தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்கு ; வரிசை ; கோடு ; அடிச்சுவடு ; பெருமழை ; நேராக ஓடல் ; கண்மணி ; கண் ; கூர்மை ; சிறு சின்னம் ; சீலை ; நீர்வீசுங்கருவி ; மாட்டின் மலவாய்ப்பக்கம் ; நீர் ஒழுக்கு ; ஆயுதமடல் ; வயிரக்குணங்களுள் ஒன்று ; வழி ; ஆடையின் விலக்கிழை ; நீண்ட ஊதுங்குழல் ; எக்காளம் ; சக்கரப்படை ; விண்மீன் ; வாலியின் மனைவி ; வியாழன் மனைவி குதிரை நடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுதமடல். தாரைகொள் முக்கவைச் சுடர்வேல் (கல்லா. 86, 34). 13. Blade of a weapon;
  • கூர்மை. (பிங்.) 14.Sharpness;
  • சக்கராயுதம். 15. Discus weapon;
  • வயிரக்குணங்களிலொன்று. (சிலப். 14, 180, உரை.) 16. A quality of the diamond;
  • ஆடையின் விலக்கிழை. Loc. 17. Threadbareness;
  • நீண்ட ஊதுங்குழல். தாரை போரெனப்பொங்கின (கம்பரா. கடிமண். 41). 1. Long brass trumpet;
  • ஒருவகைச் சின்னம். (W.) 2. Long reed instrument;
  • நீர்வீசுங் கருவி. தாழ்புனற் றாரையும் (பெருங். உஞ்சைக். 38, 105). 3. Watersquirt;
  • ¢கண்மணி. (பிங்) இருதாரை நெடுந்தடங்கண் (பாரத.அருச்சுனன் றவ.38). 1. Apple of the eye;
  • கண். (திவா.) தாரை நெருப்புக (கம்பரா. சடாயுவுயிர். 103). 2. Eye.
  • பஞ்சகன்னியருள் ஒருத்தியான வியாழன் மனைவி. இளநிலாநகைத் தாரையை விடுக்கிலன் (காசிக. 15, 17.) 3. Tārā, wife of Jupiter, one of paca-kaṉṉiyar, q.v.;
  • வாலியின் மனைவி. தாரையென் றமிழ்திற் றோன்றிய வேயிடைத் தோளினாள் (கம்பரா. வாலிவதை. 13). 4. Tāre wife of Vāli;
  • நட்சத்திரம். (பிங்.) 5. Star;
  • வரிசை. 1. Row; range, line, series;
  • கோடு. 2. Stripe, streak;
  • ஓழங்கு. நெறித்தாரை செல்லாத நிருதர் (கம்பரா. சூர்ப். 137). 3. Order, arrangement, regularity;
  • வழி. (திவா.) வீரர்போகத் தாரை பெற்றிலர் (உத்தரரா. வரையெ. 17). 4. Way, path;
  • அடிச்சுவடு.(பிங்.) 5.Foot track;
  • நேரே ஒடுகை. (பிங்.) 6. Running in a straight line;
  • குதிரைக்கதி. ஐந்துதாரையினுந் தூண்டி (திருவாலவா. 39, 35.) 7. Pace of a horse;
  • பெருமழை. (பிங்.) 8. Downpour of rain;
  • நீரொழக்கு. நெடுந்தாரை கண்பனிப்ப (திருவாச. 7, 15). 9. Stream, as of water;
  • மாட்டின் மலத்துவாரப் பக்கம். 10. Region adjoining anus of bulls and cows;
  • விரைவு. (திவா.) 11. Speed;
  • நா. (சூடா.) 12. Tongue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. row, range, line, ஒழுங்கு, சாரை; 2. a long trumpet or pipe, எக்காளம். தாரை தாரையாய்ப் போகிற (ச்சாய்கிற) எறும்பு, ants, running in rows. தாரையூத, to sound a trumpet.
  • s. heavy rain falling in torrents; 2. water poured in making a gift; 3. a wife, a star; 4. the pupil of the eye, கண்மணி; the eye, கண்; 5. point edge, கூர்மை; 6. cloth, சீலை; 7. the van of an army, கொடிப்படை; 8. the tongue, நா; 9. strength, force, power, வலி; 1. fame, கீர்த்தி; 11. a course as the running of a horse or of a stream, பாய்கை; 12. way, வழி; 13. the wife of Vali, வாலி மனைவி; 14. wife of Jupitar, வியாழன் மனைவி. வானத்திலே நீர்த்தாரை யிட்டிருக்கிறது, there appear in the sky clouds surcharged with rain. தாரைதாரையாய் ஓட, to gush out in a straight stream. மழை தாரை தாரையாய்ப் பொழிகிறது, it rains in torrents. தாரை வார்த்துக் கொடுக்க - த்தத்தம் பண்ண, to give away by pouring water into the right hand of the receiver, to bequeath. கண்ணீர்த் தாரை, a flood of tears. தாரோபசங்கிரகம், marrying.

