தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டு ; கயிறு ; விலங்கு ; பாசம் ; மலர் முறுக்கு ; சிறை ; தொடர்பு ; காற்சிலம்பு ; ஆண்கள் மயிர் ; வயல் ; வரம்பு ; யாப்புறுப்பு எட்டனுள் ஒன்று .
    (வி) தகை ; தடைசெய் ; பிணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கயிறு. நிறைத்தளைவிட் டீர்த்தலின் (திருவிளை. மாபாத. 6). 2. Cord, rope;
  • கட்டு. அற்புத்தளையு மவிழ்ந்தன (நாலடி,12). 1. Tie, fastening, bandage;
  • ஆண்மக்கண்மயிர். (பிங்.) 9. Hair of the males;
  • அறுவகைச் செய்யுளுறுப்புக்களில் ஒரு சீரின் ஈற்றசைக்கும் அதனையடுத்துவருஞ் சீரின் முதலசைக்கும் உள்ள தொடர்பு. (காரிகை, உறுப். 5, உரை.) 12. (Pros.) Metrical connection of the last syllable fo any foot with the fist of the succeeding, one of the six ceyyuḷ-uṟuppu, divided into four classes. viz., āciriya-t-taḷai, veṇṭaḷai, kali-t-taḷai, vaci-t-taḷai;
  • உடையாருத்தியோகம். (J.) 11. Office of Uṭaiyār in certain districts;
  • வயல். களைகட்டவர் தளைவிட்டெறி குவளைத்தொகை (கம்பரா. கங்கை. 5). 10. Paddy field, as divided into plots;
  • விலங்கு. தாடளை யிடுமின் (திருவாச. 3, 143). 3. Fetters, shackles;
  • காற்சிலம்பு. (பிங்.) 8. Anklet;
  • தொடர்பு. (சூடா.) 7. Relationship, friendship, bond of union;
  • சிறை. 6. Imprisonment;
  • மலர் முறுக்கு. புதுவது தளைவிட்ட தாதுசூழ் தாமரை (கலித். 69). 5. Closed condition, as of an unblown flower;
  • பாசம். 4. Bondage of the soul, causing birth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tie, fastening, bandage, கட்டு; 2. fetters, chains for the feet, கால் விலங்கு; 3. a noose or running knot, கண்ணி; 4. a partition in rice-fields, வயலின் பிரிவு; 5. the metrical connection of the last syllable of a foot with the succeeding one; 6. men's locks of hair; 7. ankle-rings, காற்கொலுசு; 8. the office of an Odaiyar (உடை யார்); 9. enclosure of an unblown flower, மலர்க்கட்டு. தளை கழற்றிவிட, to unloose or take off fetters. தளைதட்ட, to be wanting in metrical connection. தளைநார், a foot-brace for a tree climber. தளைபூட்ட, --போட, to fetter, to shackle. தளையவிழ, to blossom as a flower; 2. to be unbound, to be unrestrained, கட்டவிழ. தளைவார், a throng of leather to hamper the feet of an animal when grazing. தளைவைக்க, to invest one with the office of an உடையார்.
  • II. v. i. be fettered, tied or bound; v. t. fasten, tie, bind, மாட்டு. தளைந்துவிட, to tie the forefeet of an animal and let it go to graze.
  • VI. v. t. tie, entangle, fetter, கட்டு; 2. confine, restrain, அடக்கு.

