தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; அருகன் ; அரசன் ; கொழுந்தன் ; பரிசைக்காரன் ; ஈட்டிக்காரன் ; மடையன் ; முக்குலத்தோருக்கு வழங்கும் பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன். தேவா நின்கழல் சேவிக்க வந்தனன் (கம்பரா. கங்கை. 39). 3. King;
  • கொழுநன். (யாழ். அக.) 4. Husband's brother;
  • ஈட்டிக்காரன். (யாழ். அக.) 6. Lancer;
  • பரிசைக்காரன். (யாழ். அக.) 7. Shield-bearer;
  • மடையன். (யாழ். அக.) 8. Fool, idiot;
  • அருகன். (பிங்.) 2. Arhat;
  • கடவுள். தேருங்காற் றேவ னொருவனே (திவ். இயற். நான்மு. 2). 1. God;
  • மறவர் அகம்படியர் கள்ளர்க்கு வழங்கும் பட்டப்பெயர். 5. A title of Maṟavar, Akampaṭiyar and Kaḷḷar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (தேவம்) s. a god, a deity, one of the celestials; 2. (Chr. us.) God, கடவுள்; 3. a title given to certain tribes; 4. the name of Argha. தேவ, adj. celestial, divine, Note: as most Protestant Christians use தேவன் as the name of the one true God, they often use the adj. தேவ, where Hindus would use தெய்வ, see தெய்வம். தேவகடாட்சம், favour of God. தேவகணம், the class of the inferior gods or celestials. தேவகாந்தாரி, a kind of tune, ஒரு பண். தேவகானம், divine melody or tune. தேவகிரி, a place sacred to Skanda near the Himalaya range. தேவகுமாரன், -சுதன், (Chr. us.) the son of God, Jesus Christ. தேவகுரு, Jupiter, the priest of the celestials, வியாழன். தேவகுருவஞ்சம், தேவகுருவம், a place of bliss, one of the போகபூமி. தேவகுலம், a temple, தேவர்கோயில். தேவகோட்டை, a town in the Madura district, the principal residence of the Nattukottai Chetties. தேவக்கிரியை, the providence of God; 2. one of the tunes, ஓரிராகம். தேவசபை, the divine presence, etc. as தேவசமுகம்; 2. the assembly in the temple. தேவ சமுகம், --சன்னிதி, -சன்னிதானம், divine presence, a temple. தேவசாயல், (Chr. us.) divine likeness or image. தேவசாயுச்சியம், beatification. தேவசாட்சி, an oath, ஆணை. தேவசித்தம், divine will. தேவசிந்தனை, divine meditation. தேவசீகிருதம், that which belongs to God. தேவசுபாவம், attributes of God. தேவசேவை, attendance at the temple, ministering to and worshipping the idol; 2. having the appearance of the deity, his vision, his form etc. தெய்வதரிசனம். தேவசேனாபதி, Skanda, as general of the Devas. தேவடியாள், தேவதாசி, a dancing girl of the temple, a prostitute. தேவடியாள் மகன், a bastard (spoken in contempt.) தேவதச்சன், தெய்வத்தச்சன், the architect of the gods, Viswakarma. தேவதத்துவம், divine power, godhead. தேவதரு, see தேவதாரம். தேவதலம், தேவஸ்தலம், தேவஸ்தானம், a sacred shrine, a temple. தேவதாசன், a devotee, a servant of a deity; 2. the son of Harichandra, one of the 6 emperors of India, famed for truth. தேவதாசி, a dancing and singing girl of a temple, commonly a courtesan; the courtesans of the gods are ஊர்வசி, ரம்பை, மேனகை, & திலோத்தமை. தேவதாபனம், -ஸ்தாபனம், inspiring an image with the god represented. தேவதாமரை, one of Kubera's gems, பதுமநிதி. தேவதாரம், any of the five trees in Swerga, பஞ்சதருவிலொன்று; 2. a medicinal fragrant tree, சேம்புளிச் சைமரம்; 3. a kind of pine tree, erythroxylon aureolatum. தேவதாரி, -தாரு, a kind of pin tree, தேவதாரம் 3. தேவதாளி, a kind of plant, convolvulus, a kitchen herb. தேவதுந்துமி, the drums of the gods. தேவதூஷணம், blasphemy. தேவதூஷகன், --தூஷணக்காரன், a blasphemer. தேவதூதன், a divine messenger; 2. (Chr. us.) an angel. தேவதொண்டு, -த்தொண்டு, service