தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூங்குதல் ; துயிலுதல் ; சோம்புதல் ; தொழிலின்றி இருத்தல் ; சோர்தல் ; இறத்தல் ; வலியழிதல் ; குறைதல் ; தொங்குதல் ; தங்குதல் ; நிலைபெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய் முதலியன கட்டியாக உறைதல். துஞ்சியநெய்யும் காய்ந்த பாலும் (திவ். பெரியாழ். 2, 1, 6, வ்யா. பக். 228). To be come solidified, as ghee;
  • தொழிலின்றி யிருத்தல். உலகு தொழிலுலந்து நாஞ்சி றுஞ்சி (அகநா. 141). 2. To rest without work;
  • தூங்குதல். நெருப்பினுட் டுஞ்சலு மாகும் (குறள், 1049). 1. To sleep, doze, slumber;
  • தொங்குதல். துஞ்சுகுழல் (பு. வெ. 9, 35, உரை). 10. To hang;
  • சோம்புதல். நீ துஞ்சாய் மாறே (புறநா. 22, 38). 3. To be drowsy, sluggish, indolent;
  • சோர்தல். பயிர் துஞ்சிப்போயிற்று. (W.) 4. To droop;
  • இறத்தல். நிலமிசைத் துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட்டாரல்லால் (நாலடி, 21). 5. To die;
  • வலியழிதல். துஞ்சும் பிணியாயினதானே (தேவா. 494, 4). 6. To perish; to be deprived of power;
  • குறைதல். பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே (சிலப். குன்றக்குரவை.). 7. To diminish, decrease;
  • தங்குதல். புலிதுஞ்சு வியன்புலத் தற்றே (புறநா. 54). 8. To abide, stay;
  • நிலைபெறுதல். (பிங்.) துஞ்சு நீணிதியது (சூளா. நாட். 1). 9. To settle permanently, endure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M. tuñcuka.]1. To sleep, doze, slumber; தூங்குதல். நெருப்பினுட் டுஞ்சலு மாகும் (குறள், 1049). 2. To restwithout work; தொழிலின்றி யிருத்தல். உலகு தொழிலுலந்து நாஞ்சி றுஞ்சி (அகநா. 141). 3. To bedrowsy, sluggish, indolent; சோம்புதல். நீதுஞ்சாய் மாறே (புறநா. 22, 38). 4. To droop;சோர்தல். பயிர் துஞ்சிப்போயிற்று. (W.) 5. Todie; இறத்தல். நிலமிசைத் துஞ்சினா ரென்றெடுத்துத்தூற்றப்பட்டாரல்லால் (நாலடி, 21). 6. To perish;to be deprived of power; வலியழிதல். துஞ்சும்பிணியாயினதானே (தேவா. 494, 4). 7. To diminish, decrease; குறைதல். பெருமலை துஞ்சாதவளஞ்சுரக் கெனவே (சிலப். குன்றக்குரவை.). 8. To
    -- 1957 --
    abide, stay; தங்குதல். புலி துஞ்சு வியன்புலத் தற்றே(புறநா. 54). 9. To settle permanently, endure;நிலைபெறுதல். (பிங்.) துஞ்சு நீணிதியது (சூளா. நாட்.1). 10. To hang; தொங்குதல். துஞ்சுகுழல் (பு.வெ. 9, 35, உரை).
  • 5 v. intr. To become solidified, as ghee; நெய் முதலியன கட்டியாக உறைதல். துஞ்சியநெய்யும் காய்ந்த பாலும் (திவ்.பெரியாழ். 2, 1, 6, வ்யா. பக். 228).