தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறப்புநாளை அறிவித்தற்குக் கட்டுங் கொடி ; அரசன் நாடோறுஞ் செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டிய கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன் நாடோறுஞ்செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டிய துவசம். நாட்கொடி நுடங்கும் வாயில் (சிலப்.15, 217). 2. Flag hoisted to celebrate the victory of a king;
  • விசேட நாளை யறிவித்தற்குக் கட்டுந் துவசம். இஞ்சி நாட்கொடி நுடங்கும் (புறநா. 341, 5). 1. Flag hoisted on an auspicious day;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Flag hoisted on an auspicious day; விசேடநாளை யறிவித்தற்குக் கட்டுந் துவசம். இஞ்சி நாட்கொடிநுடங்கும் (புறநா. 341, 5). 2. Flag hoistedto celebrate the victory of a king; அரசன்நாடோறுஞ்செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டியதுவசம். நாட்கொடி நுடங்கும் வாயில் (சிலப். 15, 217).