- அனுபவிக்க உரியதாதல். தேம்பூண் சுவைத்து (திவ். இயற். பெரியதிருவ. 14). 6. To be fit for enjoyment ;
- அழிதல். ஊடியார் நலந்தேம்ப (கலித். 68). 5. To perish;
- வருந்துதல். அவாவினார் றேம்பு வார் (கலித். 97). 4. To be in trouble; to suffer ;
- விம்மியழுதல். விழிநீர் மல்கவே நின்று தேம்பு மன்னே (வெங்கைக்கோ.329). 3. To sob violently;
- வாடுதல். கொழும்பதிய குடிதேம்பிச் செழுங்கேளிர் நிழல்சேர (மதுரைக்.167). 1. [M. tēmpuka.] To fade, wither, droop; to be tired; to faint ;
- மெலிதல். ஆனாச் சிறுமையளிவளுந் தேம்பும் (குறிஞ்சிப்.26). 2. To grow thin to be emaciated;
- வலிகுறைதல். தேம்பின திறத்தா யேகேல் (இரகு. யாகப். 47). To loose strength; to become weak;
|