தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேனை ; அறுவகைப் படைகள் ; திரள் ; சுற்றம் ; ஆயுதம் ; கருவி ; சாதனம் ; காண்க : இரத்தினத்திரயம் ; முசுண்டி ; கலப்பை ; குதிரைக்கலணை ; யானைச்சூல் ; போர் ; கல் முதலியவற்றின் அடுக்கு ; செதிள் ; சமமாய்ப் பரப்புகை ; படுக்கை ; உறக்கம் ; மேகப்படை .
    (வி) உண்டாக்கு ; படைஎன் ஏவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர். (சது.) 13.Battle, contest, war, engagement;
  • கல் முதலியவற்றின் அடுக்கு. படையமை யிட்டிகை (பெருங். இலாவாண. 5, 41) 14. Layer, stratum, as in building a wall; flake;
  • செதிள். (w.) 15. Scale;
  • சமமாய்ப் பரம்புகை. படையமைத் தியற்றிய மடையணிப் பள்ளியுள் (பெருங். உஞ்சைக் 43, 186-7) 16. Spreading evenly
  • படுக்கை. (பிங்.) படையத்தோங்கிய பல் பூஞ் சேக்கை (பெருங். உஞ்சைக். 33, 107) 17. Bed;
  • நித்திரை. (சூடா.) 18. Sleep;
  • மேகப்பற்று 19. Ringworm;
  • ஆயுதம். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (குறள், 828) 5. Weapons, arms of any kind;
  • கருவி 6. Instrument, implement, tool
  • சாதனம். செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள், 555) 7. Means, agency;
  • படை மூன்றும் (சீவக. 2813) 8. (Jaina.) Triad of excellent things;See இரத்தினத்திரயம்.
  • முசுண்டி (பிங்.) 9. A sledge-like weapon, used in war;
  • கலப்பை. (பிங்.) படையுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு. 7) 10. Ploughshare;
  • குதிரைக்கலனை. பசும்படை தரீஇ (பெரும்பாண். 492) 11. Saddle;
  • யானைச்சூல். படைநவின்ற பல்களிறும் (பு. வெ. 9, 26) 12. Covering and trappings of an elephant;
  • சேனை. (பிங்.) படையியங் கரவம் (தொல். பொ. 58) 1. Army
  • மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்ற அறுவகைச்சேனை. (குறள், 762, உரை.) 2. Forces for the defence of a kingdom, of six kinds, viz., mūla-p-paṭai, kūli-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-paṭai, tuṇai-p-paṭai, pakai-p-paṭai;
  • திரள். Colloq. 3. Mob, rabble, crowd;
  • பரிவாரம். அவன் படைகளுக்கு யார் போட்டுமுடியும்? 4. Relations and attendants;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a layer in a mud wall, அடுக்கு; 2. an army, சேனை; 3. battle, warfare போர்; 4. a weapon, arms to any kind, ஆயுதம்; 5. a plough- share, கொழு; 6. a saddle, கல்லணை; 7. a mob, a rabble, திரள். படை கூட்ட, to gather troops. படைக் கப்பல், a man of war. படைக்கலம், a weapon, an instrument. படைச்சனம், படையாள், an army, military troops. படைச்சால், a furrow in ploughing. படைத்தலைவன், the captain or commander of an army, a military reader. படைப்பவிஞ்சு, battle-array. படைப் பௌஞ்சு. படைமுகம், the front or van of an army. படை முஸ்திப்பு, -முஸ்தீது, accoutrements of war. படையாளர், படைவீரர், warriors. படையிறங்குதல், encamping of an army. படையெடுக்க, to prepare for war, to lead a warlike expedition. படையெழுச்சி, v. n. expedition of an army; 2. as படைப்பவுஞ்சு. படைவகுப்புகள், the wings or divisions of an army. படைவாத்தியம், band of music for an army, material music. படைவாள், plough-share, a plough. படைவீடு, an arsenal, armoury. படைவீரன், a warrior, a hero. ஒளிபடை, பதி-, மேன்-, an ambuscade. குத்துப்படை, lancers of an army. தடுபடை, see தடு. வெட்டுப்படை, swordsmen.
