தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டின் காலத்தை அறுதியிட்டு அளக்கும் அளவு ; கைத்தாளக் கருவி ; பனைமரம் ; கூந்தற்பனைவகை ; அரிதாரம் ; தாளத்திற்கு இசையக் கூறும் அசைகள் ; காண்க : தாளிசபத்திரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாளத்திற் கிசையக் கூறும் அசைகள். (W.) 3. Syllables sung in tune with drum-beats;
  • See பனை . 4. Palmyra-palm.
  • கூந்தற்பனைவகை. (L.) 5. Jaggery-palm, m. tr., Caryota urens;
  • அரிதாரம். 6. Yellow orpiment;
  • கைத்தாளக்கருவி. அடிகளார் தங்கையிற் றாளமிருந்தவாறு (திருவாச. 17, 8). 2. A small cymbal for keeping time in music;
  • பாடுகையிற் காலத்தை அறுதியிடும் அளவு. இத்தாளங்களின் வழிவரும்... ஏழு தூக்குக்களும் (சிலப்.3, 16, உரை). 1. (Mus.) Time-measure;
  • . 7. See தாளிசபத்திரி. (சங். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. time or measure in music; 2. cymbal; 3. the palmyra tree, பனை; 4. yellow orpiment. தாளம்போட, --கொட்ட, to beat a cymbal; 2. (fig.) to be in want. தாளக்காரன், a cymbalist. கைத்தாளம், a small cymbal. ்ரீதாளம், large palm leaves of the talipot tree. கரதாளம், leaves of the palmyra tree; 2. keeping time by striking palm against palm. தாளம்போட்டுத்திரிய, to persist in an improper request, as a youth to have his fancy indulged.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கஞ்சம், கஞ்சனம், கிட்டி.

வின்சுலோ
  • [tāḷam] ''s.'' Time or measure in music, இலயை, 2. A kind of cymbal for keeping time in music, ஓர்வாத்தியம். ''(c.)'' 3. Syllables sung in correspondence with the drum. சதி. W. p. 374. TALA. 4. Union in time with the music, dancing, drumming,&c., மாத்திரை. 5. One of the sixty-four கலைஞானம். 6. The palmyra tree, பனை. 7. Yellow orpiment.
  • 5, The five modes of time in beating the cymbal. 1. சச்சற்புடம், con sisting of மாத்திரை 8, or eight measures in beating, ''viz.'' குரு. 2, two குரு, or four மாத்திரை; இலகு, 1, or one மாத்திரை; and புலு தம், 1, one புலுதம், or three மாத்திரை. It is considered to have its origin in the last of the five faces of ஈசன், Isa, called சத்தி யோசாதம், and is of the brahman caste, பிரமசாதி. 2. சாசற்புடம், consisting of மாத்தி ரை, 1, or six measures, ''viz.'': குரு, 1, or two மாத்திரை; இலகு, 2 or two மாத்திரை; and குரு, 2, or two மாத்திரை. It is said to be derived from the fourth face of Isa called வாமமுகம், and is of the Raja caste. அரசசாதி. 3. சட்பிதாபுத்திரிகம், consisting of மாத்திரை. 12, or twleve measures; ''viz.'': புலுதம், 1 one ''pulutam,'' or three measures; இலகு, 1 one ''ilagu'', or one measure; குரு, 2, two ''kurus,'' or four measures; இலகு, 1 one ''ilagu,'' one measure; and புலுதம், 1, one ''pulutam'' or three measures. Its origin is derived from Isa's third face called அகோரமுகம், and is of the Vaisya caste, வைசியசாதி. 4. சம்பத்துவேட்டம், consisting of twelve measures, or மாத்திரை, 12, ''viz.'': புலுதம், 1, three measures; குரு, 1, three ''kurus,'' or six measures; புலுதம். 1, or three measures. Its origin is derived from Isa's second face, called தற்புருடம், and is of the Sudra caste, சூத்திரசாதி. 5. உற்கடிதம், consisting of six measures, or மாத்திரை, 1, ''viz.'': குரு, 1 three ''kurus,'' or six measures. Its origin is derived from Isa's first face called ஈசானமுகம், and is of the mixed caste, சங்கிரமசாதி, or சங்கர சாதி.
  • 7, or சத்ததாளம். The seven modes of time, in singing; and the seven notes, or seven tunes, in music. 1. துரு வம், consisting of one இலகு, or one மாத்தி ரை, of one குரு or two மாத்திரை, and one துரிதம், or a half மாத்திரை. The notes belonging to it are சரிகம, கரிசரி கரிசரி and கம. 2. மட்டியம், consisting of one இலகு. one துரிதம், and of one இலகு. The notes belonging to it are சரிகரி, சரி, and சரிகம. 3. உரூபகம், consisting of one இலகு and one துரிதம். The notes belonging to it are சரி and சரிகம. 4. சம்பை, consisting of one இலகு, one அநுதுரிதம், or the fourth part of a மாத்திரை, and one துரிதம். The notes belonging to it are, ச, ரிக and சரிசரி கமா. 5. திரிபுடை, consisting of three துரிதம் and one அநுதுரிதம். The notes belonging to it are சரிகசரிகம. 6. அடதாளம், con sisting of one இலகு, two துரிதம், and one இலகு. The notes are சரிகா, சாரிகா, மா, மா. 7. ஏகதாளம், consisting of one இலகு. The notes are சரிகம.
  • 9, or நவசந்திதாளம். The nine rules for keeping time in music when an image is carried round at a heathen fane with nine halts; the none different ''talams,'' or instrumental and vocal measures, being observed. 1. அரிதாளம். 2. அருமதாளம். 3. சமதாளம். 4. சயதாளம். 5. சித்திரதாளம். 6. துருவதாளம். 7. நிவிர்ததாளம். 8. படிமதாளம். 9. விடதாளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tāla. 1. (Mus.) Time-measure; பாடுகையிற் காலத்தை அறுதியிடும் அளவு.இத்தாளங்களின் வழிவரும் . . . ஏழு தூக்குக்களும்(சிலப். 3, 16, உரை). 2. A small cymbal forkeeping time in music; கைத்தாளக்கருவி. அடிகளார் தங்கையிற் றாளமிருந்தவாறு (திருவாச. 17, 8).3. Syllables sung in tune with drum-beats;தாளத்திற் கிசையக் கூறும் அசைகள். (W.) 4.Palmyra-palm. See பனை. 5. Jaggery-palm, m.tr.Caryota urens; கூந்தற்பனைவகை. (L.) 6.Yellow orpiment; அரிதாரம். 7. See தாளிசபத்திரி.(சங். அக.)