தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுதல் ; கடித்தல் ; மெல்லுதல் ; அரித்தல் ; அழித்தல் ; வருத்துதல் ; வெட்டுதல் ; அராவுதல் ; பெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்ணுதல். இரும்பே ரொக்கலொடு தின்மென (புறநா.150). 1. To eat, feed;
  • மெல்லுதல். உண்ணுஞ்சோறும் பருகு நீருந் தின்னும்வெற்றிலையும் (திவ். திருவாய். 6, 7, 1). 2. To chew;
  • கடித்தல். தின்றுவர்யை விழிவழித் தீயுக (கம்பரா. ஒற்றுக். 49). 3. To bite, gnash, as one's teeth;
  • மரத்தைக் கறையான் தின்றுவிட்டது. 4. To eat away as white ants to consume, corrode;
  • பெறுதல். கானகம் போய்க் குமைதின்பர்கள் (திவ். திருவாய். 4, 1, 2). 10. To undergo, receive;
  • அழித்தல். அறிவழுங்கத் தின்னும் பசி நோயும் (திரிகடு. 95). 6. To destory, ruin, wear out;
  • அராவுதல். அரந்தின்ற கூர்வேல் (கம்பரா. சம்புமா. 6). 7. To file;
  • வெட்டுதல். கோணந் தின்ற வடுவாழ் முகத்த (மதுரைக். 592). 8. To cut;
  • அரித்தல். தின்றவிடஞ் சொறிந்தாற்போல (திவ். திருவாய். 4, 8, 9, பன்னீ.) 9. To cause irritating sensation, as in the skin;
  • வருத்துதல். பிணிதன்னைத் தின்னுங்கால் (திரிகடு. 88). 5. To afflict, distress;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்ணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 8 v. tr. [T. tinu, K.tin, M. tinnuka.] 1. To eat, feed; உண்ணுதல்.இரும்பே ரொக்கலொடு தின்மென (புறநா. 150). 2.To chew; மெல்லுதல். உண்ணுஞ்சோறும் பருகுநீருந் தின்னும்வெற்றிலையும் (திவ். திருவாய். 6, 7, 1).3. To bite, gnash, as one's teeth; கடித்தல்.தின்றுவாயை விழிவழித் தீயுக (கம்பரா. ஒற்றுக். 49).4. To eat away as white ants to consume,
    -- 1932 --
    corrode; அரித்தல். மரத்தைக் கறையான் தின்றுவிட்டது.5. To afflict, distress; வருத்துதல். பிணிதன்னைத்தின்னுங்கால் (திரிகடு. 88). 6. To destroy, ruin,wear out; அழித்தல். அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் (திரிகடு. 95). 7. To file; அராவுதல். அரந்தின்ற கூர்வேல் (கம்பரா. சம்புமா. 6). 8. To cut;வெட்டுதல். கோணந் தின்ற வடுவாழ் முகத்த(மதுரைக். 592). 9. To cause irritating sensation,as in the skin; அரித்தல்.. தின்றவிடஞ் சொறிந்தாற்போல (திவ். திருவாய். 4, 8, 9, பன்னீ.). 10.To undergo, receive; பெறுதல். கானகம் போய்க்குமைதின்பர்கள் (திவ். திருவாய். 4, 1, 2).