வின்சுலோ
  • [tḷai] ''s.'' A tie, fastening, bandage, கட்டு. 2. Fetter, shackles for the legs, கால்விலங்கு. ''(c.)'' 3. Enclosure of an unblown flower, மல ர்க்கட்டு. 4. Imprisonment, immuring, சிறை. 5. The காற்கொலுசு, ankle-rings. 6. A foot trinket, காற்சிலம்பு. 7. Men's locks of hair, ஆண்மயிர். 8. ''[prov.]'' A partition, division, in rice fields. வயலின்பிரிவு. ''(c.)'' 9. A tie, a bond, ''(met.)'' a bond of union, பந்துகட்டு. 1. ''[prov.]'' The office of an உடையார். 11. The metrical connection of the last syllable of any foot with the first of the succeeding, one of the six செய்யுளுறுப்பு, வரு ஞ்சீரின் முதலசை யொன்றியுமொன்றாமலுங்கூடிநிற்பது. --''Note.'' The poetic தளை are of seven kinds embracing four classes. I. ஆசிரி யத்தளை. connexion of ஆசிரியம் verse of two species. 1. நேரொன்றாசிரீயத்தளை, combination of simple syllables in the ஆசிரியம் con nexion, or of one simple ஆசிரியம் foot, with another. 2. நிரையொன்றாசிரியத்தளை, combina tion of compound syllables, or the con nexion of one compound ஆசிரியம் foot, with another. II. வெண்டளை, connexion of வெண் பா verse, also of two species. 1. வெண்சீர் வெண்டளை, combination of genuine வெண்சீர் foot, or of one வெண்சீர் foot with another foot, biginning with a simple syllable 2. இயற்சீர்வெண்டளை, combination of simple, or ஆசிரியம் feet, or connexion of an ஆசிரியம் foot ending with a compound syllable with another foot beginning with a simple syllable, or vice versa. III. கலித்தளை, con nexion of the கலிப்பா verse, being single, ''viz.''; that of வெண்சீர் foot ending with a syllable with another foot beginning with a compound syllable. IV. வஞ்சித்தளை, con nexion of வஞ்சி verse of two species. 1. ஒன்றியவஞ்சித்தளை, combination of compound syllables, or of one வஞ்சி foot with another foot beginning with a compound syllable. 2. ஒன்றாதவஞ்சித்தளை, combination of a compound with a simple syllable, or of one வஞ்சி foot with another beginning with a simple syllable. For syllables and feet and their different species, see அசை and சீர். வளைபட்டகைமாதொடு மக்களெனுந் தளைபட்டழியத் தகுமோதகுமோ. Should I perish by being bound with my bracelet-adorned wife and children.
  • [tḷai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To be fettered, tied, bound, கட்டுண்ண. 2. ''v. a.'' To fasten, tie, bind, chain, மாட்ட. ''(c.)''
  • [tḷai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [prov.]'' To tie, to bind, to fasten, to entangle, கட்ட. 2. To confine, to restrain, to limit, அடக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தளை-. [K. taḷe, M. taḷa.]1. Tie, fastening, bandage; கட்டு. அற்புத்தளையுமவிழ்ந்தன (நாலடி, 12). 2. Cord, rope; கயிறு.நிறைத்தளைவிட் டீர்த்தலின் (திருவிளை. மாபாத. 6). 3.Fetters, shackles; விலங்கு. தாடளை யிடுமின் (திருவாச. 3, 143). 4. Bondage of the soul,
    -- 1804 --
    causing birth; பாசம். 5. Closed condition, asof an unblown flower; மலர் முறுக்கு. புதுவதுதளைவிட்ட தாதுசூழ் தாமரை (கலித். 69). 6. Imprisonment; சிறை. 7. Relationship, friendship,bond of union; தொடர்பு. (சூடா.) 8. Anklet;காற்சிலம்பு. (பிங்.) 9. Hair of the males; ஆண்மக்கண்மயிர். (பிங்.) 10. Paddy field, as dividedinto plots; வயல். களைகட்டவர் தளைவிட்டெறிகுவளைத்தொகை (கம்பரா. கங்கை. 5). 11. Officeof Uṭaiyār in certain districts; உடையாருத்தியோகம். (J.) 12. (Pros.) Metrical connectionof the last syllable of any foot with the first ofthe succeeding, one of the six ceyyuḷ-uṟuppu,divided into four classes, viz.āciriya-t-taḷai,veṇṭaḷai, kali-t-taḷai, vañci-t-taḷai; அறுவகைச்செய்யுளுறுப்புக்களில் ஒரு சீரின் ஈற்றசைக்கும் அதனையடுத்துவருஞ் சீரின் முதலசைக்கும் உள்ள தொடர்பு.(காரிகை, உறுப். 5, உரை.)