தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிவித்தல் ; தெளிந்தறிதல் ; சூளுறுதல் ; ஆற்றுதல் ; தேறுதல் கூறுதல் ; தூய்மைசெய்தல் ; குணமாக்குதல் ; பலமுண்டாக்குதல் ; ஊக்கப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவித்தல். தையால் தேறெனத் தேற்றி (கலித். 144). 1. [T.tērucu.] To make clear, convince, assure, relieve from doubt
  • தெளிந்தறிதல். காத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு (குறள், 1054). 2. To know, understand
  • தைரியப்படுத்துதல். Loc. 9. To encourage, hearten
  • தேற்றுவித்தாற் புனல் தேற்றுநர்போல் (அஷ்டப். அழகர்கலம். 85). 4. [M. tēṟṟuka.] To clear. clarify, as with the tēṟṟā-ṅ-koṭṭai.
  • சுத்தஞ்செய்தல். (w.) 5. To refine
  • ஆற்றுதல். 6. To comfort, console
  • குணமாக்குதல். (w.) 7. To cure, give relief
  • பலமுண்டாக்குதல் (w.) 8. [M. tēṟṟuka.] To communicate strength; to nourish, cherish, invigorate
  • சூளூறுதல். தேரொடுந் தேற்றிய பாகன் (கலித்.71). 3. To swear, take an oath

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of தேறு-.1. [T. tērucu.] To make clear, convince,assure, relieve from doubt; தெளிவித்தல். தையால்தேறெனத் தேற்றி (கலித். 144). 2. To know,understand; தெளிந்தறிதல். கரத்தல் கனவிலுந்தேற்றாதார் மாட்டு (குறள். 1054). 3. To swear,take an oath; சூளுறுதல். தேரொடுந் தேற்றியபாகன் (கலித். 71). 4. [M. tēṟṟuka.] To clear,clarify, as with the tēṟṟā-ṅ-koṭṭai; தேற்றாவிதையால் நீர்தெளியச் செய்தல். தேற்றுவித்தாற் புனல்தேற்றுநர்போல் (அஷ்டப். அழகர்கலம். 85). 5. Torefine; சுத்தஞ்செய்தல். (W.) 6. To comfort,console; ஆற்றுதல். 7. To cure, give relief;குணமாக்குதல். (W.) 8. [M. tēṟṟuka.] To communicate strength; to nourish, cherish, invigorate; பலமுண்டாக்குதல். (W.) 9. To encourage,hearten; தைரியப்படுத்துதல். Loc.