தமிழ் - தமிழ் அகரமுதலி
    மட்டை முதலியவற்றின் நார் ; கயிறு ; வில்லின் நாண் ; பன்னாடை ; கல்நார் ; அன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்னாடை. நாரரி நறவி னெருமை யூரன் (அகநா. 36). 4. Web about the foot of a coconut or palmyra leaf;
  • மட்டைமுதலியவற்றின் நார். நாரின் முருங்கை நவிரல் வான்பூ (அகநா. 1). 1. Fibre, as from the bark of a leafstalk;
  • கயிறு. உள்ளமெனு நாரினாற் கட்டி (நாலடி, 153). 2. String, cord, rope, as made of fibre;
  • வில்லின்நாண். நாருள தனுவுளாய் (கம்பரா. நகர்நீங். 156). 3. Bowstring;
  • கல்நார். (தைலவ. தைல.) 6. Asbestos;
  • அன்பு. நலத்தின்க ணாரின்மை தோன்றின் (குறள், 958). 5. Love, affection, as a bond;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fibre in fruit, vegetable fibre generally, தும்பு; 2. a string, a rope, கயிறு; 3. affection, அன்பு. நாருரிக்க, to strip off bark for strings. நார்க்கயிறு, a coir-rope. நார்ப்பட்டு, --ச்சீலை, --மடி, cloth made of fibre of trees, resembling silk. `நட்புநார் அற்றன' the love of friendship (friends) is gone.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அன்பு, கயிறு.

வின்சுலோ
  • [nār] ''s.'' Vegetable fibre in fruits, &c., தும்பு. 2. Fibres from plants and the bark of certain trees, மட்டைநார். ''(c.)'' 3. String, rope, cord, கயிறு. 4. Love, affection, அன்பு, (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. nāra, K. M. nār, Tu.nāru.] 1. Fibre, as from the bark of a leaf-stalk; மட்டைமுதலியவற்றின் நார். நாரின் முருங்கைநவிரல் வான்பூ (அகநா. 1). 2. String, cord, rope,as made of fibre; கயிறு. உள்ளமெனு நாரினாற் கட்டி (நாலடி, 153). 3. Bowstring; வில்லின்நாண். நாருள தனுவுளாய் (கம்பரா. நகர்நீங். 156).4. Web about the foot of a coconut or palmyraleaf; பன்னாடை. நாரரி நறவி னெருமை யூரன்(அகநா. 36). 5. Love, affection, as a bond;அன்பு. நலத்தின்க ணாரின்மை தோன்றின் (குறள்,958). 6. Asbestos; கல்நார். (தைலவ. தைல.)