to a deity. தேவதொண்டன், --த்தொண்டன், a devotee, தேவதாசன். தேவத்துவம், god-head, divinity. தேவநாகரம், தேவநாகரி, the Nagari character of the Sanskrit language. தேவநாயகன், the Supreme Being; 2. any superior deity. தேவநீதி, divine justice. தேவபதம், heaven, the firmament; 2. royal presence, இராசசமுகம். தேவபதி, ராசன், Indra. தேவபாஷை, --பாடை, the Sanscrit language. தேவபூமி, the region where the gods dwell. தேவபோதனை, divine instruction. தேவப்பிரமா, a name of Narada Muni. தேவப்பெண், a goddess. தேவமாதா, the mother of gods (of God). தேவயானம், -ரதம், a car of a god. தேவயானி, a daughter of Sukra, the teacher of the Asuras. தேவயோனி, divine birth on origin. தேவரம்பை, females of the Swerga; 2. one of the courtesans of the gods. தேவராசன், -கோன், தேவேந்திரன், Indra. தேவராளன், (fem. தேவராட்டி), one supposed to be possessed so as to utter oracles, சன்னதக்காரன். தேவரிஷி, a Rishi of the celestial class. தேவரீர், 2nd. person sing. your Lordship (used in speaking to God or to a very great personage). தேவரீரவர்கள், your Majesty, your Excellency, your Honour. தேவருணவு, -ரூண், -வுணவு, nectar, ambrosia, அமுதம். தேவலகன், a Brahman who attends on an idol. தேவலோகம், Swerga, the world of the gods. தேவ வசனம், -வாக்கு, the divine word. தேவவசீகரம், R. Cathol. us.) transubstantiation. தேவவிரதன், Bhisma, வீடுமன். தேவவிருட்சம், see தேவதாரம் 1. தேவவெளிப்படுதல், (Chr. us.) divine revelation. தேவாங்கம், a silk cloth, பட்டுச்சேலை. தேவாசனம், (in. Chr. us.) the throne of God, as altar. தேவாசுவம், தேவாஸ்வம், the horse of Indra. தேவாதி, God, கடவுள். தேவாதி தேவன், God of gods. தேவாதீனம், properties, peculiar rights, prerogatives, etc. of a deity; 2. divine providence. தேவாத்திரம், தேவாஸ்திரம், a divine missile-weapon from the gods. தேவாயுதம், a rain-bow. தேவாமிருதம், தேவாமிர்தம், தேவாமு தம், the ambrosia of the gods, the food of immortality, தேவருணவு. தேவாரம், divine praises, songs etc. chanted by an assistant of the priest or others, after the performance of the Puja in the Saiva temples. These were made by the three great devotees of Siva, அப்பர், சுந்திரமூர்த்தி, and திருஞான சம்பந்தர் and are known as Tamil Veda, being considered divine. தேவாலயம், a temple, any sacred shrine. தேவானுட்டிப்பு, (தேவ+அனுஷ்டிப்பு) religious practice, duties, worship etc. தேவி, a goddess; 2. a queen or a lady of rank; 3. wife; 4. Durga; Parvathi. தேவிகோட்டம், any temple of Kali; 2. a town, ஓரூர். தேவீகம், தேவிகம், தெய்வீகம், divinity. தேவோக்கித்தம், தேவோக்தம், divine revelation. தேவோத்தியானம், a flower-garden for the gods.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன், கடவுள்.

வின்சுலோ
  • ''s.'' A Deity, a god, a divine being, கடவுள். W. p. 421. DEVA. 2. A title given to அகம்படியர் caste. 3. A title given to some among Maravars. 4. (சது.) The name of Argha, அருகன்.
  • [tēvaṉ ] --தேவி. See under தேவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēva. 1. God; கடவுள்.தேருங்காற் றேவ னொருவனே (திவ். இயற். நான்மு.2). 2. Arhat; அருகன். (பிங்.) 3. King; அரசன்.தேவா நின்கழல் சேவிக்க வந்தனன் (கம்பரா. கங்கை.39). 4. Husband's brother; கொழுநன். (யாழ்.அக.) 5. A title of Maṟavar, Akampaṭiyar andkaḷḷar; மறவர் அகம்படியர் கள்ளர்க்கு வழங்கும் பட்டப்பெயர். 6. Lancer; ஈட்டிக்காரன். (யாழ். அக.) 7.Shield-bearer; பரிசைக்காரன். (யாழ். அக.) 8.Fool, idiot; மடையன். (யாழ். அக.)