பணியெலாம் பணியதாகி (கந்தபு. ததீசியுத். 106). 8. Jewel; ornament;
  • மலர்களால் அலங்கரிக்கை. Loc. 9. Decoration with flowers;
  • பட்டாடை. (W.) 10. Silk cloth;
  • தோற்கருவி.(பிங்) 11. Drum;
  • வேலைப்பாடு. பணி பழுத்தமைந்த பூண் (கம்பரா. இலங்கைகே. 12). 12. Workmanship;
  • வகுப்பு. (ஈடு.) 13. Row, class, order;
  • சொல். (பிங்) பல்லிருங் கூந்தல் பணிநோனாள் (கார் நாற்.24); 1. Saying, word;
  • கட்டாலை.வேற்றரசு பணிதொடங்குநின் னாற்றலொடு புகழேத்தி (புறநா.17) 2. Command, order, direction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. work, office, தொழில்; 2. service, ஊழியம்; 3. jewel, jewllery, trinkets; 4. command, order, direction, கட்டளை; 5. woven silk, பட்டுச்சேலை; 6. word, saying, சொல். பணிசெய் மகன், பணிசெய்பவன், a ser- vant to a superior; 2. one who blows the long trumpet at funerals etc; a grave-digger. பணிப்படுத்த, to manufacture. பணிப்பெண், a chamber-maid; a lady's maid. பணிமுட்டு, utensils, workman's tools. முகப்பணிசெய்ய, to shave one.
  • s. a snake, பாம்பு.
  • II. v. i. be humble, submissive; 2. be low, short, inferior (persons and things) தாழு; v. t. worship, revere, வணங்கு. கர்த்தரைப் பணிந்துகொள்ள, to worship the Lord. பணிந்தவன், one that is humble; 2. a shortish person. பணிந்தவார்த்தை, submissive word. பணிய, low down, below, less. பணியல், v. n. worship, worshipping. பணியவைக்க, to put down, to place lower. பணியார், enemies. பணிவிடை, service, work, occupation. பணிவிடை செய்ய, to serve. பணிவிடைக்காரன், a servant. பணிவு, v. n. humbleness, humility, lowness, reverene.
  • VI. v. t. say, speak, சொல்; 2. give, bestow, கொடு; 3. order, command; கட்டளையிடு; 4. lower, depress, தாழ்த்து, 5. reduce, humble, குறை.

வின்சுலோ
  • [pṇi] ''s.'' Act, action, performance, செய் கை. 2. Work, service, art, pursuit, தொழில். [''Tel.'' பநி.] 3. Jewel, jewelry, trinkets, ஆபர ணம். 4. Services to a deity, carpentry, architecture, &c., about a temple, திருப் பணி. 5. Office, trade, craft, வேலை. 6. Duties of a slave, slavery, ஊழியம். 7. Servitude, attention to a superior--as a religious mendicant, தொண்டு. 8. Com mand, order, direction, கட்டளை. 9. Word, saying, சொல். 1. Woven silk, பட்டுச்சேலை. பருத்திக்கடையில்நாய்க்குப்பணியென்ன. What business has a dog in a cotton shop? ''[prov.]''
  • [paṇi] ''s.'' A snake, பாம்பு. W. p. 594. P'HAN'IN.
  • [pṇi] கிறேன், ந்தேன், வேன், பணிய, ''v. n.'' To become, or be, low in rank, or office; to be low, as a house or branch; to be short, as a person, a post, or a tree, தாழ. 2. To bow, to bend, to stoop; to make obeisance or a courtesy, to pros trate one's self in reverence, or worship; to be humble, submissive, வணங்க. 3. To decline, as a bird, &c., இறங்க. ''(c.)'' 4. ''[prov.]'' To become inferior, to fall in price, or as wages, குறைய. 5. To be reduced in cir cumstances, எளிமையாக. 6. ''[prov.]'' To eat, to feed, ''from the posture in eating.'' See பூதகலம்பணிதல். எல்லார்க்கும்நன்றாம்பணிதல்......A humble walk is good for all. பூதம்பணிகிறதுபோலப்பணிகிறான். He gobbles up his food like an elf.
  • [pṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To say, to speak, to declare, சொல்ல. 2. To give, to bestow, கொடுக்க. (சது.) 3. To order, to command, to direct, கட்டளை யிட. ''[from Sa. B'han'a, to say.]'' 4. ''(c.)'' To lower or put low, to depress, to let down lower, to insert deeper, தாழ்த்த. 5. To degrade, to humble, to bring down; re duce in rank, degree, office, or price, குறைக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பண்ணு-. [M. paṇi.] 1.Act, action, performance; செயல். 2. Work,service, trade, art, pursuit; தொழில். உன்பணிநீ பணித்திலை (அஷ்டப். திருவேங்கடத்தந். 52). 3.Services to a deity, as by a devotee; services toa temple, as construction of buildings, etc.;தொண்டு. திருப்பணிகள் செய்வேனுக்கு (திருவாச.40, 10). 4. Bowing, reverencing; பணிகை.(பிங்.) என்கடன் பணிசெய்து கடப்பதே (தேவா.221, 9). 5. Expanding, spreading; பரக்கை. (சீவக.2531, உரை.) 6. Difficult task; பிரயாசமான வேலை.போய்ப்புகுருகை சாலப்பணியாயிருக்கும் (ஈடு, 6, 1,7). 7. Object of enjoyment; போக்கியப்பொருள்.கலம்ப மாலையைப் பணியாக (ஈடு). 8. Jewel; ornament; ஆபரணம். (பிங்.) பணியெலாம் பணியதாகி(கந்தபு. ததீசியுந். 106). 9. Decoration withflowers; மலர்களால் அலங்கரிக்கை. Loc. 10. Silkcloth; பட்டாடை. (W.) 11. Drum; தோற்கருவி.(பிங்.) 12. Workmanship; வேலைப்பாடு. பணிபழுத்தமைந்த பூண் (கம்பரா. இலங்கைகே. 12). 13.Row, class, order; வகுப்பு. (ஈடு.)
  • n. < பணி-. 1. Saying, word;சொல். (பிங்.) பல்லிருங் கூந்தல் பணிநோனாள் (கார்
    -- 2458 --
    நாற். 24). 2. Command, order, direction; கட்டளை. வேற்றரசு பணிதொடங்குநின் னாற்றலொடுபுகழேந்தி (புறநா. 17). 3. Rule; விதி. குஞ்சிபணியொடு பரிந்து நின்றார் (மேருமந். 123). 4.Profession of teaching archery and otherallied arts; வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்குந்தொழில். நன்றிகூர் பணிக்கு மீந்து (திருவாலவா. 35,6). 5. Gift; ஈகை. (யாழ். அக.)
  • n. < phaṇin. Cobra; நாகம்.(பிங்.)
  • n. < பணி-. Lowness; meanness; தாழ்ச்சி. (ஈடு, 10, 3, 4, ஜீ.)