தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனு என்பவளின் வழிவந்த அசுரர் ; வித்தியாதரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (தனு என்பவளின் சந்ததியார்) அசுரசாதியார். வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் (திருவாச. 13, 17). Asuras, a class of demons, as descendants of Danu;
  • வித்தியாதரர். தானவர் வைகிய வொப்பின் மாநகர் (சீவக. 535). A class of celestial musicians;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Asuras, as the sons of Danu, அசுரர். தானவாரி, Vishnu as the foe of the Dhanavas.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசுரர்.

வின்சுலோ
  • [tāṉavar] ''s.'' Dhanuvas, as children of Danu, their mother, Asuras, அசுரர்; [''ex'' தனு.] W. p. 45. DHANAVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dānava. Asuras,a class of demons, as descendants of Danu;[தனு என்பவளின் சந்ததியார்] அசுரசாதியார். வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் (திருவாச. 13, 17).
  • n. < tāna. A class ofcelestial musicians; வித்தியாதரர். தானவர் வைகியவொப்பின் மாநகர் (சீவக. 535).