தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் ; குற்றி ; தூண் ; நிலைபேறு ; மலை ; பற்றுக்கோடு ; செவ்வழி யாழ்த்திறவகை ; தாவரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலை. (பிங்.) 3. Mountain;
  • குற்றி. தருமநீடுருவத் தாணுதாணுவே யெனவிருந்தான் (திருவாலவா. 28, 43). 5. Post;
  • சிவன். (பிங்.) 6. Siva;
  • பற்றுக்கோடு. 7, Prop, support;
  • செவ்வழியாழ்த்திறவகை. (பிங்.) 8. (Mus.) A Secondary melody-type of the cevvaḷi class;
  • தூண். (பிங்.) உயர்ந்தோர்க்குத் தாணுமன் (பு. வெ. 4, 20). 4. Pillar;
  • நிலைபேறு. (சூடா.) 1. Firmness, stability;
  • தாவரம். தாணுவோ டூர்வவெல்லாம் (கம்பரா. மிதி. 117) 2. Category of the immoveables;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஸ்தாணு, s. firm or fixed state, stability, உறுதி; 2. shelter, புகலிடம்; 3. a post, a pillar, தூண்; 4. a mountain, a hill, மலை; 5. Siva, சிவன். இருக்கிறதற்கிது நல்ல தாணு, this is a good place for shelter or resort. எனக்கொரு தாணுவுமில்லை, I have no protection. தாணைவாயிருக்கிறவன், a patron, a protector.

வின்சுலோ
  • [tāṇu ] --ஸ்தாணு, ''s.'' Firm or fixed state, stability, நிலைபேறு. 2. Shelter, புக லிடம். ''(c.)'' 3. Post, pillar, தூண். 4. Mountain. hill, மலை. 5. Siva, சிவன். இருக்கிறதற்குநல்லதாணு. This is good place for shelter, resort, &c. தாணுவாயிருக்கிறவன். A patron, protector.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sthāṇu. 1. Firmness,stability; நிலைபேறு. (சூடா.) 2. Category of theimmoveables; தாவரம். தாணுவோ டூர்வவெல்லாம்(கம்பரா. மிதி. 117). 3. Mountain; மலை. (பிங்.)4. Pillar; தூண். (பிங்.) உயர்ந்தோர்க்குக் தாணுமன்(பு. வெ. 4, 20). 5. Post; குற்றி. தருமநீ டுருவத் தாணுதாணுவே யெனவிருந்தான் (திருவாலவா. 28, 43). 6.Šiva; சிவன். (பிங்.) 7. Prop, support; பற்றுக்கோடு. 8. (Mus.) A secondary melody-type ofthe cevvaḻi class; செவ்வழியாழ்த்திறவகை. (பிங்.)