தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேசுதல் ; அறிவித்தல் ; திருப்பிக் கூறுதல் ; கட்டளையிடுதல் ; புத்திகூறல் ; புகழ்தல் ; களைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்தல். தோளையே சொல்லுகேனோ (கம்பரா. மாரீச. 73). 6. To praise;
  • களைதல். புறவி னல்லல் சொல்லிய . . . துலாஅம் புக்கோன் (புறநா. 39). To remove, alleviate, put away;
  • அறிவித்தல். யாருக்கென் சொல்லுகே னன்னை மீர்காள் (திவ். திருவாய். 9, 9, 7). 5. To inform;
  • புத்திகூறல். 4. To advise;
  • கட்டளையிடுதல். மூத்தோர் சொல்லியதை மீறாதே. 3. [M. colluka.] To dictate, command;
  • திருப்பிக்கூறுதல். சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை. 2. To recite, repeat, relate, quote;
  • பேசுதல். சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல் (குறள், 664). 1. To say, speak, tell, mention, utter, express;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [K. sol,M. colluka.] 1. To say, speak, tell, mention,utter, express; பேசுதல். சொல்லுதல் யார்க்குமெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்(குறள், 664). 2. To recite, repeat, relate, quote;திருப்பிக்கூறுதல். சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை. 3. [M. colluka.] To dictate, command; கட்டளையிடுதல். மூத்தோர் சொல்லியதைமீறாதே. 4. To advise; புத்திகூறல். 5. To inform; அறிவித்தல். யாருக்கென் சொல்லுகே னன்னைமீர்காள் (திவ். திருவாய். 9, 9, 7). 6. To praise;புகழ்தல். தோளையே சொல்லுகேனோ (கம்பரா.மாரீச. 73).
  • v. tr. perh. kṣur. cf.சொலி-. To remove, alleviate, put away;களைதல். புறவி னல்லல் சொல்லிய . . . துலாஅம்புக்கோன் (புறநா. 39).