தமிழ் - தமிழ் அகரமுதலி
    குட்டு ; குற்றம் ; குற்றங்குறை வெளிப்படக்கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு ; சுன்னம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துண்டு. தேங்காய்ச் சொட்டு. (J.) 2. Small piece, slice;
  • சுன்னம். Loc. 4. Cipher;
  • குற்றத்தை வெளிப்படக்கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு. அவன் சொட்டுப்போட்டுப் பேசுகிறான். 3. Disparaging remark conveyed through a hint, insinuation;
  • குற்றங்குறை. 2. [Tu. coṭṭu.] Defect, blemish, stigma;
  • குட்டி. 1. [M. coṭṭu.] Cuff, knock on the head;
  • துளி. ஒரு சொட்டு நெய். 1. Drop;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tap or knock on the head with the hand, குட்டு; 2. a drop, துளி; 3. defect, blemish, சொட்டை; 4. a slice or small piece, துண்டு. சொட்டுச் சொட்டாயிறங்க, to fall in drops, சொட்டுச் சொட்டென்று ஒழுக. சொட்டுச் சொல், a disparaging word; a stigma, a jest; சொட்டைச் சொல். சொட்டுத் தண்டம், a contribution made reluctantly, through the influence of others. சொட்டு மூத்திரம், strangury in children. கள்ளிச் சொட்டுப்போலே, (said of milk) as thick as that of the prickly pear.
  • III. v. t. strike on the head with the ends of the fingers; 2. cheat, 3. inveigle away property, by little and little, அபகரி; 4. snatch away, பறித்துப்போ.

வின்சுலோ
  • [coṭṭu] ''s.'' A tap or knock with the end of the fingers on one's head, or with the beak of a crow, குட்டு. ''(Telugu usage.)'' 2. A drop, துளி. 3. ''[prov.]'' A small piece, slice, துண்டு. 4. (''also'' சொட்டை.) Defect, blemish, stigma, &c., குற்றம். ''(c.)'' கள்ளிச்சொட்டுப்போலே. Milk as thick as that of the prickly pear. சொட்டுச்சொட்டாயிறங்க. To fall in drops. என்வேலைக்கொருசொட்டா. Can you point out a defect in my work?
  • [coṭṭu] கிறது, சொட்டினது, ம், சொட்ட, ''v. n. [prov.]'' To strike or peck, as a crow on a child's head, &c, in order to snatch some thing away from it, காகஞ்சொ ட்ட. 2. To drop as rain, மழைதுளிக்க. கன்றுசொட்டிப்போட்டது. The calf has sucked all the cow's milk.
  • [coṭṭu] கிறேன், சொட்டினேன், வேன், சொட்ட, ''v. a. [prov.]'' To strike on the head with the ends of the fingers, குட்ட. 2. To cheat, circumvent in trade, வஞ்சிக்க. 3. To inveigle away property, by little and little, அபகரிக்க. 4. To beat the under of a goat while milking, to make the milk flow, நொய்ப்புக்கொட்ட. 5. To snatch away, பறித்துக்கொண்டுபோக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொட்டு-. [K. toṭṭu.]1. Drop; துளி. ஒரு சொட்டு நெய். 2. Smallpiece, slice; துண்டு. தேங்காய்ச் சொட்டு. (J.)
  • சொட்டுச்சொட்டெனல் coṭṭu-c-coṭ-ṭeṉaln. < சொட்டு +. Expr. signifying dripping, drizzling; துளித்தற்குறிப்பு. சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத் துளிக்க (திவ். பெரியாழ். 1, 9, 1).
  • n. < சொட்டு-. [T. K.soḍḍu.] 1. [M. coṭṭu.] Cuff, knock on thehead; குட்டு. 2. [Tu. coṭṭu.] Defect, blemish,stigma; குற்றங்குறை. 3. Disparaging remarkconveyed through a hint, insinuation; குற்றத்தைவெளிப்படக்கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு. அவன்சொட்டுப்போட்டுப் பேசுகிறான். 4. Cipher; சுன்னம். Loc.