தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்ல ; வறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்ல. கச்சையங்களி நல்யானை. (சூளா. அரசியற். 27). Good;
  • . See நல்குரவு. கல்குயின் றன்னவென்னல் கூர்வளிமறை (புறநா. 190)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நல்ல, adj. (நன்மை) good, fair; 2. abundant, much, மிகுந்த; 3. auspicious. (In combin, ல் is changed into ற் before க, ச, த, ப & may be changed into ன் before ம & ந, sometimes also before க & ச). நல்லகாயம், severe wound; 2. good asafoetida. நல்லகாலம், நற்காலம், propitious time. நல்லசமயம், நற்சமயம், a good opportunity, a favourable time. நல்லசாமம், midnight, dead of night. நல்லதண்ணீர், fresh, potable water. நல்லதனம், friendly words. நல்லதனம்பண்ண, to reconcile, to make friends. நல்லதுதீயது, நல்லது பொல்லாதது, good and evil. நல்லத்தை, father's sister. நல்லநாள், auspicious day. நல்லநாள், பெருநாள், a great day, a holy day. நல்லபாம்பு, the cobra. நல்ல பிறப்பு, நல்ல ஜனனம், a good birth. One blessed with a tendency to freedom from transmigration and who employs his birth to attain salvation. நல்லபுத்தி, good sense, good admonition or advice. நல்லப்பன், a paternal uncle. நல்லமத்தியானம், exactly noon. நல்ல (நன்) மரணம், a happy death. நல்லம்மாள், a maternal aunt. நல்லம்மான், mother's brother. நல்லம்மான்பச்சரிசி, the name of a plant, euphorbia hypericifolia. நல்லவன், நல்லன், a good man. நல்லவேளை, a good opportunity, a proper time, an auspicious hour. நல்லா, நல்லான், a good cow. நல்லாங்கு, moral good as done to another. நல்லாங்கு பொல்லாங்கு, good & evil. நல்லாடை, fine costly cloth. நல்லார், நல்லோர், நல்லவர்கள், the good (opp. to பொல்லார்). நல்லார், men of knowledge; 2. the fair sex, மாதர்; 3. the good, நல்லவர். நல்லீரல், the liver. நல்லெண்ணெய், sesamum oil. நல்லொழுக்கம், moral conduct (opp. to தீயொழுக்கம்). நல்வழி, a good way, virtuous conduct, good parentage or descent; a small work by Avvayar. நல்வினை தீவினை, good and bad deeds, virtue and vice. நற்கதி, bliss, heaven (opp. to துர்க்கதி). நற்கருணை, (Chr. us.), the Sacrament of the Lord's Supper. நற்கருணை கொடுக்க, --பரிமாற, to administer the Lord's Supper. நற்கருணையெடுக்க, --வாங்க, to receive the Lord's Supper. நற்கிரியைகள், good works. நற்குணம், good nature. நற்குலம், a good family. நற்குறி, நற்சகுனம், a good omen, a favourable augury. நற்கோள், Jupiter, benign planets. நற்சமயம், good opportunity. நற்சலாபம், a lucrative pearl-fishery. நற்சார்பு, a virtuous tendency. நற்சீர், a good state. நற்செய்தி, auspicious tidings. நற்பிரியம், good will; 2. a shrub, pharniaceum ஓர் செடி. நற்பெண்டு, (நல்லபெண்டு), a good woman. நற்றாய், one's own mother. நன்காடு, a burning ground. நன்குரல், a well-omened sound. நன்கொடை, donation, present. நன்செய், (vul. நஞ்சை), rice fields. நன்மச்சான், (fem. நன்மச்சினி) son of a mother's brother. நன்மச்சினி, a female cousin, properly the daughter of a maternal uncle or aunt. நன்மாதிரி, a good example, a good pattern or specimen. நன்மார்க்கம், virtuous life. நன்முகம், benignity, pleasant looks. நன்னடை, good conduct. நன்னயம், gratifying words, civility, goodness. நன்னலம், excellence, beauty. நன்னிலை, observance of a proper and prescribed course of conduct; 2. religious austerities; 3. the world. நன்னுதல், a damsel, a lady; (lit.) beautiful forehead). நன்னூல், a good book, moral system; 2. Pavananthi's Tamil Grammar. நன்னெறி, path of virtue, good conduct.

வின்சுலோ
  • [nl ] --நல்ல, ''adj.'' [''in combin. before'' க, ச, த, ப. ''changed to'' ற் ''and commonly before'' ம ''to'' ன்.] Good, excellent, beneficial, eminent, நன்மையான. 2. Acceptable, desirable, agree able, ஏற்ற. 3. Abundant, copious, மிகுந்த. 4. Much, intence, அதிகமான. 5. Auspicious, propitious, fortunate, நன்னிமித்தமுள்ள.--''Note.'' It is sometimes combined with words of had meaning to show intensity, as நல்லகள் ளன், a consummate thief.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < நன்-மை. [K. nal.] Good;நல்ல. கச்சையங்களி நல்யானை (சூளா. அரசியாற். 27).
  • n. Abbrev. of நல்குரவு. Seeநல்குரவு. கல்குயின்றன்னவென்னல் கூர்வளிமறை(புறநா. 196).