தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனிப்பொருள் ; உலோகம் ; காவிக்கல் ; பஞ்சபூதம் ; நாடி ; பூந்தாது ; தேன் ; தாது மாதுளமரம் ; கேள்வி ; உடலின் எழுவகைத் தாதுக்கள் ; சுக்கிலம் ; வாதபித்த சிலேட்டுமங்கள் ; நீறு ; பூவின் இதழ் ; மலர் ; அறுபதாண்டுக் கணக்கில் பத்தாம் ஆண்டு ; அடிமை ; வினைப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்முதலிய உலோகங்கள். (பிங்.) 2. Metals;
  • கனிகளில் உண்டாம் இயற்கைப்பொருள். 1. Mineral, fossil; any natural product from a mine;
  • See பூதம். (சூடா.) 4. The five elements of Nature.
  • வாத பித்த சிலேட்டுமங்கள். 5. The three humours of the body, viz., vātam, pittam. cilēṭṭumam;
  • நாடி. பிணிகளைத் தாதுக்களா லறியலாம் (குமரே. சத. 38). 6, Pulse;
  • See சத்ததாது. (பிங்.) 7. Constituent parts of the body.
  • சுக்கிலம். (பிங்.) சுரத தாது வீழ்ந்த துரோண கும்பந் தன்னில் (பாரத. வாரணா. 32). 8, Semen, Sperm;
  • நீறு. (மதுரைக். 399, உரை.) 9. Powder, dust;
  • பூந்தாது. தாதுண் வண்டினம் (மணி. 4, 20). 10. Pollen;
  • பூவினிதழ். (பிங்.) 11. Petal of flowers;
  • மலர். கள்வாய தாதொடு வண்டிமிரும் (பு. வெ. 12, இருபாற். 3). 12. Blossom;
  • தேன். தாதுசேர் கழுநீர் (சிலப். 13, 119). 13. Honey;
  • வினைப்பகுதி. தாதின்வழு (அஷ்டப். திருவேங்கடத்தந். காப்பு.). 14. (Gram.) Verbal root;
  • ஆண்டு அறுபதனுள் பத்தாவது. 15. The 10th year of the Jupiter cycle;
  • அடிமை. வாணியத் தாதற்குத் தாதானதுந் தொண்டை மண்டலமே (தொண்டை.சத.45). Slavery, servitude;
  • . See தாதுமாதுளை. (மூ. அ)
  • கேள்வி. இங்கே தாதுமில்லை பிராதுமில்லை. Madr. Hearing;
  • காவிக்கல். (சூடா.) 3. Red ochre;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) a hearing, கேள்வி. தாதுமில்லைப் பிராதுமில்லை, there is no pleading or hearing.
  • s. pulse, artery, muscle, நரம்பு; 2. principle, an essential or elementary part in nature, பூதவணு; 3. any one of the five elements, பூதம்; 4. one of the seven metals, லோகம், 5. the tenth year of the Hindu Cycle; 6. pollen of a flower, பூ தாது; 7. semen, சுக்கிலம்; 8. same as *தாடிமம்; 9. red ochre, காவிக்கல். தாதாட, to dive into the pollen of flowers, as insects. தாதுகட்ட, to bind the seminal principles in the system as asceties, to promote longevity. தாதுகலிக்க, to be emitted as semen. தாதுநஷ்டம், nosturnal pollution in sleep, by disease etc. தாதுபார்க்க, --பிடித்துப்பார்க்க, to feel the pulse. தாதுபுஷ்டி, -விருத்தி, a healthy state of the semen. தாதுவாதம், minerology. தாது விழுந்துபோகிறது, தாதில்லாமல் போகிறது, the pulse ceases to beat; 2. (fig.) he is forsaken or helpless, he is disheartened. தாதுவைரி, nutgall, கடுக்காய்; 2. cardamun, ஏலம்; 3. sulphur, கந்தகம்.

வின்சுலோ
  • [tātu] ''s. (Hind.)'' A hearing, கேள்வி. தாதுமில்லைப்பிராதுமில்லை. There is no plead ing or hearing--no tribunal.
  • [tātu] ''s. (Sa. Dha'tu.)'' A principle, constituent or elementary part in nature, பூதவணு. 2. ''(c.)'' Artery, nerve, pulse, muscle in common, நரம்பு. 3. Any of the seven constituent parts of the body, இரசமாதியேழு. 4. Any one of the five elements, மண்ணாதி யைந்து. 5. The filaments of a flower, பூந் தாது. 6. The தாதுமாதளை tree. (சது.) 7. Red ochre, காவிக்கல். 8. The root of a word in Sanscrit, சொற்பகுதி. 9. Any of the seven metals, பொன்னாதியேழு. (See உலோகம்.) 1. Mineral, a fossil, நிரசவஸ்து. 11. Semen, சுக்கிலம். 12. The tenth year of the Hindu cycle, ஓர்வருஷம். 13. Arsenic in its natu ral state, in distinction from that which is prepared. See சரக்கு.--''Note.'' The seven constituents of the body, or சத்ததாது, are: 1. இரசம், serum. 2. இரததம், blood. 3. சுக்கி லம், semen. 2. மூளை. brains, marrow. 5. தசை, flesh. 6. எலும்பு, bone. 7. தோல், skin.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhātu. 1. Mineral, fossil; any natural product from a mine; கனிகளில் உண்டாகும் இயற்கைப்பொருள். 2. Metals;பொன்முதலிய உலோகங்கள். (பிங்.) 3. Red ochre;காவிக்கல். (சூடா.) 4. The five elements ofNature. See பூதம். (சூடா.) 5. The threehumours of the body, viz.vātam, pittam, cilēṭ-ṭumam; வாத பித்த சிலேட்டுமங்கள். 6. Pulse;நாடி. பிணிகளைத் தாதுக்களா லறியலாம் (குமரே.சத. 38). 7. Constituent parts of the body. Seeசத்ததாது. (பிங்.) 8. Semen, sperm; சுக்கிலம்.(பிங்.) சுரத தாது வீழ்ந்த துரோண கும்பந் தன்னில்(பாரத. வாரணா. 32). 9. Powder, dust; நீறு.(மதுரைக். 399, உரை.) 10. Pollen; பூந்தாது.தாதுண் வண்டினம் (மணி. 4, 20). 11. Petal offlowers; பூவினிதழ். (பிங்.) 12. Blossom; மலர்.கள்வாய தாதொடு வண்டிமிரும் (பு. வெ. 12, இருபாற். 3). 13. Honey; தேன். தாதுசேர் கழுநீர்(சிலப். 13, 119). 14. (Gram.) Verbal root;வினைப்பகுதி. தாதின்வழு (அஷ்டப். திருவேங்கடத்தந். காப்பு.). 15. The 10th year of the Jupitercycle; ஆண்டு அறுபதனுள் பத்தாவது.
  • n. < தாதன். Slavery, servitude;அடிமை. வாணியத் தாதற்குத் தாதானதுந் தொண்டைமண்டலமே (தொண்டை. சத. 45).
  • n. cf. dāḍima. See தாதுமாதுளை.(மூ. அ.)
  • n. cf. தாத்து. Hearing; கேள்வி.இங்கே தாதுமில்லே பிராதுமில்லை. Madr.