வின்சுலோ
  • [tārai] ''s.'' Row, range, line, series, stripe, streak, ஒழுங்கு. (Compare சாரை.) 2. A long trumpet or pipe, எக்காளம். 3. A smaller trumpet, சிறுசின்னம். 4. Way, road, வழி. 5. Heavy rain falling in large drops, மழைத்தாரை. ''(c.)'' 6. Stream of water poured on the right hand of the receiver in making grants or donations, also in giving a wife in marriage, &c. (See தத்தம்.) 7. Flowing as water from a pipe and in pencils, as gum from a tree, or as rain; also a course, as the flowing of arrows. the running of a horse or of a stream, பாய்கை. ''(Sa. D'ha'ra'.)'' 8. Apple, or pupil of the eye, கண்மணி. (See தாரகை.) 9. Eye, கண். 1. Point, edge; sharp or cutting side of an army, the banner-detachment. கொடிப்படை. 12. The wheel-like weapon, சக் கராயுதம். 13. Tongue, நா. 14. Running in a straight course, நேரோடுகை. 15. Star, விண்மீன். 16. Strength, vigor, force, power, வலி. 17. A wife, மனைவி. (See தாரம்.) 18. Wife of Bhali, வாலியின்மனைவி. 19. Wife of Jupiter, priest of the gods, வியாழன்மனை வி. (See தாரா. ''Sa.'') 2. Cloth, சீலை. (சது.) தாரைதாரையாய்ப்போகிறஎறும்பு. The emmets going in rows. வானத்தில்நீர்த்தாரையிட்டிருக்கிறது. There are in the sky clouds surcharged with rain.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tārā. 1. Apple of theeye; கண்மணி. (பிங்.) இருதாரை நெடுந்தடங்கண்(பாரத. அருச்சுனன்றவ. 38). 2. Eye; கண். (திவா.)தாரை நெருப்புக (கம்பரா. சடாயுவுயிர். 103). 3.Tārā, wife of Jupiter, one of pañca-kaṉṉiyar,q. v.; பஞ்சகன்னியருள் ஒருத்தியான வியாழன் மனைவி.இளநிலாநகைத் தாரையை விடுக்கிலன் (காசிக. 15, 17).4. Tārā, wife of Vāli; வாலியின் மனைவி. தாரையென் றமிழ்திற் றோன்றிய வேயிடைத் தோளினான்(கம்பரா. வாலிவதை. 13). 5. Star; நட்சத்திரம்.(பிங்.)
  • n. < dhārā. 1. Row, range,line, series; வரிசை. 2. Stripe, streak; கோடு.3. Order, arrangement, regularity; ஒழுங்கு.நெறித்தாரை செல்லாத நிருதர் (கம்பரா. சூர்ப். 137). 4.Way, path; வழி. (திவா.) வீரர்போகத் தாரை பெற்றிலர் (உத்தரரா. வரையெ. 17). 5. Foot track;அடிச்சுவடு. (பிங்.) 6. Running in a straight line;நேரே ஓடுகை. (பிங்.) 7. Pace of a horse; குதிரைக்கதி. ஐந்துதாரையினுந் தூண்டி (திருவாலவா. 39,
    -- 1847 --
    35). 8. Downpour of rain; பெருமழை. (பிங்.)9. Stream, as of water; நீரொழுக்கு. நெடுந்தாரைகண்பனிப்ப (திருவாச. 7, 15). 10. Regionadjoining anus of bulls and cows; மாட்டின் மலத்துவாரப் பக்கம். 11. Speed; விரைவு. (திவா.)12. Tongue; நா. (சூடா.) 13. Blade of aweapon; ஆயுதமடல். தாரைகொள் முக்கவைச் சுடர்வேல் (கல்லா. 86, 34). 14. Sharpness; கூர்மை.(பிங்.) 15. Discus weapon; சக்கராயுதம். 16.A quality of the diamond; வயிரக்குணங்களிலொன்று. (சிலப். 14, 180, உரை.) 17. Thread-bareness; ஆடையின் விலக்கிழை. Loc.
  • n. < tāra. 1. Long brasstrumpet; நீண்ட ஊதுங்குழல். தாரை போரெனப்பொங்கின (கம்பரா. கடிமண. 41). 2. Long reedinstrument; ஒருவகைச் சின்னம். (W.) 3. Water-squirt; நீர்வீசுங் கருவி. தாழ்புனற் றாரையும் (பெருங்.உஞ்சைக். 38, 105).