பணித்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்த்துதல் ; குறைத்தல் ; மிதித்தல் ; அருளிச் செய்தல் ; ஆணையிடுதல் ; ஏவுதல் ; கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருளிச்செய்தல். வாய்திறந் தொன்று பணித்துண்டு (திவ்.பெரியதி.2, 8, 9); 1. To say, speak, declare, user of a superior;
  • ஆணையிடுதல். வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம் (மணி, 20, 10) 2. To order, command, direct;
  • கொடுத்தல். திருவிரனெகிழ்த்து வாள்பணித்தான் (தேவா.685, 8) 3. To give, bestow;
  • தாழ்த்துதல். வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப (பு.வெ4, 9, கொளு). 1. To lower or lead down, degrade, humble;
  • குறைத்தல். (w.) 2. To reduce, as price;
  • மிதித்தல். நந்து மாமையும் பணிந்து (சீவக.2109) 3. To set foot on, tread;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of பணி-.1. To lower or lead down, degrade, humble;தாழ்த்துதல். வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப (பு. வெ.4, 9, கொளு). 2. To reduce, as price; குறைத்தல். (W.) 3. To set foot on, tread; மிதித்தல்.நந்து மாமையும் பணித்து (சீவக. 2109).
  • 11 v. tr. cf. bhaṇ. [M.paṇikka.] 1. To say, speak, declare, used of asuperior; அருளிச்செய்தல். வாய்திறந் தொன்றுபணித்ததுண்டு (திவ். பெரியதி. 2, 8, 9). 2. Toorder, command, direct; ஆணையிடுதல். வீயாவிழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம் (மணி. 20, 10). 3.To give, bestow; கொடுத்தல். திருவிரனெகிழ்த்துவாள்பணித்தான் (தேவா. 685, 8).