தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்னைமரம் ; தித்திப்பு ; போர்ச்சேவலின் தன்மை குறிக்கும் குழூஉக்குறியுள் ஒன்று ; ஏழு தீவுகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்னை. தெங்கி னிளநீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு (புறநா.29); 1. [K. teṅgu, M. teṅṅu.] Coconut-palm, l.tr., Cocos nucifera;
  • தித்திப்பு. (அக.நி.) 2. Sweetness;
  • போர்ச்சேவலின் தன்மை குறிக்கும் குழூ உக்குறியுள் ஒன்று. தெங்குக்குத்தெங்குவெல்லும் எனக் கோழிகளின் நிற மறிந்துவிடுதல் (பு.வெ.12, வென்றிப். 6, உரை). 3. Quality of a fighting cock, a slang term;
  • See தேக்கந்தீவு. (சூடா.) 4. An annular continent;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the cocoanut tree, cocos nucifera, தென்னமரம். தெங்கங்காய், தேங்காய், cocoanut. தெங்கந்தீவு, one of the seven islands supposed to form our world.

வின்சுலோ
  • [tengku] ''s.'' The cocoa-nut tree, தென்ன மரம், Cocos uncifera, ''L. (p.)--Note.'' The vowel is often lengthened in combination. See தேங்காய். தளராவிளந்தெங்குதாளுண்டநீரைத்தலையாலேதான்ற ருதலால். The fine and well grown cocoa nut tree, returns from its top the water it drank by its roots. (மூதுரை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. தென். 1. [K. teṅgu,M. teṅṅu.] Coconut-palm, 1. tr.Cocos nucifera;தென்னை. தெங்கி னிளநீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு(புறநா. 29). 2. Sweetness; தித்திப்பு. (அக. நி.)3. Quality of a fighting cock, a slang term;போர்ச்சேவலின்தன்மை குறிக்கும் குழூஉக்குறியுள் ஒன்று.தெங்குக்குத்தெங்குவெல்லும் எனக் கோழிகளின் நிறமறிந்துவிடுதல் (பு. வெ. 12, வென்றிப். 6, உரை). 4.An annular continent. See தேக்கந்தீவு. (சூடா.)