தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்னாடு ; பாண்டிநாடு ; யமனுலகம் ; பிதிரர்கள் வாழுமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதிரருலகம். தென்புலவாழ்நர்க்கு (புறநா. 9). 2. Region of the manes;
  • யமலோகம். தென்புலக்கோன் பொறியொற்றி (திவ். பெரியாழ். 5,2,2). 3. World of Yama;
  • பாண்டிநாடு. தென்புலங் காவலி னொரீஇ (புறநா. 71, 18). 4. Pāṇdya country;
  • தென்றேயம் தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப (நெடுநல்.52). The southern country;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இயமலோகம்.

வின்சுலோ
  • ''s.'' The region or world of the deceased, பிதிர்கள்வாழுமிடம். 2. A corn-field lying to the south.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தென் +. 1.The southern country; தென்றேயம். தென்புலமருங்கிற் சாந்தொடு துறப்ப (நெடுநல். 52). 2.Region of the manes; பிதிரருலகம். தென்புலவாழ்நர்க்கு (புறநா. 9). 3. World of Yama; யமலோகம். தென்புலக்கோன் பொறியொற்றி (திவ்.பெரியாழ். 5, 2, 2). 4. Pāṇḍya country; பாண்டிநாடு. தென்புலங் காவலி னொரீஇ (புறநா. 71, 18).