தமிழ் - தமிழ் அகரமுதலி
  நன்மை ; இன்பம் ; உதவி ; கண்ணோட்டம் ; அழகு ; அன்பு ; ஆசை ; குணம் ; பயன் ; புகழ் ; உயர்வு ; நல்வாழ்வு ; நிறம் ; செம்மைநிறம் ; விருச்சிகராசி ; எருதின் விதை ; சுக்கு ; அறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • நன்மை. நலந்தானிலாத சிறியேற்கு நல்கி (திருவாச. 1, 58). 1. Goodness, virtue;
 • அழகு. தொன்னலந் தொலை பீங்கி யாந்துய ருழப்ப (கலித்.16). 2. Beauty, fairness, hand someness;
 • அன்பு. நன்னலம் மவற்கேவைத்த நங்கையே (சீவக.1336). 3. Love, affection;
 • ஆசை. பொது நலத்தார் (குறள், 915). 4. Hope, faith;
 • இன்பம். சிறந்த நின்னலத்தைச் சேரே னாய்விடில் (சீவக. 2067). 5. Delight, pleasure, gratification;
 • உபகாரம். (பிங்.) 6. Favour, kindness, benefit;
 • குணம். பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு (குறள், 984). 7. Nature, characteristic;
 • பயன். (சங். அக.) 8. Profit, advantage, utility;
 • புகழ். தந்நலம் பாரிப்பார் (குறள், 916). 9. Reputation, fame;
 • உயர்வு. நாநனி வருந்த வென்னலம் பாராட்டலின் (மணி. 21, 140). 10. Excellence;
 • கன்ணோட்டம் (w.) 11. Connivance; partiality; indulgence;
 • சுகவாழ்வு. நலந் தீங்கிலு முன்னை மறந்தறியேன் (தேவா. 946, 6). 12. Prosperity; welfare, health;
 • நிறம். செயலையந் தளிரேய்க்கு மெழினலம் (கலித். 15). 13. Colour;
 • செம்மை நிறம். நலம்பெறு கலிங்கத்து (திருமுரு. 109). 14. Red colour;
 • விருச்சிகராசி. (பிங்.) 15. Scorpio in the zodiac;
 • எருத்து விதை. (J.) 16. Testicle of a bull;
 • சுக்கு. (W.) 17. cf. நல்லம். Dried ginger;
 • அறம். நலமுழு தளைஇய புகரறு காட்சி (பரிபா. 1, 45). Virtue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a good, a beneft, நன்மை; 2. advantage, welfare, profit, பயன்; 3. testicle of a bull; 4. beauty, fairness, அழகு; 5. delight, pleasure, இன்பம்; 6. favouritism, indulgence, கண்ணோட்டம்; 7. excellence, மேன்மை; 8. dried ginger, சுக்கு. நலமாயிற்று, it is well done. நலமாய்வாங்க, to buy cheap. நலம்தட்ட, -அடிக்க, -எடுக்க, to geld, to castrate. நலம்பொலம், நலம் இளப்பம், good and evil.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • 1. cavkkyam சவ்க்கயம் 2. nallatu நல்லது 1. welfare 2. benefit; merit

வின்சுலோ
 • [nlm] ''s.'' A good, a benefit; efficacy, virtue, goodness--oppos. to இளப்பம், நன் மை. 2. Beauty, fairness, handsomeness, அழகு. 3. Welfare, advantage, profit, uti lity, பயன். 4. Favor, kindness, உபகாரம். 5. Delight, pleasure gratification, இன்பம். 6. Connivance, partiality, favoritism, in dulgence, கண்ணோட்டம். (சது.) 7. ''(Beschi.)'' Testicle of a bull or buffalo, விலங்கின்விதை. 8. Exellence, உயர்வு. 9. Dried ginger. சுக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < நன்-மை. 1. Goodness,virtue; நன்மை. நலந்தானிலாத சிறேயேற்கு நல்கி(திருவாச. 1, 58). 2. Beauty, fairness, hand-someness; அழகு. தொன்னலந் தொலை பீங்கி யாந்துய ருழப்ப (கலித். 16). 3. Love, affection; அன்பு.நன்னலம் மவற்கேவைத்த நங்கையே (சீவக. 1336).4. Hope, faith; ஆசை. பொது நலத்தார் (குறள்,915). 5. Delight, pleasure, gratification; இன்பம்.சிறந்த நின்னலத்தைச் சேரே னாய்விடில் (சீவக. 2067).6. Favour, kindness, benefit; உபகாரம். (பிங்.)7. Nature, characteristic; குணம். பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு (குறள், 984). 8. Profit,advantage, utility; பயன். (சங். அக.) 9. Reputation, fame; புகழ். தந்நலம் பாரிப்பார் (குறள், 916).
  -- 2175 --
  10. Excellence; உயர்வு. நாநனி வருந்த வென்னலம் பாராட்டலின் (மணி. 21, 140). 11. Conni-vance; partiality; indulgence; கண்ணோட்டம்.(W.) 12. Prosperity; welfare, health; சுகவாழ்வு.நலந் தீங்கிலு முன்னை மறந்தறியேன் (தேவா. 946, 6).13. Colour; நிறம். செயலையந் தளிரேய்க்கு மெழினலம் (கலித். 15). 14. Red colour; செம்மை நிறம்.நலம்பெறு கலிங்கத்து (திருமுரு. 109). 15. Scorpioin the zodiac; விருச்சிகராசி. (பிங்.) 16. Testicleof a bull; எருத்து விதை. (J.) 17. cf. நல்லம்.Dried ginger; சுக்கு. (W.)
 • நலம்புனைந்துரைத்தல் nalam-puṉain-turaittaln. < நலம் +. (Akap.) Theme praisingthe beauty of one's lady-love; நலம்பாராட்டல்.(குறள், 112, அதி.)
 • n. < நன்-மை. Virtue; அறம்.நலமுழு தளைஇய புகரறு காட்சி (பரிபா. 1, 45).