தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுகர்தல் ; வலிமைபெறுதல் ; பற்றுக்கோடாதல் ; நீங்கியொழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்கி யொழிதல். பழியோர் செல்வம். வறுமையிற் றுவ்வாது (முது. காஞ் 31). To leave, cease;
  • வலியுறுதல். ஆன்ற துணையிலன் றான்றுவ்வான் (குறள், 862). 2. To be strong;
  • நுகர்தல். (திவா.) துவ்வா நறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60, 12). --intr. 1. To eat, enjoy;
  • பற்றுக்கோடு. (அக. நி.) Support;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • perh. 5 v. < து-.tr. To eat, enjoy; நுகர்தல். (திவா.) துவ்வா நறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60, 12).--intr. Tobe strong; வலியுறுதல். ஆன்ற துணையிலன் றான்றுவ்வான் (குறள், 862).
  • 5 v. intr. perh. தூ-.To leave, cease; நீங்கி யொழிதல். பழியோர்செல்வம் வறுமையிற் றுவ்வாது (முது. காஞ். 31).
  • n. < துவ்வு-. Support;பற்றுக்கோடு. (அக. நி.)