தமிழ் - தமிழ் அகரமுதலி
  சிரம் ; முதல் ; சிறந்தது ; வானம் ; இடம் ; உயர்ந்தோன் ; தலைவன் ; உச்சி ; நுனி ; முடிவு ; ஒப்பு ; ஆள் ; தலைமயிர் ; ஏழாம் வேற்றுமை உருபு ; ஓர் இடைச்சொல் ; மேலே ; தபால் கடிதத்தில் ஒட்டும் முத்திரைத்தலை ; தலையோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • முடிவு. தலைவைத்த காப்பு விஞ்சை (சீவக. 1881). 8. Finish, close;
 • ஒப்பு. (பு. வெ. 4, 12, உரை.) 9. Resemblance;
 • ஆகாசம். (பிங்.) தலையின் மின் கறுத்ததென்ன (அரிச். பு. சூழ்வினை. 5). 10. Sky, ethereal region;
 • ஆள். தலைவரி. 11. Unit, person, hand;
 • தபாற்கடிதத்தின் ஒட்டும் முத்திரைத்தலை. Mod. 12. Postage stamp, as bearing the figure of a king's head;
 • சிரக்கபாலம். தலைக்கலத் திரந்தது (கம்பரா. சடாயுவு. 195). 13. Skull;
 • தலைமயிர். தலையவிழ்ந்து கிடக்கிறது. 14. Hair;
 • ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. முன்னிடை கடைதலை (தொல். சொல். 77). மேலே. அதன்றலை ... சான்றோர் பலர்யான் வாழு ழூரே (புறநா. 191). வினைகட்கு முன் வரும் ஒர் இடைச்சொல். (பி. வி. 45.) 15. (Gram.) Word used as a locative case-suffix; In addition to; Prefix with the force of preposition;
 • சிரம். (சூடா.) 1. Head;
 • சிறந்தது. தலையே தவமுயன்று வாழ்தல் (நாலடி, 365). 2. That which is first, best highest;
 • உயர்ந்தோன். தலையெலாஞ் சொற்பழி யஞ்சிவிடும் (நாலடி, 297). 3. Person of highest quality and rank;
 • தலைவன். தலையிழந்த பெண்டாட்டி (ஏலாதி, 78). 4. Leader; husband;
 • முதல். (பிங்.) உயர்ந்தோர் தலையா விழிந்தோ ரீறா (பெருங். வத்தவ. 2, 51). 5. Origin, beginning, source, commencement;
 • உச்சி. தலையு மாகமுந்தாளுந் தழீஇ (கம்பரா. ஆற்றுப்.6). 6. Top, apex;
 • நுனி. தலைவிரல் தாக்க (கல்லா. 8). 7. End, tip;
 • இடம் நனந்தலை நல்லெயில் (புறநா. 15). Place;

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • tale தலெ head; priority; top

வின்சுலோ
 • [tlai] ''s.'' Head, சிரசு. 2. Chief, princi pal. தலைமை. 3. ''(fig.)'' A leader, தலைவன். 4. Origin, beginning, source, commencement, ஆதி. 5. Priority, precedence, superiority, பெருமை. 6. Point, top, end, apex, summit, நுனி. ''(c.)'' 7. Place, location, position, site, இடம். 8. The air, the etherial regions, ஆகாயம். 9. Space, surface, expanse, விரிவு. 1. Prong of a trident fork, சூலமுதலிய வற்றின்றலை. 11. A form of the ablative of place, ஏழனுருபு. தலைக்கொருபணங்கொடு. Give each one a fanam. தலைநில்லாப்பருவம். The time when the head cannot support itself; ''i. e.'' infancy. தலைக்குத்தலைபெரியதனம். Every one is master. தலைமறைவாயிருக்கிறான். He hides his head- is concealed. தலையிலைகடை. Beginning, middle and end. தலையாலேநடக்கிறான். He acts proudly, in solently, wickedly, &c. அவனுக்குத்தலைப்பத்தா. Has he ten heads? Is he equal to ten men? பெருந்தலைகளெல்லாமொன்றாய்கூடின. The great heads, big-wigs, are all collected together. தலையாலேமலைபிளப்பான். He would cleave a mountain with his head.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • [T. M. tala, K. tale.] n. 1.Head; சிரம். (சூடா.) 2. That which is first, best,highest; சிறந்தது. தலையே தவமுயன்று வாழ்தல்(நாலடி, 365). 3. Person of highest quality andrank; உயர்ந்தோன். தலையெலாஞ் சொற்பழி யஞ்சிவிடும் (நாலடி, 297). 4. Leader; husband; தலைவன். தலையிழந்த பெண்டாட்டி (ஏலாதி, 78). 5. Origin, beginning, source, commencement; முதல்.(பிங்.) உயர்ந்தோர் தலையா விழிந்தோ ரீறா (பெருங்.வத்தவ. 2, 51). 6. Top, apex; உச்சி. தலையு மாகமுந்தாளுந் தழீஇ (கம்பரா. ஆற்றுப். 6). 7. End, tip; நுனி.தலைவிரல் தாக்க (கல்லா. 8). 8. Finish, close;முடிவு. தலைவைத்த காப்பு விஞ்சை (சீவக. 1881). 9.Resemblance; ஒப்பு. (பு. வெ. 4, 12, உரை.) 10.Sky, ethereal region; ஆகாசம். (பிங்.) தலையின்மின் கறுத்ததென்ன (அரிச். பு. சூழ்வினை. 5). 11.Unit, person, hand; ஆள். தலைவரி. 12. Postagestamp, as bearing the figure of a king's head;தபாற்கடிதத்தில் ஒட்டும் முத்திரைத்தலை. Mod. 13.Skull; சிரக்கபாலம். தலைக்கலத் திரந்தது (கம்பரா.சடாயுவு. 195). 14. Hair; தலைமயிர். தலையவிழ்ந்துகிடக்கிறது. 15. (Gram.) Word used as a locative
  -- 1775 --
  case-suffix; ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. முன்னிடை கடைதலை (தொல். சொல். 77).--adv. Inaddition to; மேலே. அதன்றலை . . . சான்றோர்பலர்யான் வாழு மூரே (புறநா. 191).--part. Prefixwith the force of preposition; வினைகட்கு முன்வரும் ஓர் இடைச்சொல். (பி. வி. 45.)
 • n. prob. sthala. Place; இடம்.நனந்தலை நல்லெயில் (புறநா. 15).