  • VI. v. t. make, create, சிருஷ்டி; 2. set in order, ஒழுங்குப்படுத்து; 3. keep and sustain (as a wife etc.) ஆதரி; 4. offer (boiled rice etc. to an idol). பெண்சாதியைப் படைக்க, to keep & sustain a wife. அவனை நன்றாய்ப்படைத்தான், he has served him up, he has given him a good flogging. படைத்தோன், the creator. படைப்பு, v. n. creating; 2. creature; 3. meat-offering.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • paTTaaLam பட்டாளம் army; (m. pl.) forces, troops

வின்சுலோ
  • [pṭai] ''s.'' Layer, or stratum, in building, அடுக்கு. 2. Flake, scale, exfoliation, desqua mation, செதிள். 3. Army, சேனை. 4. A mob, rabble, mixed multitude, திரள். 5. Battle, contest, warfare, engagement, போர். (சது) 6. Weapon, arms of anny kind, ஆயுதம். 7. Instrument, implement, tool, கருவி. 8. Plough-share, கலப்பையினோருறுப்பு. 9. A saddle, கல்லணை. 1. Lying down for sleep, சயனிக்கை; [''ex'' படு, ''v. a.''] அஞ்சு, ஆறு, ஏழுபடை. The wall has five six or seven layers. படைமுறிகின்றது. The army is defeated. படையிற்பட்டான். He fell in battle.
  • [pṭai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To make, create, form, cause to be, &c. See சிருஷ்டி, ''v.'' 2. To present or distribute food to guests, &c., பரிமாற. (சது.) 3. To devote or offer boiled rice, &c., to the gods, manes, or idols, நிவேதிக்க. 4. To acquire, to secure, to possess, சம்பாதிக்க. 5. To keep and sustain, as a wife, child, &c., உடைத்தாக.-For compounds, explain ing the different meanings, see சோறு, புகழ், பெயர், &c. அவன்நன்றாய்ப்படைத்தான். He has served him up; ''i. e.'' given him a beating.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படு-. [K. paḍe.] 1.Army; சேனை. (பிங்.) படையியங் கரவம் (தொல்.பொ. 58). 2. Forces for the defence of akingdom, of six kinds, viz.mūla-p-paṭai,kūli-p-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-p-paṭai,tuṇai-p-paṭai, pakai-p-paṭai; மூலப்படை, கூலிப் படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்ற அறவகைச்சேனை. (குறள், 762, உரை.) 3. Mob, rabble, crowd; திரள். Colloq.4. Relations and attendants; பரிவாரம். அவன்படைகளுக்கு யார் போட்டுமுடியும்? 5. Weapons,arms of any kind; ஆயுதம். தொழுதகை யுள்ளும்படையொடுங்கும் (குறள், 828). 6. Instrument,implement, tool; கருவி. 7. Means, agency;சாதனம். செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள்,555). 8. (Jaina.) Traid of excellent things.See இரத்தினத்திரயம். படை மூன்றும் (சீவக. 2813).9. A sledge-like weapon, used in war; முசுண்டி.(பிங்.) 10. Ploughshare; கலப்பை. (பிங்.) படையுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு. 7). 11.Saddle; குதிரைக்கலனை. பசும்படை தரீஇ (பெரும்பாண். 492). 12. Covering and trappings of anelephant; யானைச்சூல். படைநவின்ற பல்களிறும்(பு. வெ. 9, 26). 13. Battle, contest, war,engagement; போர். (சது.) 14. Layer, stratum,as in building a wall; flake; கல் முதலியவற்றின்அடுக்கு. படையமை யிட்டிகை (பெருங். இலாவாண.5, 41). 15. Scale; செதிள். (W.) 16. Spreadingevenly; சமமாய்ப் பரப்புகை. படையமைத் தியற்றியமடையணிப் பள்ளியுள் (பெருங். உஞ்சைக். 43, 186-7).17. Bed; படுக்கை. (பிங்.) படையகத்தோங்கிய பல்பூஞ் சேக்கை (பெருங். உஞ்சைக். 33, 107). 18.Sleep; நித்திரை. (சூடா.) 19. Ringworm; மேகப்பற்று.