தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலை ; தளிர் ; மயிற்றோகை ; பீலிக்குடை ; தழையாலான மகளிர் உடை ; ஒரு மாலைவகை ; காண்க : பச்சிலை ; தழைகை ; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத சீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலை. (திவா.) 3. [M. taḻa.] Leaf, foliage;
  • மயிற்றோகை. தழைகோலி நின்றாலும் (திருக்கோ. 347). 5. Peacock's tail;
  • பீலிக்குடை. (பிங்.) தழைகளுந் தொங்கலுந் ததும்பி (திவ்.பெரியாழ். 3, 4, 1). 6. Fan; bunch of peacock's feathers, used as an ornamental fan;
  • தழைகை. தாளிணைக டழைகொண்ட வன்பிª¢னாடு (அரிச். பு. பாயி. 3). 1. Sprouting;
  • இலையோடுகூடிய சிறுகொம்பு. 4. Spray, twig, bough with leaves;
  • சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேர்க்கப்படாத சீட்டு. 10. Cards other than honours in a game of cards;
  • தளிர். 2. Sprout, shoot;
  • See பச்சிலை. 9. Gamboge.
  • ஒருவகை மாலை. தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும் (சீவக. 1338). 8. A kind of garland;
  • . 7. See தழையுடை. (புறநா. 116, உரை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. leaf, foliage, இலை; 2. green twigs with their leaves upon them, தளிர்; 3. a fan or bunch of peacock's feathers used as an ornament. ஆடு தழை தின்பதுபோலே, like a goat cropping leaves, said of persons who do many things and all superficially.
  • II. v. i. sprout, grow full of boughs, thrive, flourish (as plants, not persons) தளிர். தழைந்திருக்கிற மரம், a tree with shady branches. தழைகை, v. n. sprouting, shooting, தழைவு. தழைவு, v. n. sprouting; 2. luxuriance of growth; 3. increase, abundance, பெருக்கம்; 4. plumpness.
  • VI. v. i. grow luxuriantly thrive, செழி; 2. flourish, prosper (as persons) வாழு. தழைத்த குடி, a prosperous family. தழைப்பு, v. n. flourish, thriving. தழைத்து வாழ, to live prosperously with wealth and children and relations.

வின்சுலோ
  • [tẕai] ''s.'' Sprout, shoot, தளிர். 2. Leaf, foliage, verdure, இலை. 3. Spray, twig. bough with leaves, இலைச்செறிவு. ''(c.)'' 4. Pea cock's tail, மயிற்றோகை. 5. A fan, or bunch of peacock's feathers, used as an orna ment, பீலிக்குடை. ஆடுதழைதின்பதுபோலே. Like a goat crop ping leaves; ''i. e.'' doing many things and all superficially.
  • [tẕai] கிறது, ந்தது, யும், தழைய, ''v. n.'' To sprout, shoot forth, to vegetate, தளிர்க்க. 2. To grow full of boughs; to thrive, as vegetables, தழைக்க. 3. To recover verdure, as drooping plants, &c., வாடியதுதுளிர்க்க.- ''Note.'' This word is not used like தழை க்க, with reference to persons.
  • [tẕai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To flourish, to thrive, to grow luxu riantly, as vegetables, செழிக்க. 2. To flourish, as a family, people, state, &c., to multiply, to increase and prove lasting, வாழ. ஆல்போல்தழைத்துஅறுகுபோல்வேரோடிமூங்கில் போல்சுற்றமுசியாமல்வாழ்ந்திருப்பீர். May you prosper spreading like the banyan, taking root like the Agrostis linearis grass, and, surrounded by supports like the bambu, never fade away; ''a form of benediction to a young married couple.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தழை-. 1. Sprouting;தழைகை. தாளிணைக டழைகொண்ட வன்பினொடு(அரிச். பு. பாயி. 3). 2. Sprout, shoot; தளிர். 3.[M. taḻa.] Leaf, foliage; இலை. (திவா.) 4.Spray, twig, bough with leaves; இலையோடுகூடியசிறுகொம்பு. 5. Peacock's tail; மயிற்றோகை.தழைகோலி நின்றாலும் (திருக்கோ. 347). 6. Fan;bunch of peacock's feathers, used as an ornamental fan; பீலிக்குடை. (பிங்.) தழைகளுந் தொங்கலுந் ததும்பி (திவ். பெரியாழ். 3, 4, 1). 7. See தழையுடை. (புறநா. 116, உரை.) 8. A kind of garland;ஒருவகை மாலை. தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும் (சீவக. 1338). 9. Gamboge. See பச்சிலை.10. Cards other than honours in a game ofcards; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேர்க்கப்படாத சீட்டு.