தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுகூடுதல் ; இடைவிடாது நினைத்தல் ; கலத்தல் ; சம்பந்தப்படுதல் ; நட்பாதல் ; இயைதல் ; உரித்தாதல் ; சேகரிக்கப்படுதல் ; திரளுதல் ; செறிதல் ; கிடத்தல் ; உளதாதல் ; செல்லுதல் ; கூடுதல் ; பொருந்துதல் ; புணர்தல் ; பெறுதல் ; சென்றடைதல் ; ஒப்பாதல் ; நேசித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுத்தல். மன்னரைச் சேர்ந்தொழுகல். 16. To belong to; to be attached to, dependent on, connected with;
  • பெறுதல். உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின் (நாலடி , 40). 17. To obtain, acquire;
  • சென்றடைதல். நும்மரண் சேர்மின் (புறநா. 9, 5). 18. To reach, gain, arrive at;
  • இடைவிடாது தியானித்தல். மாண்டிசேர்ந்தார் (குறள், 3, உரை). 19. To unite in meditation;
  • ஓப்பாதல். கனஞ்சேர் குழலி (மருதூ. 25). 20. To resemble, equal, correspond with;
  • புணர்தல். அல்லில் வந்ததுண்டு சேர்ந்ததில்லை (தனிப்பா. i, 151, 58). 15. To copulate;
  • பொருத்துதல். மழகளிறு கந்துசேர்பு (புறநா. 22, 9). 14. To be in contact with;
  • கூடுதல். தீயினஞ் சேரக்கெடும் (நாலடி, 179). 13. To join, associate with;
  • செல்லுதல். எண் சேர்ந்த நெஞ்சத்து (குறள், 910). --tr. 12. To go, advance;
  • உளதாதல். தள்ளாவிளையுளுந் தக்காருந் தாழ்விலாச செல்வருஞ் சேர்வது நாடு (குறள், 731). 11. To exist; co-exit;
  • கிடத்தல். மிக்கோளுடற் கொடுத்துச் சேர்தல் வழி (ஆகாரக். 31). 10. To lie dowm;
  • செறிதல். அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை (குறள், 243). 9. To be full, replete;
  • தீரளுதல். மால்வரை யொழுகிய வாழை . . . என . . . சேர்ந்து (சிறுபாண். 20, உரை). 8. To be well-rounded, plump;
  • சேகரிக்கப்படுதல். நெய்க்கு வேண்டிய வெண்ணெய் சேர்ந்து விட்டது. 7. To be collected, to be become aggregated;
  • உரித்தாதல். இந்த நிலம் அலனுக்குச் சேர்ந்தது. 6. To be incident, co-existent; to appertain, as a quality;
  • இயைதல். 5. To fit, suit; to be adapted to, as the tenon to the mortise;
  • நட்பாதல். அவனோடு சேர்ந்துகொண்டான். 4. To be in close friendship or union;
  • கலத்தல். நீரும் பாலுஞ் சேரும். 2. To become mixed, blended;
  • சம்பந்தப்படுதல். சங்கத்தில் அவன் சேர்ந்தவன். 3. To have connection, as with a society or an institution;
  • சேதித்தல். வாழ்மரஞ் சேர்ந்தவை (நீலகேசி, 369). To cut;
  • ஒன்றுகூடுதல். செம்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளுஞ் சேர்ந்துமின்ன (கம்பரா. பூக்கொய். 5). 1. To become united, incorporated; to join together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [T. cēru, K. Tu. sēru,M. cēruka.] intr. 1. To become united,incorporated; to join together; ஒன்றுகூடுதல்.செம்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளுஞ் சேர்ந்துமின்ன (கம்பரா. பூக்கொய். 5). 2. To becomemixed, blended; கலத்தல். நீரும் பாலுஞ் சேரும்.3. To have connection, as with a society oran institution; சம்பந்தப்படுதல். சங்கத்தில் அவன்சேர்ந்தவன். 4. To be in close friendship orunion; நட்பாதல். அவனோடு சேர்ந்துகொண்டான்.5. To fit, suit; to be adapted to, as the tenonto the mortise; இயைதல். 6. To be incident,co-existent; to appertain, as a quality; உரித்தாதல். இந்த நிலம் அவனுக்குச் சேர்ந்தது. 7. Tobe collected, to become aggregated; சேகரிக்கப்படுதல். நெய்க்கு வேண்டிய வெண்ணெய் சேர்ந்துவிட்டது. 8. To be well-rounded, plump; திரளுதல். மால்வரை யொழுகிய வாழை . . . என . . .சேர்ந்து (சிறுபாண். 20, உரை). 9. To be full,replete; செறிதல். அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை(குறள், 243). 10. To lie down; கிடத்தல். மீக்கோளுடற் கொடுத்துச் சேர்தல் வழி (ஆசாரக். 31). 11. Toexist, co-exist; உளதாதல். தள்ளாவிளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு (குறள்,731). 12. To go, advance; செல்லுதல். எண்சேர்ந்த நெஞ்சத்து (குறள், 910).--tr. 1. To join,associate with; கூடுதல். தீயினஞ் சேரக்கெடும்(நாலடி, 179). 2. To be in contact with; பொருந்துதல். மழகளிறு கந்துசேர்பு (புறநா. 22, 9). 3. Tocopulate; புணர்தல். அல்லில் வந்ததுண்டு சேர்ந்ததில்லை (தனிப்பா. i, 151, 58). 4. To belong to;to be attached to, dependent on, connectedwith; அடுத்தல். மன்னரைச் சேர்ந்தொழுகல். 5.To obtain, acquire; பெறுதல். உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின் (நாலடி, 40). 6. Toreach, gain, arrive at; சென்றடைதல். நும்மரண்சேர்மின் (புறநா. 9, 5). 7. To unite in meditation; இடைவிடாது தியானித்தல். மாணடிசேர்ந்தார்(குறல், 3, உரை). 8. To resemble, equal, correspond with; ஒப்பாதல். கனஞ்சேர் குழலி (மருதூ.25).
  • 4 v. tr. To cut; சேதித்தல்.வாழ்மரஞ் சேர்ந்தவை (நீலகேசி, 369).